எங்கிருந்துயா இந்த பையன புடிச்சிட்டு வந்த என வடிவேலு பற்றி கஸ்தூரி ராஜாவிடம் விசாரித்த கவுண்டமணி

சென்னை: நடிகர் வடிவேலு நடிப்பில் நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் மாமன்னன் போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

இதனைத் தவிர்த்து சந்திரமுகி பாகம் இரண்டு திரைப்படத்திலும் பி.வாசு இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் வடிவேலுவை திரையில் அறிமுகப்படுத்திய கஸ்தூரி ராஜா சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் வடிவேலு பற்றி பேசியிருக்கிறார்.

என் தங்கை கல்யாணி

என் தங்கை கல்யாணி

இயக்குநர் டி.ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் சிறிய வேடத்தில் நடித்திருப்பார் வடிவேலு. அதன் பிறகு 3 ஆண்டுகள் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஒரு முறை ராஜ்கிரனும் கஸ்தூரி ராஜாவும் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக மதுரைக்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் வடிவேலுவை அறிமுகப்படுத்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கிறான் என்று கூறினார்களாம். அப்போது ஏதாவது நடித்துக் காட்டு என்று இவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அர்ப்பணிப்பு

அர்ப்பணிப்பு

உடனே தரையில் விழுந்து கிழிந்து புரண்டு எழுந்து நடித்துக் காட்டி, சிவாஜி வசனங்கள் எல்லாம் பேசி பலவற்றை செய்துள்ளார். அப்போது, இந்தப் பையனுக்கு கதையில் ஏதாவது வாய்ப்பு இருக்குமா என்று கேட்க, எழுதிவிடலாம் என கஸ்தூரி ராஜா கூறினாராம். வடிவேலுவிடம் ஒன்றை செய்து காட்டச் சொன்னால் ஓராயிரம் செய்து காட்டுவார். அவரே நிறைய நகைச்சுவை காட்சிகள் கூறுவார், திறமைகளின் பேரூற்று அவர் என்று பாராட்டியிருக்கிறார்.

நேரம் தவறாமை

நேரம் தவறாமை

அதனைத் தொடர்ந்து தான் இயக்கிய படங்களில் தொடர்ச்சியாக நகைச்சுவை கதாபாத்திரங்கள் கொடுத்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் வடிவேலு பயங்கர பிசியானதால் என்னுடைய படத்திற்கு ஷூட்டிங்கிற்கு தாமதமாக வர ஆரம்பித்தார். அப்போது வடிவேலுவை அழைத்து நேரம் தவறாமை மிக முக்கியம். நீ பிசியாகிவிட்டதால் இனி உன்னால் படப்பிடிப்பிற்கு சரியாக வர முடியுமா என்று தெரியவில்லை. அதனால் இனி நான் உன்னை கூப்பிட மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். அதன் பிறகு இன்று வரை தன்னுடைய படங்களில் வடிவேலுவை கஸ்தூரி ராஜா நடிக்க வைக்கவில்லையாம்.

கவுண்டமணி விசாரிப்பு

கவுண்டமணி விசாரிப்பு

முதல் படத்தில் கவுண்டமணியுடன் ஒரு காட்சியில் நடிக்க வைத்தேன். அந்தக் காட்சியில் நடித்து முடித்தவுடன் கவுண்டமணி தன்னை அழைத்து,"யார் சார் இவன்... எங்கிருந்து புடிச்சீங்க" என்று கேட்டாராம். அதே படத்தில் இன்னொரு காட்சியில் கவுண்டமணி வடிவேலுவை உதைப்பது போல் சூழ்நிலை இருந்ததாம். அப்போதும்,"அண்ணே இன்னொரு நாலு மிதி சேர்த்து மிதிங்கண்ணே... அப்படியாவது எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கெடைக்கட்டும்" என வடிவேலு கூறினார். அப்போது, தனக்கே மாற்றாக வரக்கூடியவர் வடிவேலு என்று கவுண்டமணிக்கு தெரியாது என கஸ்தூரி ராஜா அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X