இன்று ரஜினிக்கு மட்டும் அல்ல இவருக்கும் தான் திருமண நாள்
சென்னை: நடிகர் விக்ரம் பிரபு இன்று தனது 7வது திருமண நாளை கொண்டாடினார்.
இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அப்பா போன்று ஹீரோவாகிவிட்டார். அவர் ஹீரோ அவதாரம் எடுக்கும் முன்பே அவருக்கு திருமணம் நடந்துவிட்டது.
அவருக்கும், லக்ஷ்மி உஜ்ஜைனிக்கும் கடந்த 2007ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது.

கருணாநிதி
எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை ஹாலில் நடந்த திருமணத்தில் திமுக தலைவர் கருணாநிதி தாலியை எடுத்துக் கொடுக்க அதை லக்ஷ்மியின் கழுத்தில் கட்டினார் விக்ரம் பிரபு.

ரஜினி, கமல்
விக்ரம் பிரபு, லக்ஷ்மி திருமண நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கும்கி
கடந்த 2012ம் ஆண்டு ரிலீஸான கும்கி படம் மூலம் ஹீரோவானார் விக்ரம் பிரபு. இதையடுத்து அவர் நடித்த இவன் வேற மாதிரி கடந்த ஆண்டு ரிலீஸானது. தற்போது அவர் அரிமாநம்பி, சிகரம் தொடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

திருமண நாள்
விக்ரம் பிரபு, லக்ஷ்மி தம்பதி இன்று தங்களது 7வது திருமண நாளை கொண்டாடினர். அவர்களுக்கு திரை உலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஜினிக்கும்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் இன்று தான் திருமண நாள் ஆகும். அவரும், லதாவும் இன்று தங்களது 34வது திருமண நாளை ரசிகர்களின் வாழ்த்துக்களோடு கொண்டாடினர்.

ஷங்கருக்கும்
இன்று ரஜினிகாந்த், விக்ரம் பிரபுவுக்கு மட்டும் அல்ல எங்கள் சினிமா ஆசிரியர் ஷங்கருக்கும் தான் திருமண நாள் ஆகும்.


Click it and Unblock the Notifications











