வீட்டிற்கு வந்த நாகேஷை பார்த்து யார் இவர் என்று கேட்ட கமலின் மனைவி... நாகேஷ் செய்த செயல் தெரியுமா?
சென்னை: விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கமல் ஹாசன் தன்னுடைய அடுத்த படத்தை இன்னும் அறிவிக்கவில்லை.
ஆனால் இயக்குநர்கள் பா.ரஞ்சித், முத்தைய்யா உள்ளிட்டோர் அடுத்தடுத்து கமல் படங்களை இயக்க போவதாக பேச்சு வார்த்தை அடிபட்டது. இந்நிலையில் விருமன் படத்தை முடித்த முத்தைய்யா தன்னுடைய அடுத்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிவிட்டார்.
இயக்குநர் பா.ரஞ்சித் தன்னுடைய படங்களில் பிசியாக இருக்கிறார். அந்தப் படங்களை முடித்த பின்னர் கமல் படத்தை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம், இந்தியன் 2 திரைப்படத்தை மீண்டும் ஆரம்பிக்கவும் பேச்சு வார்த்தைகள் நடக்கிறது.

முன்னோடிகளுக்கு மரியாதை
எப்போதுமே மூத்த நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் மரியாதை கொடுப்பதில் கமல் ஹாசன் தவர மாட்டார். காக்கா ராதாகிருஷ்ணன் உள்பட பல பழைமையான நடிகர்களை வெவ்வேறு மொழிகளில் இருந்தும் அழைத்து வந்து தன்னுடைய படங்களில் நடிக்க வைத்துள்ளார். அது போல நடிகர் நாகேஷை எப்போதுமே அவருடைய படங்களில் பார்க்கலாம்.

முதல் குழந்தை
முதலில் வாணி கணபதியை திருமணம் செய்தார் கமல். அவர்களுக்கு குழந்தை இல்லை. ஆனால் சரிக்காவை இரண்டாவது திருமணம் செய்த பின்னர் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள். முதல் குழந்தையாக ஷ்ருதி ஹாசன் பிறந்த போது, நடிகர் நாகேஷ் கமல் வீட்டிற்கு சென்றிருந்தாராம். அப்போது கமல் ஹாசன் சரிகாவை ஹாலுக்கு வரும்படி அழைத்தபோது, நாகேஷை முன் பின் தெரியாததால் யார் என்று கேட்டாராம். அதனை கண்ணாடியில் கவனித்துவிட்டாராம் நாகேஷ்.

நாகேஷ் எனும் மேதை
மும்பையில் பிறந்து வளர்ந்த சரிகாவிற்கு நாகேஷ் தெரியாததால் அப்படி கேட்டுள்ளார். அப்போது, தான் நடித்த சர்வர் சுந்தரத்தின் இந்தி ரீமேக்கான மே சுந்தர் ஹூ என்ற திரைப்படத்தை சுட்டிக் காட்டி, அதில் வரும் ஒரு எமோஷனல் காட்சியை கமல் வீட்டில் சரிகா முன்பு நடித்துக் காட்டி, நான்தான் அந்தப் படத்தின் ஒரிஜினல் பதிப்பில் நடித்த நாகேஷ் என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தசாவதாரம்
ஒரே ஒரு நபருக்காக, வீட்டில் நடித்த அந்த நாகேஷை எனக்கு அவ்வளவு பிடிக்கும். கலைஞன் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று கமல் ஹாசன் அவருக்கு புகழாரம் சூட்டுவார். நடிகர் நாகேஷை காமெடி நடிகராக மட்டும் பார்க்காமல், அவரை வில்லன், எமோஷனலான அப்பா, பிணம் போன்ற பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளார். எதேச்சையாக நாகேஷ் நடித்த கடைசி திரைப்படமாக கமலுடைய தசாவதாரம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











