twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யாரிந்த போங்க்? 4 விருதுகளை அள்ளிய பாரசைட் இயக்குனரின் முதல் படம், 'குரைக்கிற நாய் கடிக்காது'

    By
    |

    Recommended Video

    List of all the winners at Oscars 2020 - Video

    லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கரில் நான்கு விருதுகளை அள்ளி இருக்கிறது, பாரசைட் படம். இந்த விருதை வென்றுள்ள முதல் கொரிய படம் இது.

    சிறந்த படம், திரைக்கதை, இயக்குநர், வெளிநாட்டு படம் ஆகிய பிரிவுகளில் விருதுகளை பெற்றிருக்கும் இதன் இயக்குனர், போங்க் ஜூன் ஹோ (Bong Joon-ho).

    பல சிறந்த இயக்குனர்களை தந்திருக்கும் கொரியா, இப்போது போங்க் ஜூன் ஹோவையும் தந்திருக்கிறது. யார் இந்த போங்க்?

     இப்படி செஞ்சிட்டீங்களே.. ஆஸ்கர் விழாவில் பங்கேற்காத பிரியங்கா சோப்ரா.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்! இப்படி செஞ்சிட்டீங்களே.. ஆஸ்கர் விழாவில் பங்கேற்காத பிரியங்கா சோப்ரா.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

    பிலிம் கிளப்

    பிலிம் கிளப்

    சின்ன வயதிலேயே எல்லோரையும் போல இவருக்கு சினிமா காதல். படிக்கும்போது, நண்பர்களுடன் இணைந்து யெல்லோ டோர் என்ற பிலிம் கிளப்பை ஆரம்பித்திருக்கிறார் போங்க். அப்போதே லுக்கிங் பார் பாரடைஸ், வொயிட்மேன் என்ற இரண்டு குறும்படங்களை இயக்கினார். இதற்கு வரவேற்பு கிடைத்ததோ, இல்லையோ, அனுபவம் கிடைத்தது!

    டைட்டிலில் பெயர்

    டைட்டிலில் பெயர்

    பிறகு கொரிய திரைப்பட அகாடமியில் சேர்ந்து 2 வருடம் சினிமா கற்றுக்கொண்ட போங்க், குறும்படங்களாக எடுத்துக் குவித்தார். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அனுபவம். பிறகு நேரடி அனுபவத்துக்காக, சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக சேர்ந்து சினிமா கற்றார். பல்வேறு படங்களில் பணியாற்றிய பிறகு செவன் ரீசன்ஸ் ஹொய் பியர் இஸ் பெட்டர் தேன் எ லவ்வர்' என்ற படத்தின் டைட்டிலில் இவர் பெயர் வந்தது.

    குரைக்கிற நாய் கடிக்காது

    குரைக்கிற நாய் கடிக்காது

    அடுத்து திரைக்கதை, உதவி இயக்குனர் என்று 'மோடல் கேக்டஸ்' என்ற பட டைட்டிலில் பெயர் வர, அடுத்து படம் இயக்க வாய்ப்பு வந்தது போங்குக்கு. இவரது முதல்படம், பார்க்கிங் டாக்ஸ் நெவர் பைட் (குரைக்கிற நாய் கடிக்காது). டார்க் காமெடி படமான இது, பல திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ள, அடுத்து பெரிய பட்ஜெட் படத்தை இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது போங்கை!

    த ஹோஸ்ட்

    த ஹோஸ்ட்

    அந்த படம், மெமரிஸ் ஆஃப் மர்டர். நாடகம் ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் ஹிட்டாக, விருதுகளாக குவிந்தது போங்குக்கு. வெனிஸ், கான் திரைப்பட விழாக்களுக்கும் சென்றது இந்தப் படம். இயக்குனர் போங்க் மார்க்கெட் ஏறியது. இருந்தாலும் இவரது மூன்றாவது படமான த ஹோஸ்ட் (The Host)தான், அவரை சர்வதேச அளவுக்கு உயர்த்தியது.

    வசூல் சாதனை

    வசூல் சாதனை

    இந்தப் படம் கொரியாவில் வசூல் சாதனை படைத்தது. அதாவது எந்த படத்துக்கும் இல்லாத அளவு 13 மில்லியன் டிக்கெட்டுகள் விற்று சாதனைப் படைத்தது. பிறகு இதன் ரீமேக் உரிமையை வாங்க கடும்போட்டி. ஹாலிவுட் நிறுவனமான யுனிவர்சல் ஸ்டூடியோ ஹாலிவுட் ரீமேக் உரிமையை வாங்கியது.

    இன்னும் உயர்த்தியது

    இன்னும் உயர்த்தியது

    இவரது நான்காவது படம், மதர் (Mother). கொலைக் குற்றச்சாட்டில் இருந்து தனது ஊனமுற்ற மகனை காப்பாற்ற போராடும் ஒரு அம்மாவை பற்றிய படம் இது. உள்ளூரில் இருந்து கான் திரைப்பட விழா வரை பல்வேறு விழாக்களில் கவனிக்கப்பட்ட இந்தப் படம் போங்க் ஜூன் ஹோவை இன்னும் உயர்த்தியது.

    ஸ்னோபியர்சர்

    ஸ்னோபியர்சர்

    அடுத்து பிரெஞ்ச் நாவலை தழுவி இவர் இயக்கிய சயின்ஸ் பிக்சன் படமான ஸ்னோபியர்சர் (Snowpiercer), அடுத்து இயக்கிய ஆக்‌ஷன் அட்வெஞ்சரான ஓக்ஜா ஆகிய படங்கள் போங்க் ஜூன் ஹோவை அடுத்தடுத்த உயரங்களுக்கு கொண்டு செல்ல, பிறகு அவர் இயக்கியதுதான் பாரசைட்!. இதுதான் 4 ஆஸ்கர் விருதுகளை அள்ளித் தந்திருக்கிறது இப்போது.

    English summary
    who is Parasite director Bong Joon-ho?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X