தமிழ் பீரியட் படங்கள் ஏன் வெளிமாநிலங்களில் வெற்றி பெறுவதில்லை? கங்குவா-க்கு உள்ள சவால்கள் என்ன?

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பழக்கம் உள்ளது. அதாவது மற்ற மொழிப்படங்களை தேடித் தேடிப் பார்த்து அதனைச் சிலாகிப்பார்கள், கொண்டாடித் தீர்ப்பார்கள், ஏன் அதனை இண்டஸ்ட்ரி ஹிட்டாகவும் கூட மாற்றிவிடுவார்கள். ஆனால் தமிழில் அதுபோன்ற படங்கள் வந்தால் அதனை பெரிய அளவில் கொண்டாட மாட்டார்கள் என்பதைவிடவும், கண்டுகொள்ளக் கூட மாட்டார்கள் எனலாம். ஆனால் கமெர்ஷியலாக ஒரு படம் வந்தால் அதனை வசூலில் மாபெரும் ஹிட்டாக மாற்றிவிட்டுவிடுவார்கள்.

அப்படி தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படாத என்பதைவிடவும் கண்டுகொள்ளாதப் படங்கள் பல உள்ளது. அவற்றை தனிப் பட்டியலாகவே தயார் செய்து விடலாம். அப்படி தமிழ் சினிமாவால் கொண்டாடப்படும் மாபெரும் வெற்றிப் படமாக மாற்றப்படும் என்ற நம்பிக்கையில் வெளியான பல படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளது.

kanguva suriya kanguvafromnov14

ஆனாலும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தொடங்கி முன்னணி இயக்குநர்கள், உச்ச நடிகர்கள் வரை பலரும் தொடர்ந்து பல வித்தியாசமான படங்களைக் கொடுத்து வருகின்றனர். ஆனால் முதல் முயற்சியில் வெற்றி பெறாத இயக்குநர்களோ தயாரிப்பாளர்களோ மீண்டும் அதேபோன்ற படத்தினை எடுக்க முயற்சிப்பதில்லை. ஆனால் அவ்வாறு ரிலீஸ் ஆன படங்களை காலம் கடந்து ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.

kanguva suriya kanguvafromnov14

அப்படி தமிழ் சினிமாவில் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ள சூர்யாவின் கங்குவா படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு தமிழ் சினிமா உலகைக் கடந்து, தெலுங்கு, இந்தி சினிமா உலகிலும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கு முன்னர் தமிழ் சினிமாவில் இருந்து இதுபோன்ற பீரியட் படங்கள் தமிழ் சினிமாவைக் கடந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவை அங்கு ஒர்க்-அவுட் ஆகவில்லை. அதாவது பொன்னியின் செல்வன், ஆயிரத்தில் ஒருவன், காஷ்மோரா போன்ற படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை.

kanguva suriya kanguvafromnov14

பீரியட் படங்கள்: இதில் பொன்னியின் செல்வன், காஷ்மோரா படங்கள் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. ஆனால் ஆயிரத்தில் ஒருவன் போன்ற படம் தமிழ்நாட்டில் ஓடவே ஓடவில்லை. ஆனால் அந்தப் படம் தெலுங்கு ரசிகர்களால் அப்போதே வரவேற்கப்பட்டது. தெலுங்கில் ரிலீஸ் ஆன பாகுபலி படம் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு காரணம் பாகுபலி படத்தின் முதல் பாகம் முடிவடைந்த இடம். அது இரண்டாம் பாகத்திற்கான சிறந்த தொடக்கமாகவும் ரசிகர்கள் மத்தியில் ஆவலைத் தூண்டும் விதமாகவும் அமைந்தது. பாகுபலி இரண்டாம் பாகம் வெளியாகும்வரை ரசிகர்கள் பொது இடங்கள் தொடங்கி இணையம் வரை பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

kanguva suriya kanguvafromnov14

க்ளைமேக்ஸ்: இதனால் இரண்டாம் பாகம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் குவித்து இந்திய சினிமா என்றால் அது இந்தி சினிமா மட்டும் இல்லை, என உலகம் முழுவதும் பறை சாற்றியது எனலாம். ஆனால் பொன்னியின் செல்வனில் அப்படியான ஒரு ஆர்வத்தைத் தூண்டும் க்ளைமேக்ஸ் இல்லாமல் போய்விட்டது என்றே கூறவேண்டும். இதனால் பொன்னியின் செல்வன் படம் தமிழ்நாட்டில் நல்ல வசூல் குவித்தது.

