கிளாமரா டிரஸ் போட்டா என்ன தப்பு...? நெட்டிசன்களை விளாசிய நடிகை பிரியங்கா மோகன் !
சென்னை : டாக்டர், டான் எதற்கும் துணிந்தவன் என தமிழ் சினிமாவில் பரபரப்பான இளம் நடிகையாக கலக்கி கொண்டு உள்ளார் நடிகை பிரியங்கா மோகன்
தமிழ் ரசிகர்களின் லேட்டஸ்ட் கனவு கன்னியாக உள்ள இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமானவராக உள்ளார்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் கிளாமரா டிரஸ் போட்டா என்ன தப்பு என நெட்டிசன்கள் விளாசியுள்ளார்.

தெலுங்கில் நானி ஜோடியாக
கன்னடத்தில் வெளியான ஒண்த் கதே ஹெல்லா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன் தெலுங்கில் நானி ஜோடியாக கேங்க் லீடர் படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். க்யூட் நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் தொடர்ந்து சர்வானந்த் ஜோடியாக ஸ்ரீ காரம் என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில் உடனடியாக பிரியங்கா மோகன் தமிழில் டாக்டர் படத்தில் அறிமுகமானார்.

வெகுளித்தனமான கதாபாத்திரத்தில்
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதை தொடர்ந்து தனது நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த டாக்டர் படத்தை இயக்கினார். தனது ஒவ்வொரு படங்களிலும் கடத்தலை மையமாக வைத்து இயக்கும் நெல்சன் டாக்டர் படத்திலும் பெண் குழந்தை கடத்தலை மையமாக வைத்து மிகவும் சுவாரசியமாக எடுத்திருப்பார். சிவகார்த்திகேயன் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக மிகவும் வெகுளித்தனமான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருப்பார்

கெமிஸ்ட்ரி டாக்டர் படத்தில்
சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் கெமிஸ்ட்ரி டாக்டர் படத்தில் மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்க இருவரும் மீண்டும் டான் படத்தில் இணைந்து நடித்தனர். அறிமுக இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் கலகலப்பான கல்லூரி கதைக்களத்தில் வெளியான டான் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வசூலிலும் கலக்கியது

கிளாமரா டிரஸ் போட்டா என்ன தப்பு...?
குடும்பங்கள் கொண்டாடும் பாசக் கதைகள் கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தை பற்றி தனது ஒவ்வொரு படங்களிலும் காட்டிவரும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்து இருப்பார். பிரியங்கா மோகன் இதுவரை நடித்த திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தனியார் யூட்யூப் சேனல் நேர்காணலில் நடிகைகள் கிளாமர் காட்டினால் என்ன தப்பு.. கிளாமர் காட்டுவது அவர்களது சொந்த தனிப்பட்ட விஷயம். கொஞ்சம் ஸ்கின் தெரிகின்ற மாதிரி கிளாமர் காட்டினால் உடனே அவரைப் பற்றி பேசக்கூடாது அது அவர்களது விருப்பம் என அரைவேக்காடு நெட்டிசன்களை விளாசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











