For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காமராஜர் அரங்கில் சிங்கம் புலி காதில் அஜித் சொன்ன விஷயம்... மறுநாளே மாறிப்போன அவரது வாழ்க்கை

    |

    சென்னை: சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் நடிகர் சிங்கம் புலி நடித்திருந்தார்.

    Recommended Video

    Liger Review | என்ன வம்புல மாட்டி விடுறீங்களா? - Cool Suresh

    பலருக்கும் நடிகராக தெரியும் சிங்கம் புலி அடிப்படையில் ஒரு இயக்குநர்.

    அஜித் நடித்திருந்த ரெட் மற்றும் சூர்யா நடித்திருந்த மாயாவி திரைப்படங்களை சிங்கம் புலிதான் இயக்கியிருந்தார்.

    ஆண்ட்ரியா தங்கைக்கு திருமணம் ஆகிடுச்சு.. வெளிநாட்டு மாப்பிள்ளை எப்படி இருக்காரு பாருங்க! ஆண்ட்ரியா தங்கைக்கு திருமணம் ஆகிடுச்சு.. வெளிநாட்டு மாப்பிள்ளை எப்படி இருக்காரு பாருங்க!

    உன்னைத் தேடி

    உன்னைத் தேடி

    இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் அஜித் நடித்திருந்த திரைப்படம் 'உன்னைத் தேடி'. இந்தப் படத்தின் கதையை சுந்தர்.சி அவர்களின் இல்லத்தில் 7 நாட்கள் எழுதியவர் சிங்கம் புலிதானாம். அந்த படத்தின்போது கிட்டத்தட்ட 60 நாட்கள் நடிகர் அஜித்திடம் கதை சொல்வது வசனம் சொல்வது என்று அவருடன் பயணம் செய்யும் வாய்ப்பு சிங்கம் புலிக்கு கிடைத்ததாம். படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் அந்தப் படம் ஓடுமா ஓடாதா என்ற சந்தேகம் அஜித்திற்கு இருந்ததாம். அப்போது கண்டிப்பாக இந்தப் படம் ஓடும் என்று சிங்கம் புலி கூற, அப்படி ஓடினால் என் படத்தை இயக்க உனக்கு வாய்ப்பு தருகிறேன் என சிங்கம் புலியிடம் கூறினாராம் அஜித்.

    சொன்னதை செய்த அஜித்

    சொன்னதை செய்த அஜித்

    உன்னைத் தேடி திரைப்படம் வெற்றிகரமாக ஓடி அதனுடைய நூறாவது நாள் விழாவை காமராஜர் மெமோரியல் ஹாலில் நடந்தபோது சிங்கம் புலியின் காதருகே சென்று,"நீ கூறியது போலவே படம் வெற்றியடைந்துவிட்டது. நாளை நிக் ஆர்ட்ஸில் சென்று உன்னுடைய கதையை சொல்லிவிட்டு வா என்று கூறினாராம். அப்படித்தான் ரெட் திரைப்படம் துவங்கியதாக சிங்கம் புலி கூறியுள்ளார்.

    மாயாவியில் ரெஃபெரன்ஸ்

    மாயாவியில் ரெஃபெரன்ஸ்

    தன்னுடைய இரண்டாவது படமான மாயாவியில் கூட நடிகர் சூர்யாவை அஜித் ரசிகர் போல காட்டியிருப்பார் சிங்கம் புலி. படம் இயக்கினாலும் அடுத்ததாக நான் கடவுள் படத்தில் இயக்குநர் குழுவில் பணியாற்றினார் சிங்கம் புலி. அதிலும் முதலில் அஜித் தான் கதாநாயகனாக நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அஜித் அடிச்சிட போறாரு

    அஜித் அடிச்சிட போறாரு

    ரெட் திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய ஒல்லிக்குச்சி உடம்புக்காரி பாடலில் ரெட்ட சுழி உள்ள பைய கட்டிலுக்கு கெட்ட பய என்கிற வரி இருக்கும். அதனை அஜித்திடம் சிங்கம் புலி காட்டியதற்கு,"யோவ் ஏற்கனவே பல பிரச்சனை ஓடிட்டுக்கிட்ருக்கு இந்த மாதிரிலாம் ஏன் எழுதி வாங்கிட்டு வர" என்று கேட்டாராம். பின்னர் அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் அதனை காட்ட,"அவருக்கு எங்கையா ரெட்ட சுழி இருக்கு?"என்று ஒளிப்பதிவாளர் கேட்க, கிராபிக்ஸ் மூலம் நாம் வைத்துக் கொள்ளலாமா என்று சிங்கம் புலி கேட்டிருக்கிறார். அதற்கு,"யோவ் இந்த மாதிரில்லாம் பண்ணா உன்ன அஜித் அடிச்சிடப் போறாரு, சும்மா இருயா" என்று ஒளிப்பதிவாளர் கூறியதாக ரெட் திரைப்படத்தைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களை சிங்கம் புலி கூறியுள்ளார்.

    English summary
    What Ajith Said to Singam Puli in Kamarajar Arangam, and his life changed the next day
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X