விலாசினியின் விசால மனசு விலாசினி. ஞாபகம் இருக்கோ?முன்பொரு காலத்தில் ராமராஜனுடன் ஜோடியாக அறிமுகமாகி, அந்தப் படம் போண்டியாகாமல் கோலிவுட்டிலிருந்து காணாமல்போய், அப்புறம் விபச்சார வழக்கில் சிக்கி, மீண்டும், மறு அவதாரம் போல கரகாட்டக்காரி படத்தைத் தயாரித்து, நடித்து,மறுபடியும் காணாமல் போனவர். (அப்பா... மூச்சு முட்டுது)இப்போது மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வர ஆயத்தமாகி வருகிறார் விலாசினி. கரகாட்டக்காரி படம் சரியாகஓடாவிட்டாலும் கூட, இளையராஜாவின் பாடல்களால், ஆடியோ கேசட்டுகள் படு அட்டகாசமாக விற்று அதன் மூலம்விலாசினிக்கு ஓரளவுக்கு லாபம் கிடைத்தது.இந்த லாபத்தை அப்படியே வீணாக்கி விடாமல் பத்திரமாக வைத்திருந்த விலாசினி, இப்போது அதை கொஞ்சம் கொஞ்சமாகரிலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளார். வட்டிக்கு விட ஆரம்பித்து விட்டாரா என்று கேட்டு விடாதீர்கள். மீண்டும் தைரியமாகதயாரிப்பாளராக அவதாரம் எடுக்கப் போகிறார் விலாசினி.அதாவது தான் நடிக்காமல் முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து புத்தம் புதுப் படங்களாக எடுத்து கலக்கப் போகிறாராம். அதற்கு பிள்ளையார் சுழியாக பட்ஜெட் நடிகரான சத்யராஜை புக் செய்துள்ளார். முற்றிலும் காமெடி சப்ஜெக்டான இதில்விலாசினியும் ஒரு குட்டிக் கேரக்டரில் (மட்டும்) நடிக்கவிருக்கிறாராம். ஆனால், ஹீரோயின் வேறாம்.ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். இதைக் கேள்விப்பட்டு விலாசினியை சந்தித்தோம்.என்ன, நடிப்பை விட்டு விட்டீர்களா? என்று கேட்டபோது, அப்படியெல்லாம் இல்லை. பல கேரக்டர்களில் (?) நான் நடித்துவிட்டேன். கதாநாயகியாக, குணச்சித்திர நடிகையாக, கவர்ச்சி நடிகையாக வலம் வந்து விட்டேன். கரகாட்டக்காரி மூலம் எனக்கு தயாரிப்பாளராகவும் நல்ல அனுபவம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சில படங்களைத் தயாரிக்கதிட்டமிட்டுள்ளேன். சத்யராஜ் சாரை அணுகி அவரது கால்ஷீட் கேட்டபோது உடனே கொடுத்து உதவினார் (நடிகைகளுக்குஉதவுவதில் அவர் ரொம்ப வேகமான ஆளாச்சே). அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.இப்போதைய ஹீரோயின்கள் அனைவரும் நல்ல திறமைசாலிகள். அவர்களை வைத்து படத் தயாரிப்பில் ஈடுபடுவதுசந்தோஷமான அனுபவமாக இருக்கும். அதேசமயம், நடிப்பையும் விட மாட்டேன். எனக்கு ஏத்த கேரக்டர் வந்தால் கண்டிப்பாகநடிப்பேன். நல்ல வில்லியாக (!!

By Staff

விலாசினி. ஞாபகம் இருக்கோ?

முன்பொரு காலத்தில் ராமராஜனுடன் ஜோடியாக அறிமுகமாகி, அந்தப் படம் போண்டியாகாமல் கோலிவுட்டிலிருந்து காணாமல்போய், அப்புறம் விபச்சார வழக்கில் சிக்கி, மீண்டும், மறு அவதாரம் போல கரகாட்டக்காரி படத்தைத் தயாரித்து, நடித்து,மறுபடியும் காணாமல் போனவர். (அப்பா... மூச்சு முட்டுது)

இப்போது மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வர ஆயத்தமாகி வருகிறார் விலாசினி. கரகாட்டக்காரி படம் சரியாகஓடாவிட்டாலும் கூட, இளையராஜாவின் பாடல்களால், ஆடியோ கேசட்டுகள் படு அட்டகாசமாக விற்று அதன் மூலம்விலாசினிக்கு ஓரளவுக்கு லாபம் கிடைத்தது.

