»   »  டெடிகேஷன் லெவல்.. வெர்சடைல் நடிப்பு.. ஹேப்பி பர்த்டே சீயான் விக்ரம்! #HBDVikram

டெடிகேஷன் லெவல்.. வெர்சடைல் நடிப்பு.. ஹேப்பி பர்த்டே சீயான் விக்ரம்! #HBDVikram

Posted By:
Subscribe to Oneindia Tamil
என்றும் இளமையுடன் சீயான் விக்ரம்- வீடியோ

சென்னை : தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, 7 முறை ஃபிலிம் ஃபேர் விருது என எத்தனை விருதுகள் பெற்றிருந்தாலும், இவரது நடிப்புக்கும், டெடிகேஷனுக்கும் அவையெல்லாம் சொற்பமே.

ஐம்பது வயதைக் கடந்தாலும் இன்றும் இளமை மாறாமல் இருந்து வரும் விக்ரம், இளம் ரசிகர்கள் மத்தியிலும் தனது அசராத உழைப்பினால் நல்ல நடிகர் எனும் பெயர் பெற்றிருப்பதுதான் அவரது வாழ்நாள் சாதனை.

நடிகராகத் திரையுலகில் நுழைந்து பின்னணிப் பாடகர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்களும் எடுத்த சீயான் விக்ரமுக்கு இன்று பிறந்தநாள்.

விக்ரம்

விக்ரம்

சினிமாவில் துணை நடிகராக படங்கள், சீரியல்களில் நடித்த நடிகர் வினோத் ராஜின் மகனான கென்னடி ஜான் விக்டர் @ விக்ரம், தனது தந்தையைக் கொண்டாடாத திரையுலகத்தில் தன்னைக் கொண்டாடவைக்கவேண்டும் எனும் லட்சியம் கொண்டிருந்தார். தந்தை வினோத் ராஜோ, தன்னைப் போலவே தன் மகனும் துன்பப்படக்கூடாது என நினைத்து கல்லூரியில் படிக்கவைத்தார். கல்லூரிக்கு பைக்கில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த விக்ரம் 23 அறுவைசிகிச்சையோடு சில ஆண்டுகள் முடங்கிப் போனார்.

தந்துவிட்டேன் என்னை

தந்துவிட்டேன் என்னை

விபத்திலிருந்து மீண்டதும் இயக்குநர் சி.வி.ஶ்ரீதர், இயக்கத்தில் 'என் காதல் கண்மணி' படத்தில் நடித்தார். அவரது இயக்கத்திலேயே தனது அடுத்த படமான 'தந்துவிட்டேன் என்னை' படத்தையும் நடித்து முடித்த விக்ரமுக்கு இன்னும் சில படங்களிலும் வாய்ப்பு கிடைத்தன. அதைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாள திரையுலகிற்குச் சென்ற விக்ரம் 'புதிய மன்னர்கள்' படத்திற்காக தமிழுக்கு வந்தார். அந்தப் படமும் பிரேக் கொடுக்காததால் மீண்டும் டோலிவுட், மல்லுவுட் திரையுலகிற்கே சென்றார்.

சமகாலத்தின் சிறந்த நடிகர்

சமகாலத்தின் சிறந்த நடிகர்

பாலா இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளிவந்த 'சேது' திரைப்படம் விக்ரமையும் பாலாவையும் ஒருசேர வெற்றிக்கொடி ஏந்த வைத்தது. இப்படத்தில் விக்ரமின் நடிப்பு தமிழ் ரசிகர்களால் உணர்வுப்பூர்வமாக உள்வாங்கப்பட்டது. கண்பார்வையற்றவராக 'காசி' படத்தில் மிரட்டிய விக்ரம், பார்வையாளர்களைக் கலங்க வைத்தார். இப்படியொரு நடிகன் சமகாலத்தில் வேறு யாரும் இல்லை எனச் சொல்லும் அளவுக்கு எந்த அளவுக்கும் இறங்கி நடிக்கத் தயாராக இருந்தார் விக்ரம்.

