விக்ரம் படத்தில் தொந்தி காட்டி நடிக்க இதுதான் காரணம்...விஜய் சேதுபதி சொன்ன சுவாரசிய தகவல்!

சென்னை: இப்போதுள்ள இளம் நடிகர்களில் விஜய் சேதுபதியின் அளவிற்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் யாருமில்லை என்று சொன்னால் அது மிகையாகாது

தமிழ் சினிமாவை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் விஜய் சேதுபதிக்கு மிகப் பெரிய மார்க்கெட் உருவாகி வரும் நிலையில் பல மொழிகளில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் விக்ரம் படத்தில் பேர் பாடியில் நடித்த காரணம் குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார்

ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி

ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி

ஒரே மாதிரியான படங்களில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருப்பதாலேயே இவரை மக்கள் செல்வன் என பலரும் அழைத்து வருகின்றனர். தென்மேற்கு பருவக்காற்று மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி சுந்தரபாண்டியன், நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், பிட்சா என ஆரம்பமே அமர்க்களமாக வித்தியாசமான கதைகளில் தோன்றிய விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார்

தெலுங்கு திரையுலகிலும் சீறிப் பாய்ந்து

தெலுங்கு திரையுலகிலும் சீறிப் பாய்ந்து

முன்னணி நடிகராக இருக்கும் போது வில்லனாக கதாபாத்திரத்தில் நடிக்க அவ்வளவு எளிதில் எந்த நடிகரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் ஆனால் விஜய் சேதுபதி தன்னுடைய இமேஜ் பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல் வில்லன் கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பட்டையை கிளப்பிக் கொண்டு உள்ளார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் கொடூர வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் புகழ் தெலுங்கு திரையுலகிலும் சீறிப் பாய்ந்து கொண்டுள்ளது. மாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து விஜய்சேதுபதிக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து வந்துகொண்டே உள்ளது

சட்டை இல்லாமல் பேர் பாடியுடன் இன்ட்ரோ

சட்டை இல்லாமல் பேர் பாடியுடன் இன்ட்ரோ

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் வித்தியாசமான தோணியில் வித்தியாசமான மாடுலேஷனில் வில்லனாக கலக்கியிருப்பார். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் விஜய் சேதுபதி சட்டை இல்லாமல் பேர் பாடியுடன் இன்ட்ரோ குடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருப்பார். சாதாரணமாக எந்த ஒரு நடிகரும் நடிக்க தயங்கும் இப்படியான ஒரு காட்சியில் விஜய் சேதுபதி நடித்த காரணம் லோகேஷ் கனகராஜ் தான் என தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Recommended Video

விஜய், கமல் சூட்டிங் ஸ்பாட்ல எப்படி நடந்துக்கொள்வார்? Lokesh Kanagaraj Pressmeet | Kamal | Vikram
லோகேஷ் கேட்டார்

லோகேஷ் கேட்டார்

சட்டையில்லாமல் நடிக்க வேண்டும் என லோகேஷ் சொன்னவுடன் அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.. நான் பனியனுடன் வரவா என்று கேட்டேன். இல்லை இல்லை சட்டையில்லாமல் வாங்க அப்பதான் நல்லா இருக்கும் இந்த கதாபாத்திரத்திற்கு அதுதான் வேண்டுமென லோகேஷ் கேட்டார். ஒரு இயக்குநரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுதான் நடிகரின் கடமை எனவே பேர் பாடியுடன் பயந்தபடியே நடித்தேன். கட்டாயமாக படம் வெளியானால் செமையாக கலாய்ப்பார்கள் என நினைத்தேன் ஆனால் ரசிகர்கள் அதை நல்ல மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர் என விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X