twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனம் வருந்தி பேசிய வினய். வாய்விட்டு சிரித்த சூர்யா... அப்படி என்ன சொன்னார்?

    |

    சென்னை: உன்னாலே உன்னாலே திரைப்படம் மூலம் கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குநர் ஜீவாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர் வினய் ராய்.

    அதைத் தொடர்ந்து ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், என்றென்றும் புன்னகை, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

    தனி ஹீரோவாக அறிமுகமாகி, பின்னர் பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்து இப்போது வில்லன் கதாபாத்திரங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

    ரஜினியை சந்தித்து ஆசி பெற்றார் செஸ் சாம்பியன் பிரக்னானந்தா.. ராகவேந்திரர் படம் கொடுத்து வாழ்த்து! ரஜினியை சந்தித்து ஆசி பெற்றார் செஸ் சாம்பியன் பிரக்னானந்தா.. ராகவேந்திரர் படம் கொடுத்து வாழ்த்து!

    ஜூன் போனால் ஜூலை காற்றே...

    ஜூன் போனால் ஜூலை காற்றே...

    ஜூலைக் காற்றே என்கிற தலைப்பில் நடிகர் ஆர்யாவை வைத்து ஜீவா தொடங்கிய படத்தில் ஆர்யா விலகவே அதன் பின்னர் ஒப்பந்தமானவர்தான் வினய். ஜூலை காற்றே பின்னர் உன்னாலே உன்னாலே என்று ரிலீஸ் ஆனது. ஜீவா உயிரோடு இருக்கும்போது அவர் இயக்கத்தில் வெளியான கடைசி படம் இதுதான். முதல் படத்திலேயே பெண்களின் மனதை கொள்ளையடித்தார் வினய். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில், ஜீவா படம்பிடித்த விதத்தில் அந்தப் படம் ஃப்ரெஷ்ஷாக இருந்தது.

    வில்லன் வினய்

    வில்லன் வினய்

    ஹீரோவாக வெற்றியை காண முடியாமல் சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், வில்லன் கதாபாத்திரங்களுக்கு வரவேற்பு கொடுத்தார் வினய். மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் ஆரம்பித்து, சிவ கார்திகேயனின் டாக்டர், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், அருண் விஜய்யின் ஓ மை டாக் உள்ளிட்ட படங்களில் மிரட்டலான வித்யாசமான வில்லனாக நடித்து பெயர் பெற்றார். வில்லன் ரோலுக்கு அவரது குரல் முக்கிய பிளஸ்ஸாக அமைந்துள்ளது.

    வினய்யின் வருத்தம்

    வினய்யின் வருத்தம்

    என்னதான் வில்லனாக ஜொலித்தாலும், நடிகராக தொடர்ந்து நடித்தாலும், ஹீரோவாக வந்த தான் இப்போது வில்லனாக நடிப்பதை நினைத்து வருந்துவாராம். எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, தனக்கு படப்பிடிப்பு இல்லாத ஒரு நாள் பாண்டிராஜ் ஷூட்டிங் செட்டுக்கு இவரை அழைத்துள்ளார். பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தாராம் பாண்டிராஜ். அங்கு சென்றவர் படப்பிடிப்பை பார்த்துவிட்டு சூர்யாவிடம் ஒன்றை கூறியுள்ளார்.

    வாய்விட்டு சிரித்த சூர்யா

    வாய்விட்டு சிரித்த சூர்யா

    சூர்யாவிடம்,"வில்லனாக நடிப்பதை எண்ணி நான் பல நாள் வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் பாடல் காட்சிகளில் நடனமாடுவதை பார்த்தால், நீங்களே ஹீரோவாக இருந்து கொள்ளுங்கள். நான் வில்லனாக இருந்துகொள்கிறேன்" என்று தோன்றியதாக கூறினாராம். அதைக் கேட்டு சூர்யா வாய்விட்டு சிரித்தாராம். ஜூன் போனால் ஜூலைக் காற்றே பாட்டில் கூட சதீஷ் ஆடிக் கொண்டிருக்க, வினய் நடக்க மட்டுமே செய்வார். சூர்யாவும் ஆரம்ப காலத்தில் நடனமாட முடியாமல் பின்னர் தன்னை வளர்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vinay Talked with Upset but Suriya Laughed, Why and For What Reason?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X