twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த ஹீரோவுக்கு மட்டும் ஏன் இவ்ளோ டிமான்ட்? எல்லா படமும் தமிழ்ல ரீமேக் ஆகுதே.. ஆனா அந்தப்படம் ஆகுமா?

    By
    |

    சென்னை: பிரபல இந்தி ஹீரோ நடித்துள்ள படங்கள், தமிழில் தொடர்ந்து ரீமேக் செய்யப்பட இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சினிமாவில் தென்னிந்திய படங்களை இந்தியிலும் அங்குள்ள படங்களை இங்கும் ரீமேக் செய்வது வழக்கமானதுதான்.

    தமிழ்ப் படங்கள் தெலுங்கிலும் அந்த மொழிப் படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன.

    ஒக்கடு, கில்லி

    ஒக்கடு, கில்லி

    இது காலங்காலமாக நடக்கும் விஷயம் என்றாலும் ஒரே ஹீரோவின் படங்கள் அதிகமாக ரிமேக் ஆவது குறைவு. தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த சில ஹிட் படங்களை தமிழில் விஜய் ரீமேக் செய்து நடித்தார். அப்படித்தான் அவர் நடித்த ஒக்கடு, கில்லி ஆனது. போக்ரி, போக்கிரி ஆனது. ஆனால், தொடர்ந்து அவர் படங்களை ரீமேக் செய்யவில்லை.

    நான்கு படங்கள்

    நான்கு படங்கள்

    இப்போது இந்தியில் அயுஷ்மன் குரானா நடித்துள்ள 4 படங்கள் தமிழில் தொடர்ந்து ரீமேக் ஆகின்றன. ஒரு படம் ரீமேக் ஆகிவிட்டது. அது துமாரி சுலு. இதில் வித்யாபாலன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்., அயுஷ்மன் குரானா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்தப் படம் தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் காற்றின் மொழி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஜோதிகா, விதார்த் நடித்திருந்தனர்.

    தாராள பிரபு

    தாராள பிரபு

    இதையடுத்து அயுஷ்மன் குரானா நடித்து இந்தியில் ஹிட்டான விக்கி டோனர், தமிழில் தாராள பிரபு என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஒரிஜினலில் யாமி கவுதம் ஹீரோயினாக நடித்திருப்பார். இதில், ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். விவேக், தான்யா ஹோப் உட்பட பலர் நடிக்கின்றனர். கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார்.

    பிரசாந்த் நடிப்பில்

    பிரசாந்த் நடிப்பில்

    அடுத்து இவர் நடித்து ஹிட்டான அந்தாதுன் படம் பிரசாந்த் நடிப்பில் தமிழில் ரீமேக் ஆகிறது. 'அந்தாதுனி'ல் அயுஷ்மன் குரானாவுடன் ராதிகா ஆப்தே, தபு உட்பட பலர் நடித் நடித்திருந்தனர். தமிழில் இதை மோகன் ராஜா இயக்குகிறார். உடல் எடையை படத்துக்காக பிரஷாந்த் குறைத்துள்ளார். படத்தை நடிகர் தியாகராஜன் தயாரிக்கிறார்.

    பதாய் ஹோ

    பதாய் ஹோ

    இந்தப் படத்தை அடுத்து, பதாய் ஹோ படமும் ரீமேக் ஆகிறது. இதில் நீனா குப்தா, கஜ்ராஜ் ராவ், சுரேகா சிக்ரி உட்பட பலர் நடித்திருந்தனர். அமித் மிஸ்ரா இயக்கி இருந்த இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை போனிகபூர் வாங்கியுள்ளார். இதில் நடிகர் தனுஷை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

    ஆர்டிகள் 15

    ஆர்டிகள் 15

    அனுபவ சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மன் குரானா நடித்த 'ஆர்டிகள் 15, படமும் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற படம் இது. மதம், இனம், சாதி, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் நடக்கும் வேறுபாட்டை 'ஆர்டிகள் 15' தடை செய்கிறது. இந்த சட்டத்தின் அடிப்படையில் நடக்கும் கதை. இதன் தமிழ் ரீமேக்கில் யார் நடிக்கிறார் என்பது முடிவாகவில்லை.

    ஓரினச் சேர்க்கையாளர்கள்

    ஓரினச் சேர்க்கையாளர்கள்

    ஒரே இந்தி நடிகரின் நான்கு படங்கள், தொடர்ந்து தமிழில் ரீமேக் ஆவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் இப்போது நடித்துள்ள படம், 'சுப் மங்கல் ஜ்யாதா சாவ்தான்'. ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய கதையான இந்தப் படத்துக்கு துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடை விதித்துள்ளனர். இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை யாரும் வாங்குவார்களா என்பது சந்தேகமே.

    English summary
    Why this hero film is being continuously remake in Tamil?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X