விஜய் ஸ்டார் நைட் டிக்கெட் வாங்குங்க, சீயானை சந்தித்து பேசுங்க

நாளை துபாயில் பெஸ்டிவல் சிட்டியில் ஸ்டார் விஜய் நைட் கலை நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை இன்று வாங்கலாம் என்று நினைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
காரணம் பெஸ்டிவல் சிட்டியில் இன்று மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை டிக்கெட் வாங்க வருபவர்கள் அங்கு பயிற்சி செய்யும் சீயான் விக்ரம், விஜய் டிவி புகழ் சிவகார்த்திகேயன், திவ்ய தர்ஷினி மற்றும் பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.
நீங்கள் அவர்களுடன் புகைப்படம் எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் ஐக்கிய அரபு அமீரக தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து விபரம் அறிய 050-5865375, 050-4751352, 050-5866027 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Comments


Click it and Unblock the Notifications