எங்க வீட்லயும் சொத்து பிரச்சனை வந்திருக்கு.. வெளிப்படையாக கூறிய கிருத்திகா உதயநிதி!
சென்னை: நடிகர் காளிதாஸ் ஜெயராம், தனியார் ரவிச்சந்திரன், கௌரி கிஷன் போன்ற பலரும் நடித்திருக்கும் வெப் தொடர் தான் பேப்பர் ராக்கெட்.
இந்த பேப்பர் ராக்கெட் வெப் தொடர் ஜி5 தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த வெப் தொடரில் வருவதைப் போல தனது குடும்பத்திலும் பல பிரச்சனைகள் வந்துள்ளதாக இயக்குநர் கிருத்திகா உதயநிதி வெளிப்படையாக கூறியுள்ளார்.

இயக்குநராக வெற்றி பெற்ற கிருத்திகா
வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி, தற்போது பேப்பர் ராக்கெட் வெப் தொடரை இயக்கியுள்ளார். இதில் காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர் என்றாலே ஆபாச காட்சிகளும், ஏ கண்டெண்டுமாக இருக்கும் பட்சத்தில்,
இந்த பேப்பர் ராக்கெட் அதை எல்லாம் தாண்டி சாதாரண குடும்பத்தில் இருக்கக்கூடிய சம்பவங்களும், பிரச்சனைகளையும் கொண்டு எதார்த்தமாக இயக்கியுள்ளார் கிருத்திகா.

அதிக நேரம் எடுத்துக்கொண்டோம்
இந்த வெப் தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் தான். ஒவ்வொருவரும் தங்களது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தி உள்ளனர். கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் தெரிந்து அதற்காகவே நேரம் எடுத்து ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உருவாக்கினோம், யார் நடிக்க வேண்டும் என்பதையும் முடிவு எடுக்க நேரம் எடுத்துக் கொண்டோம் என்று கிருத்திகா உதயநிதி ஏற்கனவே கூறியதும் குறிப்பிடத்தக்கது.

சொத்து பிரச்சனை
தற்போது வெப் தொடரில் இடம் பெற்றுள்ள சொத்து பிரச்சனை குறித்தும் மனம் திறந்து கூறியுள்ளார் இயக்குநர் கிருத்திகா. குடும்பத்திற்குள் ஏற்படும் சொத்து பிரச்சனைகளும், அப்பொழுது நடக்கும் வாக்குவாதங்களும் இந்த வெப் தொடரின் ஹைலைட்டாக இருக்கும் நிலையில் இயக்குநர் கிருத்திகா, அதே போல் என் வாழ்க்கையிலும் சொத்து பிரச்சனை வந்துள்ளது என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், என் குடும்பத்திலும் சொத்து பிரச்சனைகள் வந்துள்ளது. அப்பொழுது பேசிக்கொண்ட வார்த்தைகளும், ஏற்பட்ட மன கசப்புகளையும் தான் இந்த வெப் தொடரில் காட்சியாக அமைக்கப்பட்டது.
சேர்ந்த குடும்பம்
வெப் தொடரில் வருவது போல நிஜ வாழ்க்கையிலும் பல வருடங்கள் கழித்து நாங்கள் சேர்ந்து விட்டோம்.. இந்த பேப்பர் ராக்கெட் ஸ்கிரிப்ட் எழுதும் பொழுது நான் என்ன நினைத்தேனோ அதையே தான் என் சொந்தங்களும் நினைத்து என்னை தேடி வந்து என்னுடன் பேசியது. அதனால் அந்த காட்சியை அப்படியே வெப் தொடரில் வைத்து விட்டேன். படங்களானாலும் சரி, வெப் தொடராக இருந்தாலும் சரி, பல விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கும் விஷயம் தான். ஒரு சம்பவம் ரியாலிட்டியாக இருக்கும் பொழுது அந்த காட்சி ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறது. அதேபோல் தான் இந்த சொத்து பிரச்சனை காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது என்று கிருத்திகா உதயநிதி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











