படத்துக்கு படம் எதுக்கு ரொமான்ஸ் பண்ணனும்... கார்த்தி மனைவியின் லாஜிக் தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர் சிவக்குமாரின் குடும்பத்திற்கு நல்ல மரியாதை உண்டு.
ஒழுக்கத்திற்கு உதாரணம் என்பதைத் தாண்டி சமுதாயப் பிரச்சனைகளுக்கு அவர்கள் குடும்பத்திலிருந்து கட்டாயம் குரல் கொடுப்பார்கள்.
அந்த வகையில் குடும்பத்திற்கு முக்கியத்துவம் தரும் நடிகர் கார்த்தி, தான் காதல் காட்சிகளில் நடித்தால் மனைவியிடமிருந்து வரும் எதிர்வினையை பற்றி கூறுவார்.

கார்த்தி குடும்பம்
ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, தனது மனைவி சினிமா பின்னணியில் இருந்து வந்தவர் கிடையாது. சென்னையில் படித்திருந்தாலும் அடிப்படையில் ஒரு கிராமத்துப் பெண். படங்களில் பணிபுரியும்போது நான் வேலை வேலை என்று ஒரே சிந்தனையில் இருப்பேன். குடும்பத்தையும் பணியையும் எப்படி சமநிலையில் சமாளிப்பது என்று எனக்கு கற்றுக் கொடுத்தவர் எனது மனைவிதான். அது எளிமையான பாடம் கிடையாது. ஆனால் படிக்க வேண்டிய பாடம் என்று கார்த்தி நெகிழ்ச்சியாக கூறியிருப்பார்.

காதல் காட்சிகள்
நீங்கள் நடித்த காதல் காட்சிகளை பார்க்கும்போது உங்கள் மனைவி எப்போதாவது சற்று குறைவாக நடியுங்கள் என்று கூறியிருக்கிறாரா என்ற கேள்விக்கு எப்போதாவது அல்ல எப்போதுமே அப்படித்தான் கூறுவார். ஹீரோயின்களை தொடாமல் உங்களால் நடிக்க முடியாதா? அந்தக் காலத்தில் தொடாமல்தானே நடிப்பார்கள். ஏன் அது போல் உங்களால் நடிக்க முடியாதா என்று கேட்பாராம். அதற்கு அந்தக் காலம் வேறு இந்தக் காலம் வேறு என்று பதிலளிப்பாராம்.

மனைவியின் லாஜிக்
கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் அவர் நடித்த ஒரே ஒரு காதல் திரைப்படம் அவரது திருமணத்திற்கு முன்பு நடித்ததாம். திருமணத்திற்கு பின் காதல் படங்கள் நடிக்கவே இல்லை என்று கூறியிருக்கிறார். காதல் காட்சிகள் தனக்கு எப்போதுமே பிரச்சனைதான். அதற்கு ஏற்றார் போல கதாநாயகி, பாடல்கள் என்று எதுவுமே இல்லாத கைதி போன்ற திரைப்படங்கள் எனக்கு வெற்றி பெறுவதால், பார்த்தீர்களா... இந்த மாதிரி கதைதான் உங்களுக்கு ஏற்றார்போல் இருக்கிறது. அதனால் இது மாதிரியான கதைகளையே தேர்வு செய்து நடியுங்கள் என்று கூறுவாராம்.

கார்த்தியின் பதில்
எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் தன்னுடைய கணவன் இன்னொரு பெண்ணுடன் நடிக்கும்பொழுது கண்டிப்பாக மனைவி அப்படித்தான் பொசெசிவாக இருப்பார்கள். ஆண்களாக நம்மால் அது போன்ற ஒரு சூழ்நிலையை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே விதிதான். இருப்பினும் படங்களில் காதல் காட்சிகளை தவிர்க்க முடியாது. எனவே அந்தக் காட்சிகள் வரும் பொழுது கண்ணை மூடிக்கொள் என்று மனைவியிடம் சமாளிப்பேன் என்று கார்த்தி கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











