»   »  காத்திருக்கும் கங்காரு!

காத்திருக்கும் கங்காரு!

Subscribe to Oneindia Tamil

பொய் வந்ததும் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்திருந்த விமலா ராமனுக்குசொல்லிக் கொள்ளும்படி வாய்ப்பு வந்து சேராததால் அப்செட் ஆகியுள்ளார்.இருந்தாலும் பொறுமை காத்து பார்த்துவிட்டு, கிளாமரில் பொங்கி எழ முடிவுசெய்துள்ளாராம்.

ஆஸ்திரேலியாவில் அவதரித்த தமிழ் கங்காரு விமலா ராமன். அவரது தைரியமான,தில்லான பேச்சு, செயல்பாடுகளால் கவரப்பட்ட கே.பாலச்சந்தர் தனது பொய்படத்தின் நாயகியாக்கினார்.

பொய் படமும் சமீபத்தில் வெளியானது. ஆனால் ஓடுகிறதா என்ற சந்தேகம் வரும்அளவுக்கு படம் படு அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது (சில இடங்களில்தியேட்டரை விட்டும் ஓடிப் போய் விட்டது).

படப்பிடிப்பில் பொய் இருந்தபோது விமலா ராமனுக்கு வேண்டியவர்களும், படயூனிட்டும், உங்களை இந்தப் படம் எங்கேயோ கொண்டு போய் விட்டுவிடும்பாருங்கள் என்று பூஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். அவரும் புளகாங்கிதமடைந்துஇருந்தார்.

ஆனால் படம் வந்ததும் கிடைத்த ரெஸ்பான்ஸ் அவருக்கு அப்செட்டைக் கொடுத்துவிட்டதாம். நல்ல படம், ஏன் மக்களிடம் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை என்றுகுழம்பியுள்ளாராம். அதை விட தன்னைத் தேடி பெரிய அளவிலான வாய்ப்புகள்வராததும், குட்டிக் குட்டி கம்பெனிகளே தன்னை நாடுவதையும் அவரால் ஜீரணிக்கமுடியவில்லையாம்.

இந்த நேரத்தில் குறுக்காலே புகுந்த சிலர், இப்படியெல்லாம் நடித்தால் கதைக்குஆகாது பாப்பா, பேசாமல் கிளாமர் களம் புக தயார் என கிறக்கமாக ஒருஸ்டேட்மென்ட் விடு, அப்புறம் பாரு, பிச்சுக்கிட்டு வரும் சான்ஸ் என தூபம்போட்டுள்ளனர்.

கிளாமராக நடிக்க விமலா ரெடிதான் என ஏற்கனவே விமலா ராமன் ஸ்டேட்மென்ட்விடுத்திருந்தாலும், கேரள குமரிகள் அளவுக்கு படு அப்பட்டமாக இறங்குவதில்அவருக்கு விருப்பம் இல்லையாம். அதேபோல வலியக்க போய் கிளாமர்காட்டுவதிலும் அவருக்கு உடன்பாடு இல்லையாம்.

இதனால் கொஞ்ச காலம் பொறுத்துப்பார்ப்போம். நல்லவாய்ப்புகள் வந்தால் சரி,அப்படியும் ச>ப்பட்டு வராவிட்டால் கிளாமரில் பொங்கிடுவோம் என முடிவுசெய்துள்ளாராம்.

என்னிடம் நல்ல அழகு உள்ளது, நடிப்புத் திறமை உள்ளது, முக்கியமாக தங்கத் தமிழ்உள்ளது. அப்புறம் எதுக்கு பயந்து, நடுங்கி கிளாமருக்குப் பாய் வேண்டும் என்றுகேட்கிறாராம் விமலா ராமன்.

வாஸ்தவந்தானே..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil