கருப்பு சிவப்பு சைக்கிளில் விஜய் ஏன் போனார்... சஞ்சீவ் உடைத்த ரகசியம்!!

சென்னை: கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தற்சமயம் ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுக அரசு ஜெயித்து விட வேண்டும் என்பது பலருடைய எண்ணமாக இருந்தது.

மறுபக்கம் பத்து ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த அதிமுக அணி மத்திய அரசுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்தித்தது.

அந்தச் சமயத்தில் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தது ஏன் என்று நடிகர் சஞ்சீவ் தற்சமயம் கூறியுள்ளார்.

நெருங்கிய நண்பர்கள்

நெருங்கிய நண்பர்கள்

சினிமா துறையில் இருக்கக்கூடிய நடிகர்கள் விஜய் சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். விஜய் வீட்டில் இவர்கள் ஒன்றுகூடும் போது ஸ்ரீநாத் பேசும் சத்தம் மட்டும் கேட்குமாம் விஜய் சிரிக்கும் சத்தம் மட்டும் கேட்குமாம். அதேபோல இவர்கள் வருகிறார்கள் என்று தெரிந்தால் உடனே தனது அம்மாவிடம் அனைத்து வகையான அசைவ உணவுகளையும் சமைத்து வைக்க சொல்வாராம் விஜய். சஞ்சீவ் சரியான சாப்பாட்டு பிரியர் என்றும் அனைத்தையும் வெளுத்து வாங்கி விடுவார் என்றும் சமீபத்தில் சோபா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இடையில் சண்டை

இடையில் சண்டை

என்னதான் விஜய் முன்னணி நடிகராக இருந்தாலும் நண்பர்களுக்குள் வரும் சண்டை போல இவர்களுக்குள்ளும் அவ்வப்போது சண்டைகள் வருமாம். அப்படி வந்தால் விஜய் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விடுவாராம். ஒருமுறை விஜய்க்கும் இன்னொரு நண்பனுக்கும் பிரச்சனை இருந்தபோது என்ன ஏதென்று விசாரிக்காமல் இன்னொரு நண்பருக்கு ஆதரவாக பேசி விஜய்யை திட்டி விட்டாராம் சஞ்சீவ். கோபத்தில் சோஃபாவின் கைப்பிடியில் வேகமாக தட்டி சடார் என்று எழுந்து நான் வரேன் என்று சொல்லிவிட்டு சென்ற விஜய், கிட்டத்தட்ட ஆறு மாத காலம் சஞ்சீவிடம் பேசாமல் இருந்தாராம். அதன் பின்னர்தான் இருவரும் சமாதானமாகியுள்ளனர்.

சைக்கிள் பயணம்

சைக்கிள் பயணம்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியலும் சினிமாவும் தொடர்புடன்தான் இருந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த நடிகர் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்ற பல கேள்விகளுடன் தேர்தல் நடந்தது. அப்படி இருக்கும்போது வாக்களிக்கும் நாளன்று விஜய் காரில் செல்லாமல் திடீரென்று ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு வாக்களிக்கச் சென்றார். அந்த சைக்கிள் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருந்ததால் அவருடைய ஆதரவு திமுகவிற்குதான் என்று அனைத்து ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டனர்.

சஞ்சீவ் உடைத்த சீக்ரட்

சஞ்சீவ் உடைத்த சீக்ரட்

இது தொடர்பாக சமீபத்தில் சஞ்சய் கொடுத்துள்ள பேட்டியில் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சஞ்சீவ், செய்திகளை பார்த்துவிட்டு தனக்கு சிரிப்பு வந்ததாகவும் பிறகுதான் விஜய்யிடமே ஃபோன் பண்ணி கேட்டபோது, போலிங் பூத் வீட்டிற்கு பின்னால்தான் இருக்கிறது. நான் காரை எடுத்துக் கொண்டு சென்றால் எனக்குப் பின்னால் ஊடகங்களும் ரசிகர்களும் வண்டிகளில் பின்தொடர்ந்து போலிங் பூத் அருகே பார்க் செய்து அந்த இடத்தை ஸ்தம்பிக்க செய்துவிடுவர். அதனால்தான் நான் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றேன். வேறு எந்த காரணமும் இல்லை என்று விஜய் கூறியதாக சஞ்சீவ் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X