விஜய் நண்பர்கள் ஒன்று கூடினால் அவர் தரும் ஒரே ரியாக்‌ஷன்... அம்மா சொன்ன தகவல்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் ஏனைய இருக்கிறார் விஜய்.

இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க, நடிகர் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர், விஜய்யும் அவரது நெருங்கிய நண்பர்கள் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார்.

நெருங்கிய நண்பர்கள்

நெருங்கிய நண்பர்கள்

பெரும்பாலும் பிறரிடம் அதிகம் பேசாமல் ரிசர்வ்டு டைப்பாக இருக்கக்கூடியவர் விஜய். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தால் கூட ஷாட் ரெடி என்றால் கேரவனிலிருந்து ஸ்பாட்டுக்கு வருவார். ஷாட் முடிந்ததும் உடனே திரும்பிச் சென்று விடுவாராம். தேவையில்லாமல் யாருடனும் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ள மாட்டாராம். அப்படி இருக்கும் விஜய்க்கு நெருங்கிய நண்பர்கள் என்றால் நான்கு நபர்கள் தானாம். நடிகர்கள் சஞ்சீவ், ஸ்ரீநாத் மற்றும் திரைத்துறைக்கு சம்பந்தமில்லாத மனோஜ் மற்றும் ராம்குமார் ஆகிய நால்வரும் தான் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் என சோபா சந்திரசேகர் கூறியுள்ளார்.

சஞ்சீவ்

சஞ்சீவ்

நடிகர் விஜய் போலவே சினிமா பின்னணி கொண்டவர் தான் நடிகர் சஞ்சீவ். நடிகை மஞ்சுளாவின் தங்கை மகன். இவரது மனைவியும் சீரியல்களில் நடித்து கொண்டு இருக்கிறார். சினிமாவில் ஆரம்ப காலத்தில் நடித்து வந்தாலும் அதில் பெரிய வெற்றி பெறாத காரணத்தினால் டிவி பக்கம் நகர்ந்தார். அங்கு சீரியல்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தார். கடைசியாக ஒளிபரப்பான பிக் பாஸ் சீசனில் இவர் கடுமையான போட்டியாளராக திகழ்ந்தார். விஜய்யுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார்.

ஸ்ரீநாத்

ஸ்ரீநாத்

விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் ஸ்ரீநாத் நடித்திருப்பார். அதன் பின்னர் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவா இயக்கிய படங்களில் தொடர்ச்சியாக காணப்பட்டார். முத்திரை மற்றும் நடிகர் சந்தானம் நடித்திருந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

விஜய் ரியாக்‌ஷன்

விஜய் ரியாக்‌ஷன்

கல்லூரியில் தொடங்கிய இவர்களது நட்பு இன்று வரை அதே நெருக்கத்துடன் இருக்கிறதாம். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அங்கு ஸ்ரீநாத்தின் குரல் மட்டும் தான் பெரும்பாலும் கேட்குமாம் நகைச்சுவையாக பேசக்கூடிய ஸ்ரீநாத் எப்பவுமே கலகலவென்று பேசிக் கொண்டிருக்க விஜயின் சிரிப்பு சத்தம் மட்டும்தான் கேட்கும் என்று ஷோபா சந்திரசேகர் கூறியுள்ளார். நெருங்கிய நண்பர்களுடன் இருக்கும்போது கூட விஜய் அமைதியாக தான் இருப்பார் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

சாப்பாட்டு பிரியர் சஞ்சீவ்

சாப்பாட்டு பிரியர் சஞ்சீவ்

இவர்கள் எப்போது சந்தித்துக் கொண்டாலும் விஜய் தனது அம்மாவிடம் அனைத்து வகையான அசைவ உணவுகளையும் செய்யச் சொல்வாராம். ஷோபா சமைத்த உணவை சஞ்சீவ் ஒரு கட்டு கட்டுவார் என குறிப்பிட்டு கூறியுள்ளார். இவர்கள் படித்த லயோலா கல்லூரி அருகே இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில்தான் இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசி கொள்வார்களாம். வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றால் கூட இவர்களது பிள்ளைகளுக்கு விஜய் தான் பிடித்ததை வாங்கி கொடுப்பார் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X