twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போயிட்டான்.. போயிட்டான்.. ஒரே அடியா தள்ளிப் போயிட்டான்.. கேஜிஎஃப் 2 ரிலீஸ் தள்ளிப் போக காரணம் என்ன?

    |

    சென்னை: கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்த ஆண்டாவது வெளியாகுமா என எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அதன் ரிலீஸை அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போட்டுள்ளனர்.

    நாளை முதல் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திறக்கப்பட உள்ள நிலையில், பல புதிய படங்கள் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இப்படி கேஜிஎஃப் 2 ஒரே அடியாக அடுத்த சம்மருக்கு செல்ல பல காரணங்கள் உள்ளன.

    அக்‌ஷய் குமாரின் பெல் பாட்டம் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியாகி மிகப் பெரிய வசூல் இழப்பை சந்தித்து இருப்பதும் அதில் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    ரிலீஸ் தேதி அறிவிப்பு

    ரிலீஸ் தேதி அறிவிப்பு

    கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் பல ரிலீஸ் தேதிகள் இதுவரை அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த படத்தின் நாயகன் ராக்கி பாய் நடிகர் யஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது இப்போது இருக்கும் சூழ்நிலை காரணமாக கேஜிஎஃப் சாப்டர் 2 அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரும் என அறிவித்துள்ளார்.

    தள்ளிப் போயிட்டான்

    தள்ளிப் போயிட்டான்

    கேஜிஎஃப் படத்தில் வந்துட்டான்.. வந்துட்டான் என ராக்கி பாயின் வரவை கொண்டாடிய ரசிகர்கள் தற்போது செம கடுப்பாகி ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி, அடுத்த ஆண்டு பொங்கல் என ஏகப்பட்ட பண்டிகை நாட்கள் இருக்க ஏன் ஒரே அடியாக ஏப்ரல் மாதத்திற்கு செல்ல வேண்டும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    தியேட்டரில் தான்

    தியேட்டரில் தான்

    பெரிய பட்ஜெட் படங்களை அவ்வளவு எளிதாக ஒடிடிக்கு விற்பனை செய்ய எந்த பெரிய இயக்குநர்களும் நடிகர்களும் முன் வர மாட்டார்கள். கேஜிஎஃப் 2 கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாகும் என்பதில் படக்குழுவினர் அனைவரும் தீர்மானமாக உள்ளனர்.

    தாமதம் ஏன்

    தாமதம் ஏன்

    தியேட்டர்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் திறக்கப்பட்டு வரும் நிலையில், இப்படி ஒரே அடியாக அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க பல காரணங்கள் உள்ளனவாம். இப்போதைக்கு தியேட்டரில் படத்தை வெளியிட்டால் நினைத்த வசூல் கிடைக்காது என்பது தான் அதில் முதல் காரணம்.

    அடிவாங்கிய பெல்பாட்டம்

    அடிவாங்கிய பெல்பாட்டம்

    நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவான பெல்பாட்டம் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகின. அந்த படத்தின் முதல் நாள் வசூல் இந்தியளவிலேயே வெறும் 2 கோடி ரூபாய் மட்டும் தானாம். 30 முதல் 40 கோடி வசூலை குவிக்கும் பாலிவுட் படத்திற்கே இந்த நிலைமை என்பதால், பெரிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் முன் வைக்க நினைத்த கால்களை பின் வைத்து வருகின்றனர்.

    தீபாவளிக்கு வந்தாலும்

    தீபாவளிக்கு வந்தாலும்

    கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்பட்டாலும் தீபாவளி போன பண்டிகைகளை டார்கெட் செய்து புதிய படங்களை வெளியிட்டாலும், மக்கள் கூட்டம் மீண்டும் தியேட்டர் பக்கம் வருமா? என்கிற அச்சம் பல தயாரிப்பாளர்களுக்கும் இருப்பது தான் கேஜிஎஃப் தள்ளிப் போக காரணம் என்கின்றனர்.

    ஏற்கனவே புக்கிங்

    ஏற்கனவே புக்கிங்

    அதை பற்றியெல்லாம் கவலைப் படாமல் சில பெரிய படங்கள் ஏற்கனவே தீபாவளி பண்டிகையை குறிவைத்திருப்பதால், பான் இந்திய படமாக வெளியாகவுள்ள கேஜிஎஃப் 2 நிறுத்தி நிதானமாக வந்து எதிரிகளை சுட்டு வீழ்த்தலாம் என சம்மரை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

    பொங்கலும் ஹவுஸ்ஃபுல்

    பொங்கலும் ஹவுஸ்ஃபுல்

    தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை உள்ளிட்ட படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன. அதே போல பொங்கலுக்கு மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டாவும் கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள சலார் திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனால், பொங்கலுக்கும் மான்ஸ்டர் வரமுடியாமல் போய்விட்டது.

    சம்மரிலும் சிக்கல்

    சம்மரிலும் சிக்கல்

    2022ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி கேஜிஎஃப் 2 படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தையும் அதே தேதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம்.

    அடுத்த ஆண்டு எப்படி இருக்குமோ

    அடுத்த ஆண்டு எப்படி இருக்குமோ

    2020 மற்றும் 2021 என இரு ஆண்டுகளின் சம்மரையும் கொரோனா சூறையாடிய நிலையில், அடுத்த ஆண்டு சம்மர் எப்படி இருக்கும்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மீண்டும் கொரோனா பரவல் அடுத்த ஆண்டும் தலை தூக்கினால் கேஜிஎஃப் உள்ளிட்ட பல பிரம்மாண்ட படங்கள் என்ன செய்யுமோ? அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்து போட்டுக் கொண்டு எல்லாம் சரியானால் திட்டமிட்டபடி கேஜிஎஃப் 2 தியேட்டரில் கல்லா கட்டும்!

    English summary
    KGF hero Yash announced KGF Chapter 2 will release only on April 14th 2022 next year for the pandemic reasons.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X