twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    20 வருடங்களை கடந்த காசி...டிரெண்டிங்கில் இடம்பிடித்த விக்ரம்

    |

    சென்னை : 2001 ம் ஆண்டு டைரக்டர் வினயன் எழுதி, இயக்கிய படம் காசி. பார்வையற்ற கிராமத்து பாடகராக விக்ரம் நடித்த இந்த படம் மலையாளத்தில் 1999 ம் ஆண்டு வெளி வந்த வசந்தியும் லட்சுமியும் பின்னே நிஜானும் என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

    அதர்வாவின் தள்ளிப்போகாதே ரிலீஸ் தேதி அறிவிப்பு !அதர்வாவின் தள்ளிப்போகாதே ரிலீஸ் தேதி அறிவிப்பு !

    தமிழில் இந்த படத்தில் காவேரியும், காவ்யா மாதவனும் நடித்திருந்தனர். காவ்யா மாதவன் தமிழில் அறிமுகமான படம் இது. சுனிதா ப்ரொடக்ஷன்ஸ் அரோமா மணி தயாரித்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

    20 ஆண்டுகள் நிறைவு

    20 ஆண்டுகள் நிறைவு

    2001 ம் ஆண்டு நவம்பர் 14 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பையும், பாசிடிவ் விமர்சனங்களையும் பெற்றது. இந்த படம் ரிலீசாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த படத்தில் பார்வையற்றவராக நடித்ததற்காக விக்ரமிற்கு சிறந்த நடிகருக்கான பல விருதுகள் கிடைத்தது.

    நடிக்க மறுத்த சிம்ரன்

    நடிக்க மறுத்த சிம்ரன்

    முதலில் இந்த படத்தில் விக்ரமின் தங்கை ரோலில் நடிக்க சிம்ரனிடம் தான் கேட்கப்பட்டது. ஆனால் சப்போர்டிங் ரோலில் நடிக்க மறுத்து விட்டதால் அவருக்கு பதில் காவியா மாதவன் நடிக்க வைக்கப்பட்டார். வெறும் 45 நாட்களில் இந்த படம் படமாக்கி முடிக்கப்பட்டது. இந்த படத்தில் அனைத்து கேரக்டர்களும் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றன.

    பயிற்சி எடுத்த விக்ரம்

    பயிற்சி எடுத்த விக்ரம்

    இந்த படத்தில் பார்வையற்றவராக நடிப்பதற்காக விக்ரம் சென்னையில் பீச் ஓரத்தில் உள்ள தனது வீட்டு மாடியில் சன்பாத் எடுத்து, சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டார். சூரியனை நீண்ட நேரம் பார்த்து, பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகு விக்ரம் நடித்துள்ளார். இதனால் தலைவலியால் நீண்ட நாட்கள் அவர் அவதிப்பட்டுள்ளார்.

    ஆண் குரலில் 5 பாடல்கள்

    ஆண் குரலில் 5 பாடல்கள்

    காசி படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இளையராஜா இசையமைத்த இந்த 6 பாடல்களையும் ஹரிஹரன் தான் பாடி இருந்தார். ரொக்கம் இருக்குற மக்கள் மனதில் என்ற பாடலின் மட்டுமே சுஜாதாவின் பெண் குரல் இடம்பெற்றிருக்கும். மற்ற அனைத்து பாடல்களும் ஆண் குரல் பாடுவதாகவே அமைக்கப்பட்டிருந்தன.

    கமர்ஷியல் வெற்றி

    கமர்ஷியல் வெற்றி

    கமர்ஷியல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியை பெற்ற இந்த படம், கிட்டதட்ட 75 நாட்கள் வரை தியேட்டரில் ஓடியது. இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின. வசூல் ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    டிரெண்டிங்கில் விக்ரம்

    டிரெண்டிங்கில் விக்ரம்

    காசி படம் ரிலீசாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து விக்ரமின் ரசிகர்கள் ட்விட்டரில் சியான் விக்ரம் என்ற ஹாஷாடேக்கை உருவாக்கி, அதை டிரெண்டிங் ஆக்கி உள்ளனர். ஏராளமானோர் விக்ரமின் அடுத்த படமான மகான் படத்தின் வெற்றிக்கும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

    English summary
    Vikram starred kaasi movie today completed 20 years of theatrical release. vikram gets lots of best actor awards for this movie. because of 20 years of kaasi, vikram fans create chiyan vikram hastag in twitter and make it to trending.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X