எல்லாம் சரி, பிறந்தநாள் அன்று அஜித் எங்கப்பா? #HBDThalaAJITH

By Siva

சென்னை: அஜித் பிறந்தநாள் அன்று அவரை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

அஜித்தின் 47வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். நள்ளிரவில் அஜித் வீட்டுக்கு முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

பிறந்தநாள் அன்று அஜித்தை பார்க்க ஆசைப்படும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். ஏனென்றால் அவர் ஊரிலேயே இல்லை. மேலும் அவர் தனது பிறந்தநாளை பெரிதாக கொண்டாடவும் விரும்பவில்லையாம்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

அஜித்தே அவர் பிறந்தநாளை கொண்டாட விரும்பாவிட்டாலும் அவரின் ரசிகர்கள் ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் 4ம் தேதி ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் விஸ்வாசம் படப்பிடிப்பு துவங்க உள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு படக்குழு மும்பைக்கு செல்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

வாழ்த்து

அஜித்தின் பிறந்தநாளுக்கு விஜய் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ட்விட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் எலியும், பூனையுமாக மோதிக் கொண்டாலும் வாழ்த்தியுள்ளனர்.

ரசிகர்கள்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பவன் கல்யாண்

துல்கர் சல்மான் ரசிகர்கள், தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ரசிகர்கள் என்று பிற நடிகர்களின் ரசிகர்களும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X