சிவாஜி டூ விக்கி.. ஜெமினி டூ டெல்லி.. எத்தனை எத்தனை கணேசன்கள்!

சென்னை: விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டைதான்.. கொண்டாட்டம்தான். கணேசனைக் கொண்டாடாத வீடுகளே இருக்க முடியாது. பாரம்பரியமான பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்திக்கு தனி இடமே உண்டு. அதேபோல கணேசன் என்ற பெயர் கொண்ட பலரும் கூட இந்த நாளில் நினைவு கூறப்படுவார்கள். நாம் மட்டும் விடுவோமா என்ன.. நாமும் ரீகால் பண்ணுவோம் சிலரை.

கணேசன் என்ற பெயர் பலருக்கும் இருக்கும். ஆனால் திரையுலகில் அந்தப் பெயர் கொண்டவர்கள் சிலர் உச்சம் தொட்டவர்கள். உதாரணத்திற்கு சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன்.

வெறும் விசி கணேசனாக இருந்தவர் பின்னாளில் சிவாஜி கணேசனாக இயமாக உயர்ந்தது வரலாறு. காதல் மன்னனாக வலம் வந்த ஜெமினியும் ஒரு கணேசன்தான்!.

சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன் குறித்து ஒரு பாராவில் அடக்குவது என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. பாரசக்திக்கு பல புத்தகங்கள் தேவைப்படும். தமிழ் சினிமாவின் வரலாற்றில் சிவாஜிக்கென்று தனி சாம்ராஜ்ஜியமே உண்டு. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியன்று இந்த கணேசனையும் கொண்டாடுவோம்.

ஜெமினி கணேசன்

ஜெமினி கணேசன்

ஒரிஜினல் காதல் மன்னன். இன்றும் கூட பார்த்து பார்த்து ரசிக்கக் கூடிய பல படங்களை கொடுத்து விட்டுப் போன ரொமான்டிக் ஹீரோ. கடைசி வரை ரொமான்ஸை இவரும் கைவிடவில்லை. அதுவும் இவரை விட்டுப் போகவில்லை.

சங்கர் கணேஷ்

ஒரு காதல் தேவதை.. இந்தப் பாடலை எத்தனை பேர் கேட்டிருப்பீர்கள்.. கேட்க கேட்க திகட்டாத காதல் காவியம். இதன் இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ். தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இரட்டை இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ்.

கணேஷ் வெங்கட்ராம்

கணேஷ் வெங்கட்ராம்

தமிழ் திரையுலகின் உயரமான நடிகர்களில் இவருக்கும் இடமுண்டு. நல்ல நடிப்புத் திறமை கொண்ட நடிகர். பெரிய அளவில் இன்னும் பிரேக் ஆகவில்லை. இந்த விநாயகர் சதுர்த்தி இவருக்கு அருள் புரியட்டும் என வேண்டுவோம்.

டெல்லி கணேஷ்

டெல்லி கணேஷ்

ஆஹா.. எத்தனை திறமைகளை உள்ளடக்கிய நடிகர் டெல்லி கணேஷ். காமெடியாகட்டும், வில்லத்தனமாகட்டும், குணச்சித்திரமாகட்டும் பின்னி பெடலெடுக்கக் கூடிய பிரமாதமான நடிகர். கமல்ஹாசனும், இவரும் சேர்ந்து நடித்த படங்கள் அத்தனையுமே பொக்கிஷம். இந்த கணேசனையும் விநாயகர் சதுர்த்தியன்று வாழ்த்துவோம்.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

லேட்டஸ்ட் கணேசன்.. இந்த விக்னேஷ் சிவன். தமிழ் திரை ரசிகர்களின் கனவு தேவதையின் மனதை களவாடிய கணேசனும் கூட.. சொற்ப படங்களே இயக்கியிருந்தாலும் கூட தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடம் போட்டுக் கொண்டவர்.

இவர்கள் மட்டுமல்ல கணேசன் என்ற பெயர் கொண்ட எல்லோருக்குமே நம்மளோட விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துகள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X