»   »  சங்கமத்தின் சங்கடம்!

சங்கமத்தின் சங்கடம்!

Subscribe to Oneindia Tamil

சங்கம நாயகி விந்தியாவுக்கு புது சிக்கல் வந்துள்ளதாம். தான் சார்ந்த பார்ட்டியைச் சேர்ந்த ஒரு பார்ட்டியால்வந்த சங்கடமாம் இது.

விந்தியா ஒரு கட்டத்தில் குத்து விளக்கு நாயகிகள் வரிசையில் சேர்க்கப்பட்டிருந்தார். சங்கமம் படத்தில்அம்சமாக நடித்ததால் வந்த அங்கீகாரம் இது.

ஆனால் குத்துவிளக்காகவே இருந்தால் காலம் தள்ளுவது சிரமம் என எண்ணிய சங்கம், பெட்ரோமாக்ஸ்லைட்டாக மாறினார், கிளாமருக்குத் தாவினார். அப்படியும் கூட வாய்ப்புகள் வரவில்லை.

ஒரு கட்டத்தில் விந்தியாவுக்கு வாய்ப்பே இல்லாமல் போண்டியானது மார்க்கெட். இதனால் சிம்னி விளக்குரேஞ்சுக்கு இறங்கி குத்துப் பாட்டுக்கும் ஆட ஆரம்பித்தார். அப்படியும் தேறவில்லை.

இந்த சமயம் பார்த்து சட்டசபைத் தேர்தல் குறுக்கிடவே, அதிமுகவில் ஐக்கியமாகி தீவிரப் பிரசாரம் செய்துஅசத்தினார். ஆனால் அய்யோ பாவம், விந்தியா போய்ச் சேர்ந்த நேரமோ என்னவோ அதிமுக படுதோல்வியைசந்தித்து ஆட்சியையும் இழந்தது.என்னடா இது சோதனை என்று அரண்டு போன விந்தியா அரசியலில் தீவிரம் காட்டாமல் அமுக்கமாகி விட்டார்.இப்போது அம்மணி கையில் புதுப் படம் எதுவும் இல்லையாம்.

ஆளு, அதிமுக பார்ட்டி என்று முத்திரை குத்தப்பட்டு விட்டதால் யாரும் புக் பண்ண முன்வருவதில்லையாம்.இதனால் வீட்டிலேயே குத்த வைத்து விசும்பிக் கொண்டிருக்கும் விந்தியாவுக்கு அதிமுகவின் முக்கியப் புள்ளிஒருவர் உதவிக் கரம் நீட்டியுள்ளாராம்.அதாவது விந்தியாவை ஹீரோயினாக போட்டு படம் எடுக்க அந்தப் புள்ளி முன்வந்துள்ளாராம்.

இப்படத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்க அவர் தயாராக இருக்கிறாராம். இதனால் முதலில்விந்தியா சந்தோஷப்பட்டுள்ளார்.ஆனால் அடுத்து அந்தப் புள்ளி போட்ட கோலத்தைப் பார்த்து விந்தியா அரண்டு போய் விட்டாராம். அதாவதுபடம் முடியும் வரை நீங்கள் எனது கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் அந்த சகாயத்திற்குபிரதியுபகாரமாக புள்ளி போட்ட கோலமாம்.

இதற்கு உடனடியாக பதில் சொல்லாமல் அப்படியே திரும்பி விட்டாராம் விந்தியா. ஆஃபரை ஏற்பதா,வேண்டாமா என்ற குழப்பத்தில் இப்போது விந்தியா நகத்தை மென்று கொண்டிருக்கிறாராம்.

Read more about: vindhya in new tangle
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil