நயன்தாரா, சமந்தா, த்ரிஷா, தமன்னா... தமிழ் ஹீரோயின்களின் லேட்டஸ்ட் சம்பளம் இதுதான்!

By

சென்னை: தமிழ் சினிமாவில், ஹீரோயின்கள் வாங்கும் லேட்டஸ்ட் சம்பள விவரம் இப்போது தெரியவந்துள்ளது.

பொதுவாக சினிமாவில் ஹீரோயின்களுக்கான சம்பளம், ஹீரோக்களை ஒப்பிடும் போது மிக மிகக் குறைவு. தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்தி, தெலுங்கு உட்பட எந்த இந்திய மொழி படங்கள் என்றாலும் இதுதான் நிலமை.

நம் ஹீரோக்கள் நூறு கோடி சம்பளத்தை தொட்டாலும் ஹீரோயின்களின் சம்பளம் இன்னும் சில கோடியை தாண்டவில்லை என்பது பாரபட்சம்தான்.

ஹீரோயின்களின் ஆதங்கம்

ஹீரோயின்களின் ஆதங்கம்

இதற்கு, கோடம்பாக்கம் குமஸ்தாக்கள் சொல்லும் காரணம், சினிமா பிசினஸ் ஹீரோக்களை நம்பித்தானே இருக்கிறது என்பதுதான். இதைத்தான் எப்போதும் சொல்லி வருகிறார்கள். அதற்காக இவ்வளவு குறைவாகவாகவா கொடுப்பார்கள் என்பது ஹீரோயின்களின் ஆதங்கம். இதைத்தவிர அவர்களால் வேறெதுவும் செய்துவிட முடியாது. இது காலங்காலமாக நடக்கும் விஷயம்.

இது ஒரு புறமிருக்க, தமிழ் சினிமா ஹீரோயின்களின் லேட்டஸ்ட் சம்பள நிலவரம் பற்றிய தகவல் இப்போது தெரிய வந்துள்ளது. சில நடிகைகளின் மானேஜர்கள் சொன்னதின் அடிப்படையிலான சம்பளம் விவரம்தான் இது. இது நூறு சதவிகிதம் உண்மையாகவும் இருக்கலாம். அல்லது 98 சதவிகிதம் உண்மையாக இருக்கலாம். மற்றபடி பெரிய வித்தியாசம் இல்லை என்பதை கவனிக்க.

நயன்தாரா

நயன்தாரா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார். சில வருடங்களுக்கு முன் இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாக, சம்பளத்தை உயர்த்தினார் நயன்தாரா. பிறகு அவருக்காகவே படங்கள் ஓடுகின்றது என்ற தயாரிப்பாளர்களும் தானாக முன்வந்து கேட்டதைக் கொடுத்தனர். பெரிய படங்கள், பெரிய ஹீரோ என்றால் அவர் சம்பளம் வேறு. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ஜோடியாக அவர் நடித்த தர்பார் படத்துக்கு ரூ.5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளார் என்கிறார்கள்.

தமன்னா

தமன்னா

விஷாலுடன் நடித்த ஆக்‌ஷன் படத்துக்குப் பிறகு தெலுங்கு மற்றும் இந்தியில் நடித்துவருகிறார் தமன்னா. இடையில் வெப் சீரிஸ் ஒன்றும் இருக்கிறது. ஆக்‌ஷன் படத்தில் முதலில் அவருக்கு பேசிய சம்பளம் ஒன்றரை கோடி. பிறகு கால்ஷீட் மீண்டும் தேவைப்பட்டு ஷூட்டிங் நடத்தியதால் அதிகமாக ரூ.50 லட்சம் என ரூ.2 கோடி வாங்கியிருக்கிறார். இது தமிழில், தெலுங்கு மற்றும் இந்தியில் அவர் சம்பளம் இன்னும் அதிகம். அதாவது இரண்டரை கோடி முதல் மூன்று கோடிவரை. ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்றால் ஒரு கோடி ரூபாயாம்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

'கோமாளி'க்குப் பிறகு கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இந்தப் படத்தில், அவர் நடிக்கும் காட்சிகளின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இது மெகா பட்ஜெட் படம் என்பதால், இதன் சம்பளம் அவரது மற்றப் படங்களுக்குப் பொருந்தாது என்கிறார்கள். பொதுவாக, அவர் ஒரு கோடியே ஐம்பது லட்சம் வாங்குகிறாராம். இந்திக்கு தனி சம்பளம்.

நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா

விஜய் சேதுபதியுடன் நடித்த 96 படத்தின் சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு ரஜினியின் பேட்ட படத்தில் நடித்தார் த்ரிஷா. இப்போது மலையாளத்தில் உருவாகும் ராம் படத்தில், மோகன்லாலுக்கு மனைவியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். அவர் வேறு படங்களில் அவர் கமிட் ஆகவில்லை என்றாலும் ராம் படத்துக்காக, அவர் ரூ.1 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.

சமந்தா

சமந்தா

தமிழ், தெலுங்கு இரண்டிலும் பேலன்ஸ் செய்து நடித்துவருகிறார் சமந்தா. இப்போது அங்கு 96 படத்தின் ரீமேக்கான ஜானுவில் நடித்துவருகிறார். தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார். ஹிட் ஹீரோயினாக இருந்தாலும் சம்பளம் அதிகம் கேட்பதில்லை என்பது இவருக்கான பாராட்டு பத்திரம். இவர் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வாங்குகிறார் என்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

மலையாளத்தில் மரக்கார்: அரபிகடலண்டே சிம்ஹம் படத்திலும் தெலுங்கில் சில படங்களிலும் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ், தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் நடித்துவருகிறார். எண்பது லட்சம், தொண்ணூறு லட்சம் என்று வாங்கிவந்த கீர்த்தி, இப்போது ஒரு கோடிக்கு மேல் கேட்கிறார் என்பது லேட்டஸ்ட் தகவல்.

அனுஷ்கா ஷெட்டி

அனுஷ்கா ஷெட்டி

அனுஷ்கா நடித்து நிசப்தம் படம் மட்டுமே வர இருக்கிறது. வேறு படங்களில் நடிக்கவில்லை. அவர் தனது சம்பளமாக இரண்டு கோடி வரை கேட்கிறார். இவர்களுக்கு அடுத்த நிலையில் ராஷ்மிகா மந்தனா ரூ.90 லட்சம், ஹன்சிகா 75 லட்சம், ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.50 டூ ரூ.70 லட்சம், நிதி அகர்வால் ரூ.40 என வாங்குவதாகச் சொல்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X