For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கே.பி இழுத்து வந்த விமலா

  By Staff
  |

  விழிகளாலேயே பல மொழி பேசும் நடிகைகளை இப்போது பார்ப்பது அரிது. ஆனால்ஆஸ்திரேலியக் கிளியான விமலா ராமனின் குண்டு விழிகளோ கொஞ்சிக் கொஞ்சிப்பேசுகிறது.

  தமிழ் என்ற வார்த்தையை மட்டுமே தெரிந்த பல நடிகைகள் கொடி கட்டிப் பறக்கும்கோடம்பாக்கத்தில், அட்சர சுத்தமாக தமிழ் பேசி அசத்தலாக நடிக்க வந்துள்ளார்விமலா ராமன்.

  பாப்பாவுக்கு அப்பா பெங்களூரு, அம்மாவுக்கு கோவை. ஆனால் விமலா பிறந்தது,வளர்ந்தது, படித்தது எல்லாமே கங்காரு நாடான ஆஸ்திரேலியாவில் தான்.

  அப்பாவும், அம்மாவும் 35 வருஷத்திற்கு முன்பே ஆஸ்திரேலியாவுக்கு வண்டி ஏறிவிட்டார்களாம். இதனால் விமலா ஒரு ஆஸ்திரேலியப் பிரஜை.

  வீட்டில் தமிழ்தான் ஆட்சி மொழி என்பதால், ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்என்றாலும் கூட விமலாவுக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தமிழ் நன்னாத்தெரியுமாம். அத்தோடு பரதநாட்டியம் மிஸ்.ராமனுக்கு அத்துப்படியாம்.

  பரதநாட்டியம் கற்ற கையோடு அடிக்கடி தமிழ்நாட்டுப் பக்கம் பறந்து வந்து ஆடிச்சென்றுள்ளார் விமலா. அவரது அழகைப் பார்த்த சில விளம்பர நிறுவனங்கள்,ஆடுக்கு நடிக்கிறேளா என்று கேட்க ஓ.கே. சொல்லி சில விளம்பரங்களில் நடித்தும்உள்ளார் விம்ஸ்.

  விளம்பரத்தில் விமலாவைப் பார்த்த கமல்ஹாசன், தனது நள தமயந்தி படத்தில் நடிக்கஅழைத்துள்ளார். ஆனால் அப்போது ரொம்பச் சின்னப் பொண்ணாக இருந்ததால்இப்போது வேண்டாம் என்று கூறி அப்பா முட்டுக்கட்டை போட்டு விட்டாராம்.

  இப்போ செமத்தியாக வளர்ந்து பெரிய பெண்ணாகி விட்டதால், பொய் படத்தில்கே.பாலச்சந்தர் அழைத்தபோது வீட்டில் பச்சைக் கொடி காட்டி விட்டார்களாம்.இப்படித்தான் விமலா சினிமா நடிகையானாராம்.

  பொய் படத்தில் நடிப்பதற்காக முதன் முதலில் பாலச்சந்தர் அழைத்தபோது அவரதுஅலுவலகத்திற்கு விமலாவும், அப்பா விமலாவும் போயுள்ளனர். நேராக கே.பி.யின்கேபினுக்குள் நுழைந்த விமலா, விவேக் பாணியில் ஹாய் ஹாய் என்றபடி கே.பிக்குகை கொடுத்து விட்டு இருக்கையில் உட்கார்ந்து கொண்டாராம்.

  அவர் பேசியது, நடந்து கொண்டதை கூர்ந்து கவனித்த கே.பி. நீதாம்மா என்னோடஹீரோயின் என்று அப்பாயிண்ட்மென்ட் பண்ணியுள்ளார். ஆனால் ஆஸி ஐஸ்பெண்ணான விமலாவோ, கொஞ்சம் யோசித்துச் சொல்கிறேன் என்று கூலாக கூறிவிட்டு கிளம்பியுள்ளார்.

  அதற்கு கே.பி. என்னம்மா நீ, என்னோட படத்துல நடிக்க பொண்ணுங்கஏங்கிட்டிருக்காங்க, நீ இப்படி சொல்றியேன்னு அதிர்ச்சி காட்டியுள்ளார். ஆனாலும்அசராத விமலா, பத்து நாள் டைம் கொடுங்க சார், யோசித்துச் சொல்கிறேன் என்று கூறிவிட்டு எஸ் ஆனாராம்.

  அப்புறமாக, கே.பி.யின் அலுவலகத்திலிருந்து ஒரு மேனேஜர் விமலாவுக்குஎஸ்.எம்.எஸ். அனுப்பி பல அறிவுரைகளை கூறியுள்ளார். அதன் பிறகேபாலச்சந்தரின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஓடோடி வந்து ஓ.கே. சொன்னாராம்.

  தான் கே.பியிடம் பட் பட்டென்று பேசியது, அவருக்கு எதிராக உட்கார்ந்தது,தடாலடியாக டைம் கேட்டது எல்லாமே தவறு என்று கே.பி. அலுவலகத்தில்இருந்தவர்கள் விமலாவிடம் எடுத்துக் கூறினராம். ஆனால் அப்படிப்பட்டபார்மாலிட்டிகள் எல்லாம் ஆஸ்திரேலியாவில் கிடையாது என்பதால் தான் அப்படிநடந்து கொண்டதாகவும், மற்றபடி பாலச்சந்தர் சாரை மதிக்காத தன்மை கிடையாதுஎன்று சமாளித்தார் விமலா.

  எப்படியோ, அழகு நிலாவைப் பிடித்து பொய் அழகியாக்கி உலவ விட்டுள்ளார்பாலச்சந்தர்.

  இந்த அழகுப் பிசாசு என்ன பாடுபடுத்தப் போகிறதோ ரசிகர்களை.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X