எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின்குமார் திருமணம்!

By Staff

நடிகர் எஸ்.வி.சேகரின் மகனும், நடிகருமான அஸ்வின்குமார் கோபிச் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பெண்ணை மணக்கிறார்.

திரைப்பட நடிகரும், மைலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின்குமார் (வயது 27). இவர் வேகம் என்ற படத்தில் நடித்தார். இப்போது நினைவில் நின்றவள் என்ற படத்தில் நடிக்கிறார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் நகரசபையின் முன்னாள் துணைத்தலைவரும், காங்கிரஸ் மாநில செயலாளருமான மாதங்கி வெங்கட்ராமன் மகள் ஸ்ருதிக்கும் அஸ்வின் குமாருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். விரைவில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது.

மணமகள் ஸ்ருதி சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கிறார். ஸ்ருதியை பெண் பார்ப்பதற்காக எஸ்.வி.சேகர் தனது குடும்பத்துடன் நேற்று கோபிக்கு வந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், "எனது மகன் அஸ்வினுக்கும், ஸ்ருதி வெங்கட்ராமனுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த திருமண விழாவில், முதல்வர் கருணாநிதி, ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். திருமணம் கோபி அல்லது சென்னையில் நடைபெறும்.

பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் எனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிகாரப்பூர்வமாக தி.மு.க.வில் இணைய உள்ளேன். தற்போது, அஸ்வின் நடித்து முடித்து உள்ள நினைவில் நின்றவள் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் மணல் கயிறு சினிமா படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்கிறார்..." என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X