»   »  வாட்டர் இன்று ரிலீஸ்!

வாட்டர் இன்று ரிலீஸ்!

Subscribe to Oneindia Tamil

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் போட்டியில் பிற நாட்டுப் படங்களுடன் முட்டி மோதி, கடைசியில் போட்டியிலிருந்து வெளியேறிய தீபா மேத்தாவின்வாட்டர், இன்று இந்தியாவில் திரையிடப்பட்டது.

ஃபயர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குனர் தீபா மேத்தாவின் இயக்கத்தில் உருவான படம் வாட்டர். சமீபத்தில் நடந்த ஆஸ்கர்விருதுபோட்டியில், கனடா நாட்டின் சார்பில் வாட்டர் போட்டிக்குச் சென்றது. ஆனால் இறுதிச் சுற்றில் விருது பெறத் தவறி வெளியேறியது.

உலகெங்கும் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் வாட்டர் பெரும் வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றது. இந்த நிலையில் இன்று முதல்இந்தியாவில் திரையிடப்பட்டது.

ஜான் ஆப்ரகாம், லிசா ரே இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 1930களில் இந்தியாவில் வாழ்ந்த விதவைப் பெண்களின் நிலையைசித்தரிக்கும் படம் இது.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் ஜூரம் இந்தியாவில் படு வேகமாக பரவிக் கொண்டுள்ள நிலையில் இப்படத்தை உலகக் கோப்பைப் போட்டிக்குப்பிறகு திரையிட முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மார்ச் மாதத்தில் அதிக அளவில் படங்கள் திரைக்கு வராது என்பதால் இந்த மாதத்திலேயேதிரையிட முடிவு செய்யப்பட்டது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil