என் பர்சனல எதுக்கு நோண்டுறீங்க.. அதுல என்னங்க சுவாரஸ்யம்.. விஜய் சேதுபதி காட்டம்!

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் விஜய் சேதுபதி, தற்போது தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதியின் வளர்ச்சி அசுர வளர்ச்சி என்று சொல்லும் அளவிற்கு, தற்போது தவிர்க்க முடியாத கதாநாயகனாகவும், வில்லன் கதாபாத்திரத்திலும் கலக்கி வருகிறார்.

தன்னை பற்றி பர்சனல் கேள்விகளைக் கேட்டவர்களை வெளுத்து வாங்கும் வகையில். விஜய் சேதுபதி பேசியது தற்போது அவர் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

தொடர்ந்து ஹிட் தான்

தொடர்ந்து ஹிட் தான்

2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார் நடிகர் விஜய் சேதுபதி. அந்த படத்தில் கிராமத்து கதாபாத்திரத்திற்கு அவர் கச்சிதமாக பொருந்தி இருப்பார். இதை தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற பல படங்கள் நடித்து தொடர்ந்து ஹிட் கொடுத்தார்.

நயன்தாராவுடன் இணைந்து

நயன்தாராவுடன் இணைந்து

பல படங்களில் நடித்த விஜய் சேதுபதிக்கு 2015ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் படம் டர்னிங் பாயிண்டாக அமைந்தது. நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் எழுதி இயக்க விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர் ஜே பாலாஜி போன்ற பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசையமைத்தவர் அனிருத். படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இருந்து தான் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர்.

வித்யாசமான கதாபாத்திரம்

வித்யாசமான கதாபாத்திரம்

இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி, இறைவி, தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம், 96, பேட்ட, சூப்பர் டீலக்ஸ் போன்ற பல படங்களில் நடித்து ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தனக்குக் கொடுக்கப்படும் கதாபாத்திரங்களை யதார்த்தமாக நடிக்கக்கூடியவர் என்ற பெயர் பெற்றார்.தனக்கு ஏற்ற கதைகளில் மட்டுமே நடிக்கக்கூடியவர், க/பெ ரணசிங்கம், மாஸ்டர் போன்ற படங்களில் இவருக்கான ஸ்கோர் அதிகமாக இருந்தது. சமீபத்தில் வெளியான கடைசி விவசாயி, காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம், மாமனிதன் போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதை தொடர்ந்து இவரது மார்க்கெட் இன்னும் அதிகரித்துள்ளது.

2 நாயகிகள்

2 நாயகிகள்

காத்துவாக்குல 2 காதல் படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் இணைந்து நடித்தது குறித்து சமூக வலைதளங்களில் பல கிண்டல் கேலியான பேச்சுகள் வலம் வந்திருந்தாலும், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் தான் நடித்த அனுபவம் குறித்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது தனது சொந்த வாழ்க்கையைப் பற்றி கேட்டவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் விஜய்சேதுபதி. இது குறித்து இவர் கூறுகையில்," இரண்டு கதாநாயகிகளுடன் நான் நடிப்பதை பார்த்து சமூக வலைதளங்களில் என்னை பற்றி பல கிசுகிசுக்களும், வாழ்க்கையை வாழராண்டா என்று பலரும் கூறியதுண்டு. ஆனால் அப்படி நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று நடிக்கும்போது தான் தெரியும். 2 முன்னணி நடிகைகளுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.

பஸ் சீன் ரொம்ப கஷ்டம்

பஸ் சீன் ரொம்ப கஷ்டம்

பஸ்ஸில் இரண்டு ஹீரோயின்களுடன் நான் ஃபுட் போர்டு அடிக்கும் காட்சியை பார்த்து அனைவரும் என்னை பற்றி, ஓடும் பஸ்ஸில் ரொமான்ஸ் என்று கேட்கிறார்கள், ஆனால் அந்த காட்சியில் நடிப்பது எவ்வளவு சிரமம் என்று நடிப்பவர்களுக்கு தான் தெரியும். அந்த சிறிய இடத்தில் நான் தொங்கிக்கொண்டு நடிக்க நான் மிகவும் சிரமப்பட்டேன் என்று கூறினார். இந்த படத்தைப் போலவே சொந்த வாழ்க்கையில் நீங்கள் இரண்டு பெண்களை காதலித்துள்ளீர்களா என்று கேட்ட கேள்விக்கு, என் பர்சனல் வாழ்க்கையை ஏன் நோண்டுறீங்க, அப்படி காதலித்து இருந்தாலும் சொல்ல முடியுமா? மற்றவர் வாழ்வில் நடந்ததை கேட்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்க போகிறது. இப்படிப்பட்ட கேள்வியை கேட்காதீர்கள் என்று பளிச்சென்று பதில் சொல்லியுள்ளார் விஜய் சேதுபதி. இவர் கூறியது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் ரசிகர்களும் தங்கள் கமெண்ட்கள் மூலம் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X