twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி சார், கமல் சார், பாக்கியராஜ் சார்... மறக்க முடியாத ரகுவரன் சார்!

    By Sudha
    |

    சென்னை: வாத்தியார் என்றதும் சினிமாவில் நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர்.. தலைவர் எம்.ஜி.ஆர்.தான். ஆனால் வாத்தியார் வேடத்தில் பிரமாதப்படுத்திய பல நடிகர்கள் இன்றளவும் அந்த ரோல் மாடல் பாத்திரங்களுக்காகப் பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    சிவாஜி கணேசன் அந்தக் காலத்தில் மாஸ்டர் என்ற படத்தில் அருமையான ஆசிரியராக வாழ்ந்து காட்டியிருப்பார். அதேபோல ஜெமினி கணேசன் முதல் கொண்டு அந்தக் காலத்து ஜாம்பவான்கள் பலரும் கூட ஆசிரியர் வேடங்களில் அசத்தியிருப்பார்கள்.

    நூற்றுக்கு நூறு படத்தில் ஒரு ஆசிரியருக்கும், மாணவிக்கும் இடையிலான உறவு எவ்வளவு புனிதமாக இருக்க வேண்டும் என்பதை ஜெய்சங்கர் மூலம் அழகாக சொல்லியிருப்பார்கள்.

    சிவக்குமார் பல படங்களில் நிஜமான வாத்தியாராகவே வந்து போயிருப்பார்.. வாழ்ந்து காட்டியிருப்பார்.

    ரஜினி சார்

    ரஜினி சார்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆசிரியர் வேடத்திலும் கலக்கியவர். வாத்தியார் என்ற கம்பீரத்துடன், கண்ணியத்துடன் தனது ஸ்டைலும் இதமாக கலந்து இனிமையாக்கியவர் ரஜினிகாந்த்.

    தர்மத்தின் தலைவன்

    தர்மத்தின் தலைவன்

    தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினிகாந்த் கல்லூரிப் பேராசிரியாக வருவார். காமெடி கலந்த வாத்தியார் வேடம். ரஜினியின் நடிப்பு இன்று வரை பேசப்படும் ஒன்றாக மாறிப் போனது அந்த கேரக்டரின் பலம்.

    நான் சிகப்பு மனிதன்

    நான் சிகப்பு மனிதன்

    அதேபோல நான் சிகப்பு மனிதன் படத்திலும் கல்லூரி ஆசிரியராக வருவார் ரஜினிகாந்த். தர்மத்தின் தலைவன் காமெடி என்றால் இது திரில்லர். இரண்டிலும் அசத்தியிருப்பார் ரஜினி.

    ரமணா சார்!

    ரமணா சார்!

    மறக்க முடியாத கேரக்டர் இந்த ரமணா சார். விஜயகாந்த்துக்குப் புது கெளரவத்தையும், கண்ணியத்தையும் கொடுத்த படம். ஒரு வாத்தியார் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது இலக்கணமாகவும் அமைந்தது.

    ரகுவரன் சார்

    ரகுவரன் சார்

    சிவப்பதிகாரம் படத்தில் ரகுவரன் அசத்தியிருப்பார் கல்லூரி ஆசிரியர் வேடத்தில். அநீதி கண்டு பொங்குக என்பதுதான் அந்த ஆசிரியரின் அவதாரம். அந்த நடிப்பை இன்று வரை எந்த சினிமா வாத்தியாரிடமும் பார்த்ததாக நினைவில்லை.

    நம்மவர் கமல் சார்!

    நம்மவர் கமல் சார்!

    கமல்ஹாசன் நம்மவர் படத்தில் கல்லூரி ஆசிரியராக வந்திருப்பார். ஸ்டைலிஷானா வாத்தியார் கேரக்டர் என்பதால் கேரக்டரையும் ஸ்டைலிஷாகவே செய்திருப்பார்கள்.

    பாக்யராஜ் சார்!

    பாக்யராஜ் சார்!

    மறக்க முடியாத வாத்தியார் என்றால் அது இவர்தான். பாக்கியராஜ். இயக்குநராக, நடிகராக, கதாசிரியராக ஜொலித்த பாக்கியராஜ், முந்தானை முடிச்சு, சுந்தரகாண்டம் படங்களில் வாத்தியார் வேடத்தில் பின்னிப் பெடலெடுத்திருப்பார். ஒரு மார்க்கமான வாத்தியார் போல இதில் பாத்திரம் காணப்பட்டாலும் கூட அசத்தலான நடிப்பை கொடுத்திருப்பார் இந்த வாத்தியார்.

    ஜெனீபர் டீச்சர்

    ஜெனீபர் டீச்சர்

    டீச்சர் (அதாவது ஆண் என்றால் ஆசிரியர், பெண் என்றால் டீச்சர் என்றே நமது சமுதாயம் நமக்குப் பழக்கப்படுத்தி விட்டதன் விளைவு இது!) என்றால் உடனே நினைவுக்கு வருபவர் நம்ம ஜெனீபர் டீச்சர்தான். அதாவது கடலோரக் கவிதைகள் ரேகா.

    கொண்டை வைத்து குடையுடன் நடை

    கொண்டை வைத்து குடையுடன் நடை

    டீச்சர் என்றால் கொண்டை வைத்து, கையில் குடை, கண் கண்ணாடி சகிதம் நடந்து வந்தால்தான் அந்தக் காலத்தில் சினிமா ரசிகர்கள் ஒத்துக் கொள்வார்கள். அந்த வகையில் ரேகாவின் கடலோரக் கவிதைகள் கேரக்டர் இன்று வரை மறக்க முடியாத அழகு டீச்சர் பாத்திரம்.

    மகாலட்சுமி டீச்சர்

    மகாலட்சுமி டீச்சர்

    அதேபோல எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நதியாவின் டீச்சர் பாத்திரம் சூப்பராக வந்திருந்தது.

    ஏண்டா மூதேவி.. ஒக்காருடா கபோதி... இப்படியும் சில வாத்தியார்கள்!

    ஏண்டா மூதேவி.. ஒக்காருடா கபோதி... இப்படியும் சில வாத்தியார்கள்!

    ஆனால் இப்படிப்பட்ட வாத்தியார்கள் மத்தியில் சில கோணங்கித்தனமான டீச்சர்களையும் பார்த்துத்தான் வந்துள்ளோம். வெண்ணிற ஆடை மூர்த்தி அதில் முக்கியமானவர். ஏண்டா மூதேவி.. என்று ஆரம்பித்து ஒக்காருடா கபோதி என்று முடிப்பதற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு டபுள் மீனிங் வார்த்தைகளைச் சொல்லி மாணவர்களை டபாய்த்தவர் இந்த வாத்தியார்!

    நல்லொழுக்கம் கற்றுத் தரும் ஆசிரியர்களை இப்படி விதம் விதமாக பயன்படுத்தி அழகு பார்த்து வந்துள்ளது நம்ம சினிமா!

    English summary
    Tamil cinema has glorifed the teaching communtiy with beautiful movies and some of them are here.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X