சினிமா பாடகி ரோஷினி திருமணம்

By Shankar

Roshini Singer
தமிழ் - தெலுங்கு சினிமா பின்னணி பாடகி ரோஷினி திருமணம் சென்னையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. சாப்ட்வேர் என்ஜினீயரை, அவர் மணக்கிறார்.

திருச்சியைச் சேர்ந்த தமிழ்ப் பாடகியான ரோஷினி, 13 வயதிலேயே தொடர்ந்து 37 மணி நேரம் பாடி, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர். பி.ஈ. (கம்ப்யூட்டர் சயன்ஸ்) பட்டதாரியான இவர், குத்து படத்தில், 'போட்டுத்தாக்கு' என்ற பாடலைப் பாடி, பின்னணி பாடகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து தாமிரபரணி படத்தில், 'கறுப்பான கையால என்ன புடிச்சான்,' யாரடி நீ மோகினி படத்தில், 'ஒ பேபி ஓ பேபி', பட்டியல் படத்தில் இளையராஜாவுடன் இணைந்து 'நம்ம காட்டுல...' ஆகிய பாடல்கள் மூலம் ரோஷினி பிரபலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிப்படங்களிலும் இதுவரை 300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

இவருக்கும், சென்னை வடபழனி குமரன் காலனியை சேர்ந்த அன்டனி டெரி ஜாக் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகன் அன்டனி, சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

ரோஷினி-அன்டனி டெரி ஜாக் திருமணம் சென்னை அமைந்தகரையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3-30 மணிக்கு நடக்கிறது.

தொடர்ந்து நாளை மாலை 6-30 மணிக்கு கீழ்ப்பாக்கத்தில் உள்ள லைட் கலையரங்கில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X