இந்த லாபத்தை அப்படியே வீணாக்கி விடாமல் பத்திரமாக வைத்திருந்த விலாசினி, இப்போது அதை கொஞ்சம் கொஞ்சமாகரிலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளார். வட்டிக்கு விட ஆரம்பித்து விட்டாரா என்று கேட்டு விடாதீர்கள். மீண்டும் தைரியமாகதயாரிப்பாளராக அவதாரம் எடுக்கப் போகிறார் விலாசினி.

அதாவது தான் நடிக்காமல் முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து புத்தம் புதுப் படங்களாக எடுத்து கலக்கப் போகிறாராம்.


அதற்கு பிள்ளையார் சுழியாக பட்ஜெட் நடிகரான சத்யராஜை புக் செய்துள்ளார். முற்றிலும் காமெடி சப்ஜெக்டான இதில்விலாசினியும் ஒரு குட்டிக் கேரக்டரில் (மட்டும்) நடிக்கவிருக்கிறாராம். ஆனால், ஹீரோயின் வேறாம்.

ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். இதைக் கேள்விப்பட்டு விலாசினியை சந்தித்தோம்.

என்ன, நடிப்பை விட்டு விட்டீர்களா? என்று கேட்டபோது, அப்படியெல்லாம் இல்லை. பல கேரக்டர்களில் (?) நான் நடித்துவிட்டேன். கதாநாயகியாக, குணச்சித்திர நடிகையாக, கவர்ச்சி நடிகையாக வலம் வந்து விட்டேன்.

கரகாட்டக்காரி மூலம் எனக்கு தயாரிப்பாளராகவும் நல்ல அனுபவம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சில படங்களைத் தயாரிக்கதிட்டமிட்டுள்ளேன். சத்யராஜ் சாரை அணுகி அவரது கால்ஷீட் கேட்டபோது உடனே கொடுத்து உதவினார் (நடிகைகளுக்குஉதவுவதில் அவர் ரொம்ப வேகமான ஆளாச்சே). அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

இப்போதைய ஹீரோயின்கள் அனைவரும் நல்ல திறமைசாலிகள். அவர்களை வைத்து படத் தயாரிப்பில் ஈடுபடுவதுசந்தோஷமான அனுபவமாக இருக்கும். அதேசமயம், நடிப்பையும் விட மாட்டேன். எனக்கு ஏத்த கேரக்டர் வந்தால் கண்டிப்பாகநடிப்பேன். நல்ல வில்லியாக (!!) நடிக்க ஆசை உள்ளது.


அப்படிப்பட்ட வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக கலக்கி விடுவேன் என்கிறார் விலாசினி.

அது சரி, இன்னும் உங்களுக்கு இளமை மிச்சமிருக்கிறதே, அதற்குள் ஏன் தயாரிப்பாளராக ஆசை என்று கொக்கியை கொஞ்சம்டைட்டாக போட்டபோது,

அதெல்லாம் சரிதான். நடிப்பை நான் விட்டு விட்டேன் என்று சொல்லவில்லையே, தயாரிப்போடு நடிப்பும் தொடரும். வர்றகேரக்டரை எல்லாம் ஒத்துக் கொண்டு நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு ஏற்ற கேரக்டரில் நடிக்க மட்டுமே விருப்பம்.

நானே தயாரிக்கிறேன் என்பதால் வலுக்கட்டாயமாக எனது படத்தில் நடிக்க மாட்டேன் என்றார் விலாசினி.

பரவாயில்லையே, சொந்தப் படத்தில் கூட வேறு ஹீரோயினைப் போட்டு நடிக்க வைக்கும் விலாசினிக்கு உண்மையிலேயேவிசாலமான மனசுதான்!.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X