வெற்றிமாறன் இவ்வளவு கீழ்த்தரமாக படம் பண்ணுவார்னு நான் எதிர்பார்க்கல... டாப் 10 சுரேஷ் காட்டம்!

சென்னை: முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அசுரன் கொடுத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் ஒரு நாவலை மையப்படுத்தி வாடிவாசல் என்ற படத்தை இயக்கி வருகிறார்

இந்த நிலையில் டாப் 10 நிகழ்ச்சி மூலம் பிரபலமான தொகுப்பாளர் சுரேஷ் வெற்றிமாறன் இவ்வளவு கீழ்த்தரமாக படம் எடுப்பார்ன்னு எதிர்பார்க்கல என தனியார் யூடியூப் நேர்காணலில் மிகவும் காட்டமாக பேசியுள்ளது வைரலாகி வருகிறது

அசுரன்

அசுரன்

தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக வெற்றிமாறன் படங்களுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது குறிப்பாக தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகும் படங்கள் இந்திய அளவில் மிகப் பெரிய கவனத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணைந்து பணியாற்றியுள்ளனர். மீண்டும் இந்த கூட்டணி இணையும் எனவும் செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி

வெக்கை என்ற நாவலைத் தழுவி அசுரன் படத்தை எடுத்த வெற்றிமாறன் அதைத் தொடர்ந்து இப்போது சூர்யா நடிக்கும் வாடிவாசல் என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. இந்த படமும் பிரபலமான நாவலை தழுவி எடுக்கப்பட்ட வருவது குறிப்பிடத்தக்கது.

வெற்றிமாறன் இப்படிக் கீழ்த்தரமாக

வெற்றிமாறன் இப்படிக் கீழ்த்தரமாக

வெற்றிமாறன் திரைப்படங்கள் என்றாலே பொதுவாக நேர்த்தியாக இருக்கும் அதுவே அவரை தனித்துவமான இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்துள்ளது. இப்படி இருக்கையில் டாப் 10 சுரேஷ் வெற்றிமாறன் இப்படிக் கீழ்த்தரமான ஒரு படத்தை எடுப்பார் என எதிர்பார்க்கவே இல்லை என காட்டமாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளார்.

ரொம்ப ஆதங்கமா இருக்கு

ரொம்ப ஆதங்கமா இருக்கு

மேலும் அதில் அவர் பேசியுள்ளதாவது வெற்றிமாறன் ஒரு அருமையான இயக்குனர். அவர் இவ்வளவு கீழ்த்தரமாக ஒரு டயலாக்கை வைத்து படம் எடுப்பார் என நான் நினைச்சு கூட பாக்கல.. வட சென்னை படத்தில் ஹீரோயின் பேசும் கெட்ட வார்த்தைக்கு பெண்கள் கூட்டமே ஆதரவாக கைதட்டி விசில் அடிக்கிறது. எங்கு போய்க் கொண்டறது இந்த சமுதாயம் எனத் தெரியவில்லை.. ரொம்ப ஆதங்கமா இருக்கு என டாப் 10 சுரேஷ் வெற்றிமாறன் குறித்து பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X