அஜித் பற்றி தப்பா பேசுறவங்க அயோக்கியர்கள்... பிரபல விமர்சகர் காட்டம்!

சென்னை : நடிகர் அஜித்- ஹெச் வினோத் கூட்டணியில் வலிமை திரைப்படம் மிக பிரமாண்டமாக வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது

ஹெச் வினோத் அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக மீண்டும் இணையும் படத்திற்கு அஜித் 61 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலில் பேசியுள்ள பிரபல விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் அஜித் பற்றி தப்பா பேசுறவங்க அயோக்கியர்கள் என காட்டமாக பேசியுள்ளார்

ஹெச் வினோத் அஜித் கூட்டணி

ஹெச் வினோத் அஜித் கூட்டணி

அனைத்து தரப்பு வயதினரும் ரசிக்கும் வகையில் தொடர்ந்து நல்ல கமர்சியல் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் அஜித் தன்னுடைய படங்களில் சமூகத்திற்கு முக்கியமான கருத்துகளையும் பேசி வருகிறார். சதுரங்கவேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று என வித்தியாசமான படங்களை இயக்கி வந்த இயக்குனர் ஹெச் வினோத் அஜித் உடன் கூட்டணி அமைத்த நேர்கொண்ட பார்வை மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்தியில் அமிதாப் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

ஹாலிவுட் லெவலில்

ஹாலிவுட் லெவலில்

நேர்கொண்ட பார்வை கொடுத்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் ஹெச் வினோத் கூட்டணி இணைந்த திரைப்படம் வலிமை. போனிகபூர் ஹாலிவுட் லெவலில் பிரமாண்டமாக தயாரித்த இந்த படம் வியக்க வைக்கும் சண்டைக் காட்சிகள், பைக் ரேசிங் காட்சிகள் என பிரமாத படுத்திருந்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு பிப்ரவரி 24ஆம் தேதி வெளியான வலிமை கலவையான விமர்சனங்களை பெற்றது.இந்த நிலையில் ஹெச் வினோத் அஜித் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது அஜித் 61 வது படத்தை இயக்க தயாராகி வருகிறார். அதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தை தொடர்ந்து அஜித் 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

ரசிகர்களை உசுப்பேற்ற மாட்டார்

ரசிகர்களை உசுப்பேற்ற மாட்டார்

இந்த நிலையில் பிரபல நடிகரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தனியார் யூடியூப் சேனலில் அஜித் குறித்து பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியதாவது அஜித் பற்றி தவறாக பேசுபவர்கள் அயோக்கியர்கள். அஜித் ஒரு காலமும் தன்னுடைய படங்களை வந்து பாருங்கள் என்று சொன்னதே இல்லை. ரசிகர்களை உசுப்பேற்ற மாட்டார்.அதே போல தன்னுடைய படத்திற்கு தானே புரமோஷன் செய்து கொள்ள மாட்டார்.

Recommended Video

தல அஜித் கூட படம் பண்ணனும் | தமிழ் Youngest Director| Sona Sokkama- First Single
அஜித் பற்றி தப்பா பேசுறவங்க அயோக்கியர்கள்

அஜித் பற்றி தப்பா பேசுறவங்க அயோக்கியர்கள்

தன்னுடைய படம் ரிலீசாகும்போது கட்டவுட்டுக்கு பால் ஊற்ற வேண்டும் என சொல்ல மாட்டார் படம் பிடித்திருந்தால் வந்து பாரு உனக்கு ஏதாவது பணிவிடை செய்ய வேண்டுமென்றால் அப்பா அம்மாவிற்கு செய் என்றுதான் அஜித் வலியுறுத்தி வருகிறாரே தவிர என் படத்தை வந்து 10 தடவை பாரு என அவர் சொல்லிக் கொள்வதே இல்லை. எல்லா நல்ல படங்களையும் பாருங்கள் என்னுடைய நல்ல படங்களையும் பாருங்கள் பாராட்டுங்கள் அதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அடக்க ஒடுக்கமாக சொல்லிக் கொண்டு இருப்பவர் அஜித், அவரைப் பற்றி தவறாக பேசுபவர்கள் அயோக்கியர்கள் எனத் தனியார் யூடியூப் சேனலில் பயில்வான் ரங்கநாதன் அஜித் பற்றி கூறியிருப்பது இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X