»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஒரு காலத்தில் கவுண்டமணியுடன் ஜோடி கட்டிய ஷர்மிலியை இப்போது மதுரைப் புயல் வடிவேலு வளைத்துப்போட்டுள்ளார்.

குண்டு ஷர்மிலியும், கவுண்டமணியும் சேர்ந்து சில படங்களில் ஜோடியாக வந்தார்கள். பின்னர் கவுண்டர்கைவிடவே ஷர்மிலி மலையாளத்தில் பலான படங்களில் நடிக்கப் போய் விட்டார். இப்போது அங்கும் மார்க்கெட்டவுண்.

இதனால் சில டிவி சீயல்களில் நடித்து வந்த ஷர்மிலியை இப்போது வடிவேலு கூப்பிட்டு தனது படங்களில்வாய்ப்பு அளிப்பதாக கையில் அடித்து சத்தியம் செய்திருக்கிறாராம்.

இதற்கு அச்சாரமாக ஜோர் படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து கலாய்த்திருக்கிறார்களாம். வடிவேலுவின்மார்க்கெட் படு ஸ்ட்ராங்காக இருப்பதால், வேலு சொல்வதையெல்லாம் அப்படியே கேட்டு, அவருடன் அட்டைபோல ஒட்டிக் கொண்டிருக்கிறாராம் ஷர்மிலி.

முன்னாள் ஹீரோயினும் இன்னாள் ஆண்டியுமான அம்பிகாவையே வளைத்தவர் வடிவேலு என்பதுகுறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் விந்தியா:

ஓவராக ஆட்டம் போட்டதாலோ என்னவோ (படத்தில் தான் !!) விந்தியாவுக்கு கடும் இடுப்பு வலி வந்துவிட்டது.

கன்னிநிலா படத்தின் சூட்டிங்குக்காக காரிலேயே சென்னையில் இருந்து ஒசூருக்குக் கிளம்பினார் விந்தியா.

காரில் போகும்போதே தாங்க முடியாத வலி ஏற்படவே, அந்த ஊரில் ஒரு தனியார் மருத்துவமனையில் போய்அட்மிட் ஆகியிருக்கிறார். சில நாட்கள் பெட் ரெஸ்ட்டில் இருக்கச் சொல்லிவிட்டார்களாம். இதனால் மார்ச் முதல்வாரத்தில் தான் மீண்டும் சூட்டிங்கு வருவாராம்.

கன்னிநிலாவில் விந்தியாவுடன் நடிப்பது புளூபிலிம் புவனேஸ்வரி !!

Please Wait while comments are loading...