twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ''மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்''... இன்றும் அழுகிறோமே டி.எம்.எஸ்!

    By Sudha
    |

    சென்னை: சாகாவரம் படைத்த பல்லாயிரம் பாடல்களை தமிழர்களுக்குக் கொடுத்து விட்டு கண்ணை மூடி நம்மையெல்லாம் பிரிந்து சென்று விட்டார் டி.எம்.எஸ். அந்த சிம்மக் குரலோனின் பாடல்கள் இன்று உலகெங்கும் உள்ள தமிழர்களை கண்ணீர் வெள்ளத்தில் மூழ்க வைத்துள்ளது.

    இதுதாண்டா குரல்... இப்படித்தாண்டா பாடனும்... இவன்தாண்டா பாடகன் என்று சொல்லிச் சொல்லிப் பெருமைப்படும் ஒரு அபூர்வக் கலைஞன் டிஎம்எஸ் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் டிஎம் செளந்தரராஜன்.

    பிறப்பால் செளராஷ்டிரர் என்றாலும் கூட ஒட்டுமொத்த தமிழர்களின் உள்ளத்தில் தனி இடம் பிடித்த உண்மையான தமிழன் டி.எம்.செளந்தரராஜன். தமிழுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த குரல் டி.எம்.எஸ்,ஸின் கம்பீரக் குரல்.

    பக்தியில் பரவசம்

    பக்தியில் பரவசம்

    பக்திப் பாடல்கள் என்றாலும் சரி, சினிமாப் பாடல்கள் என்றாலும் சரி, அந்தந்தப் பாடல்களின் பாவத்தை அப்படியே பிழிந்து தருவதில் டிஎம்எஸ்ஸுக்கு நிகர் அவரேதான். அவரைத் தவிர வேறுயாராலும் இப்படி ஒரு வெரைட்டியை, வெர்சடாலிட்டியை யாருமே தந்ததில்லை.

    உருக வைத்த முருகன்

    உருக வைத்த முருகன்

    முருகன் பாடல்களை இவரைப் போல யாருமே பாடியதில்லை என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் டி.எம்.எஸ்.ஸின் முருகன் பாடல்கள் இன்று வரை ஒலித்துக் கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் பக்தி ரசம்.. பக்திப் பரவசம்...

    அழ வைத்தவர்.. உருக வைத்தவர்.. நெகிழ வைத்தவர்

    அழ வைத்தவர்.. உருக வைத்தவர்.. நெகிழ வைத்தவர்

    பாச மலர் படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரிக்கு நிகராக ஒவ்வொரு ரசிகரையும் அழ வைத்தவர் டி.எம்.எஸ். மலர்ந்தும் மலராத... பாடலை இப்போது கேட்டாலும் அழுது விடுகிறோம். அப்படி ஒரு அருமையான பாடல் அது. அதைவிட டி.எம்.எஸ். அதை ரசித்து, நெகிழ்ந்து, உருகிப் போய்ப் பாடிய பாடல். சிவாஜி பாடுகிறாரா, இல்லை டி.எம்.எஸ். பாடுகிறாரா என்றே தெரியாத அளவுக்கு கரைந்து போன ஒரு கந்தர்வக் குரல் அது... இந்தப் பாடல் இருக்கும் வரை உங்களை நினைத்து அழுது கொண்டே இருப்பார்கள் தமிழர்கள்....

    ஜவ்வாது மேடையிட்டு

    ஜவ்வாது மேடையிட்டு

    ஜவ்வாது மேடையிட்டு.. சர்க்கரையில் பந்தலிட்டு... கேட்க கேட்க போதையூட்டும் பாட்டு இது. அதிலும் டி.எம்.எஸ்.இந்தப் பாடலுக்கு காட்டிய குரல் பாவமும், வார்த்தைகளை உச்சரித்த விதமும், நிச்சயம் எந்த ஒரு பாடகருக்கும் வராத அசாத்திய திறமை என்பதில் சந்தேகம் இல்லை.. இப்படி ஒரு பாடலைஇப்போது பாட எந்தப் பாடகனுமே இல்லை என்று அடித்துக் கூறலாம். அப்படி ஒரு அசாதாரணமான, அலாதியான பாடல் இது.

    அமைதியான நதியினிலே ஓடம்...

    அமைதியான நதியினிலே ஓடம்...

    அப்படியே கண்ணை மூடிக் கொண்டு ராத்திரி நேரத்தில் இந்தப் பாட்டைக் கேட்டுப் பாருங்கள்.. எவ்வளவு மன பாரம் இருந்தாலும், மன வேதனை இருந்தாலும், சோகம் இருந்தாலும் அப்படியே பஞ்சு போல பறந்தோடி விடும்.. என்ன ஒரு அழகான பாடல்.

    காதலித்து வேதனையில் வாட வேண்டும்

    காதலித்து வேதனையில் வாட வேண்டும்

    கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்.. அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்... இந்தப் பாடலில் ஒரு காதல் தோல்வியின் விரக்தியை அப்படிக் கொடுத்திருப்பார் டி.எம்.எஸ். எழுதிய கண்ணதாசனைப் பாராட்டுவதா.. இல்லை குரலில் அத்தனை பாவத்தைக் காட்டி பாடலுக்கு உயிர் கொடுத்த டி.எம்.எஸ்.ஸின் குரலைப் பாராட்டுவதா... தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    கொடி அசைந்தததும்...

    கொடி அசைந்தததும்...

    அழகான காதல் பாடல்... கேட்க கேட்க மனசெல்லாம் லேசாகி காற்றில் பறக்கத் தூண்டும்.. அப்படி ஒருகாதல் குரல் இதைப் பாடிய டிஎம்எஸ்ஸுக்கும், பி.சுசீலாவுக்கும்.. இன்று வரை நாடி நரம்புப் புடைக்கும், காதல் உணர்வுகளைத் தூண்டும் கலாபப் பாடல்...

    எழுத எழுத அழுகை வருகிறது டி.எம்.எஸ்....தமிழ் உலகம் உங்களை நிச்சயம் மறக்க முடியாது.

    English summary
    TMS - has passed away. But his great songs will never fade away from the minds of Tamils all over the world.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X