பிதாமகன்

பிதாமகன்

அதன்பிறகு ஃபேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்திழுக்கும் விதமாக சில ஆக்‌ஷன் படங்களும் அமைந்தன. 'சேது' படத்திற்கு கிடைத்த வரவேற்பால் பாலாவுக்கு நன்றிக்கடன் பட்டிருந்தார் விக்ரம். அடுத்து 'பிதாமகன்' படத்திலும் இந்தக் கூட்டணி இணைந்தது. இதில் சுடுகாட்டு வாசியாக, புத்தி பேதலித்தவராக நடிப்பில் மிரட்டியிருந்தார் விக்ரம். விக்ரம் என்றால் நடிப்பு, வித்தியாசம் எனும் பெயர் இண்டஸ்ட்ரியில் உருவானது.

அந்நியன்

அந்நியன்

'அந்நியன்' படத்தில் மல்ட்டிபிள் பெர்சனலாலிட்டி டிஸ் ஆர்டர் கொண்ட மனிதராக மூன்று முகங்கள் காட்டி சிலிர்க்க வைத்த விக்ரம் அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் நொடிக்கு நொடி அந்நியனாகவும் அம்பியாகவும் மாறி ஆடியது வெறித்தன கதகளி. 'தெய்வத் திருமகள்' படத்தில் கிருஷ்ணாவாக 'நிலா... நிலா' என குழந்தைமொழி பேசிய விக்ரம் 'ஐ' படத்தில் தாவியது ஆகாய ராட்டினம். 'ஐ' படத்தில் காட்சிகளுக்காக பாடி பில்டராக எடை கூட்டியும், நோயுற்றவராக உடல் மெலிந்தும் அசரவைத்தார் விக்ரம்.

டப்பிங் கலைஞர்

டப்பிங் கலைஞர்

நடிகராக மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும், பின்னணிப் பாடகராகவும் பணியாற்றி இருக்கிறார் விக்ரம். 'அமராவதி' படத்தில் அஜித்துக்கும், 'காதலன்' படத்தில் பிரபுதேவாவுக்கும், 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் அப்பாஸுக்கும் இன்னும் சில படங்களுக்கும் குரல் கொடுத்திருக்கிறார் விக்ரம். 'ஜெமினி', 'கந்தசாமி' உள்ளிட்ட சில படங்களில் பின்னணி பாடகராகவும் பணியாற்றி இருக்கிறார் விக்ரம். ரீல் லைஃப் இன்டர்நேஷனல் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 'டேவிட்' படத்தைத் தயாரித்ததும் இவர்தான்.

டெடிகேஷன் லெவல்

டெடிகேஷன் லெவல்

ஒவ்வொரு படத்திலும் விக்ரம் ஏற்கும் கதாபாத்திரங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்பதை உணர முடியும். ஆக்‌ஷன் ஹீரோக்களை தமிழ் சினிமா கொண்டாடிக் கொண்டிருந்த காலத்திலேயே சோதனை முயற்சிகளைக் கையாண்டு வெற்றி பெற்றவர் விக்ரம். முன்னணி நடிகர்கள் பலர் தங்களுக்குத் தோதான கேரக்டர்களை சுலபமாகச் செய்துகொண்டிருக்க, விக்ரம் வெரைட்டி காட்டி இன்றைய இளம் நடிகர்களுக்கும் டஃப் ஃபைட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

சீயான் விக்ரம்

சீயான் விக்ரம்

மற்ற நடிகர்களுக்கு ரசிக பலம் என்பது அவர்கள் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளின் வழியாக உருவானது. ஆனால், விக்ரமின் ரசிகர்கள் பலம் அவரது நடிப்புக்கான மரியாதை. மற்ற நடிகர்களின் ரசிகர்களும் விக்ரமின் மீது தனித்த அபிமானம் வைத்திருப்பது அவரது சமரசமில்லாத நடிப்புக் கலைக்காகத்தான். படத்துக்குத் தேவையென்றால் எந்த அளவுக்கும் தன்னை உருமாற்றிக் கொள்கிற ஒரு நடிகர் இனி தமிழ் சினிமாவில் உருவானால் அது விக்ரமின் பாணியைப் பின்தொடர்வாகத்தான் இருக்கும். ஹேப்பி பர்த்டே சீயான்!

English summary
Actor Vikram is well known for his versatile acting and Dedication. Chiyan Vikrams birthday is today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X