சல்மான் கானும், விமலா ராமனும்!

மும்பை மயக்கத்தில், ரூட்டை மாற்றிக் கொண்ட அந்த காலத்து ஸ்ரீதேவி முதல் இந்தக் கால அசின், த்ரிஷா போன்றவர்களின் வரிசையில் இப்போது விமலா ராமனும் சேர்ந்து விட்டதாக மலையாளத்திலும், கோலிவுட்டிலும் விரக்தியோடு கிசுகிசுக்கிறார்கள்.
தமிழகத்து ரசிகர்களை 'ரட்சித்து' வந்த விமலா ராமனையும், பாலிவுட் பட்சிகள் வந்து கொத்திக்கொண்டு போக இருப்பதாக கூறப்படுகிறது.
அதுவும் விமலா ராமன் தனது முதல் இந்தி படத்தில் நடிக்கப்போவது சல்மான்கானுடன். மிகப் பெரிய ஹிட்டான அம்பாப்பள்ளி படத்தின் ரீமேக்கில் தான் இவர்கள் நடிக்கப் போகிறார்களாம்.
பிரபல இயக்குனர் ஆஷுதோஷ் கோவாரிகர் இப்படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.
Comments
asin அசின் சல்மான் கான் சினிமா த்ரிஷா நடிகை பாலிவுட் விமலா ராமன் cinema salman khan trisha vimala raman


Click it and Unblock the Notifications