»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

நடிகர் விவேக் ஒரு இளையராஜா பைத்தியம். இளையராஜாவை இவர் குறிப்பிடும் பொழுது "யங்கிங்" என்றுதான் சொல்கிறார்.

சீனு படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானைக் கிண்டலடிக்கும் வேடத்தில் வருகிறார். இப்படத்தில் இவர் ஒரு ஃபாரின் ரிட்டர்ன் மியூசிக் டைரக்டர். இங்கே சாவுக்குவாசிக்கப்படும், இசையை ஆல்பமாக்கி டெத் பன்ச் என்று பெயர் சூட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி பிரபலமாவதாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கெட்டப்பைப் பார்த்தால் ஏ.ஆர் ரஹ்மான் மாதிரி லாங் ஹேரில் அசத்துகிறார்.

மறுபடியும் வாசு ..

பி.வாசு இயக்கத்தில் கார்த்திக் நடிக்கும் சீனு என்ற படத்தின் ஒரிஜினல் கதை மலையாளத்தில் மோகன் லால் நடித்து வெற்றிகரமாக ஒடிய பரதம்படத்தினுடையது.

இந்தப் படத்தை இயக்குகிறார் பி.வாசு. அத்தோடு இல்லாமல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

அள்ளலாம்ல...!

பிரபலமான நடிகர் நடிகையர்களின் கவனம் எல்லாம், படத்தைவிட வெளிநாட்டு நட்சத்திர இரவு நிகழ்ச்சி நடத்துவதிலேயே உள்ளது.

காரணம், நல்ல ஊதியம் கிடைக்கிறது வெளிநாட்டில் இருந்து வரும்பொழுது அன்பளிப்புகளையும் அள்ளிக்கொண்டு வரலாம் என்பதுதானாம்.

போட்டுத் தாக்குங்கோ!

வசந்த்துக்கு வந்த சோதனை

ரிதம் படத்தின் ரிசல்ட் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இதன் விளைவு, இயக்குனர் வஸந்துக்கு வரவேண்டிய ஒரு படம் தள்ளிப் போய் விட்டது.

பூர்ண சந்திர ராவுக்காக அஜித் ஹீரோவாக நடிக்க வஸந்த் இயக்க திட்டமிட்டிருந்தார்கள். ரிதம் படம் திருப்திகரமாக இல்லாததால் வஸந்த் வேண்டாம்என்று கூறி விட்டார்கள்.

யார் அறிவார் பராபரமே!

நடிகர் பிரபுதேவா, மாலை வேளைகளில் ஆழ்வார்பேட்டை உள்ள வீட்டில் தான் காணப்படுகிறார். அதிகாலை அங்கிருந்து தான் படப்பிடிப்புகளுக்கும் போய்வருகிறார்.

ஆனால் அவர் ரம்லத் என்ற பெண்ணை ரகசியமாக மணமுடித்து அவருடன் குடியிருப்பதாகச்சொல்லப்படுகிறது.

இப்பொழுதுள்ள நிலைமையைப்பார்த்தால் ரம்லத்திடமிருந்து விடுதலை பெற்றுவிட்டார் என்கிறார்கள். யாருக்குத்தெரியும் பிரபு தேவாவின் ரகசியங்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil