விஷால் - சமீரா ஜோடி போடும் பிரபு தேவா படம்!

By Shankar

பாலாவின் இயக்கத்தில் அவன் இவன் படத்தை முடித்த கையோடு, புதிய பட வேலைகளைத் துவங்கிவிட்டார் விஷால். இது அவரது சொந்தத் தயாரிப்பு.

பிரபு தேவா இயக்கும் இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடி சமீரா ரெட்டி. ஜிகே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவும் அவரது மனைவி நடிகை ஸ்ரேயா ரெட்டியும் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. பக்கா ஆக்ஷன் படமான இதனை தூத்துக்குடி மற்றும் கொல்கத்தாவில் படமாக்க உள்ளார்களாம். கடந்த ஆண்டே தொடங்கியிருக்க வேண்டிய படம் இது. அவன் இவனை முடிக்க பாலா தாமதித்ததால் இப்போது துவங்கியுள்ளது.

நகைச்சுவைக்கு விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படம் குறித்து விஷால் கூறுகையில், "பிரபுதேவா ஒரு புரபஷனல் இயக்குநர். நேர்த்தியாக இருக்கும் அவரது மேக்கிங். அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படம் ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்திலுமே பெஸ்டாக இருக்கும்", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X