kanguva suriya kanguvafromnov14

பொன்னியின் செல்வன்: அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது, குறிப்பாக பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்தது. பொன்னியின் செல்வன் நாவல் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட நாவல் என்பதாலும், ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன் போன்ற படத்தினை இண்டஸ்ட்ரீ ஹிட் ஆக்காமல் போய்விட்டோம் என்ற குற்ற உணர்வுமே பொன்னியின் செல்வனின் வசூல் வெற்றிக்கு முக்கிய காரணங்களாகக் கூறலாம். மேலும் பொன்னின் செல்வன் படத்திற்கு தமிழ்நாட்டிலேயே பாண்டியர்களை அவமானப்படுத்திவிட்டதாகக் கூறி சிலர் எதிர்ப்பு தெரிவித்ததையும் பார்க்க முடிந்தது. அப்படி இருக்கும்போது, இந்தி பட ரசிகர்களுக்கு பொன்னியின் சொல்வன் நெருக்கமாக இருக்கும் என எப்படிக் கூறமுடியும்.

kanguva suriya kanguvafromnov14

வசூல்: இந்நிலையில் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ள கங்குவா படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தாலும், படக்குழு புரோமோசனில் இயல்பாக உள்ள எதிர்பார்ப்ப ஓவர் பில்டப்பாக மாற்றி வருகின்றார்களோ என்ற கேள்வி எழாமல் இல்லை. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான கல்கி 2898 ஏ.டி படம் புராணக்கதைக்களத்தோடு பிணைக்கப்பட்ட திரைக்கதையால் உருவாக்கப்பட்டது. ஆனால் அப்படத்தின் புரோமோசனின்போது படம் இவ்வளவு கோடி வசூல் செய்யும் என சவால் விடுவதைப்போல் புரோமோசன்கள் செய்யப்படவில்லை.

திரைக்கதை: மேலும் தமிழ்நாட்டில் படத்திற்கு பெரிய அளவில் புரோமோசன் செய்யப்படவில்லை. அப்படி இருக்கும்போதும் படம் ஆயிரம் கோடிகளைக் கடந்து வசூல் செய்தது. தமிழ்நாட்டிலும் படம் கணிசமான அளவில் வசூல் செய்ததைப் பார்த்தோம். கங்குவா படம் எடுக்கப்பட்டபோது இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, முதல் பாகத்தில் சுவாரஸ்யமான திரைக்கதையும் திருப்தியான கிளைமேக்ஸ் அதனோடு இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கிளைமேக்ஸாகவும் இருந்தால் மட்டும்தான் ரிப்பீட் ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவார்கள்.

ஹிட்: ஆனால் ரிப்பீட் ஆடியன்ஸை விடவும் அதிக வியாபாரம் உள்ள ரசிகர்கள் பட்டாளம் என்றால் அது, ஃபேமிலி ஆடியன்ஸ்தான். ஃபேமிலி ஆடியன்ஸ் மட்டும் தியேட்டரை நோக்கி வந்துகொண்டே இருந்தால் படத்தின் வசூல் தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்த அளவினை விடவும் அதிகமாக அமையும். கங்குவா படத்தில் அனைத்து தரப்பு ஆடியன்ஸையும் திருப்தி படுத்தும் வகையில் படக்குழு படத்தினைத் தயார் செய்திருந்தால் கட்டாயம் படம் ஹிட் அடிக்கும்.

அதேநேரத்தில் மாற்று மொழி சினிமா ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமான அதேநேரத்தில் தெளிவான திரைக்கதை அமைத்துவிட்டால் படம் அனைத்து இண்டஸ்ட்ரீக்களிலும் வெற்றிப்படமாக மாறும் என்பதில் ஐயம் வேண்டாம். கங்குவா படக்குழு மட்டும் இல்லை, அனைத்து படக்குழுக்களும் செய்யவேண்டியது இதுதான். அப்படிச் செய்ததால்தான், அபோகலிப்டோ போன்ற படங்கள் காலங்கள் கடந்தும் பேசப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X