தயாரிப்பாளராகிறார் யுவன்!

By Staff
Click here for more images
யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பாளராகிறார். விஷ்ணுவர்த்தன் இயக்க, யுவன் தயாரிக்கும் படம் விரைவில் பூஜைக்கு வருகிறது. படத்திற்கு சர்வம் என்று பெயரிட்டுள்ளனர்.

வித்தியாசமான கதையம்சங்களுடன் கூடிய, வித்தியாசமான படங்களை தயாரிப்பது என்பது யுவனின் கனவாகவே இருந்து வந்தது. இதற்காகத்தான் செல்வராகவன், கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணாவுடன் இணைந்து ஒயிட் எலிபென்ட் என்டர்டெய்ன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் யுவன்.

இந் நிலையில் படத் தயாரிப்பில் குதிக்கிறார் யுவன். முதல் கட்டமாக நான்கு படங்களைத் தயாரிக்கப் போகிறாராம் யுவன்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் அஞ்சு, பெரும் பொருட் செலவில் தயாராகும் சர்வம் ஆகியவை அதில் இரு படங்கள். 2வது படமான சர்வத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கப் போகிறார்.

தனது நான்கு படங்களில் ஒன்றுக்கு இசையமைக்குமாறு அப்பா இளையராஜாவை கேட்டுக் கொண்டுள்ளாராம் யுவன். சர்வம் படத்தில் ஹீரோவாக நடிக்க சூர்யாவை அணுகியுள்ளாராம் யுவன். சூர்யாவிடமிருந்து பாசிட்டிவான பதிலை எதிர் பார்த்துள்ளனராம்.

ஜோரானா ஜோடிதான், ஜொலிக்கட்டும்!

More from Filmibeat

Read more about: vishnuvardhan yuvansankaraj
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X