ஏன் நீங்க பிட்னஸ்ல இறங்கல? - ரசிகரின் கேள்விக்கு விஜய்சேதுபதி அளித்த சூப்பர் பதில்
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியிடம் ரசிகர் ஒருவர் நீங்க ஏன் மற்ற ஹீரோக்களைப் போல் பிட்னஸ்ல கவனம் செலுத்துவது இல்லை எனக் கேட்டிருக்கிறார்.
அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, ஃபிட்னஸ் என்பது ஒரு மாயை எனப் பதிலளித்திருக்கிறார்.
மேலும், தான் செய்யும் சில கேரக்டர்களுக்கு ஃபிட்னஸ் என்பது அவசியமே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

அது ஒரு மாயை
ஃபிட்னஸ் என்பது ஒரு மாயை. எல்லோரும் ஃபிட்டாக இருக்க முடியாது. அதை எல்லோரிடமும் எதிர்பார்க்கக் கூடாது. நானும் அதை செய்ய தான் முயற்சி செய்கிறேன். ஆனால் அது ஒரு மாயை. எல்லோராலும் ஃபிட்டாக இருக்க முடியாது. எல்லா கதாப்பாத்திரங்களும் ஃபிட்டாகவே இருக்காது என விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் ரசிகரின் கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார்.

விக்ரம் சந்தானம்
விக்ரம் படத்தில் அறிமுகக் காட்சியிலேயே சட்டையின்றி உடல் தெரிய வருவார் விஜய் சேதுபதி. பார்ப்பதற்கு தொப்பையோடும், மிக எதார்த்தமாகவும் அவரது உடல்வாகு இருக்கும். அதைப் பார்த்த ரசிகர்கள் பலர், இயற்க்கையாக ஒரு ஆணின் உடல்வாகு அப்படி தான் இருக்கும், அது தான் நிஜம் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைத் தெரிவித்தனர். அதற்கு ஏற்ப படத்திலும் சந்தானம் கதாப்பாத்திரத்திற்கு நச்சென்று பொருந்தியிருக்கும் அவரது உடல்வாகு.

எதார்த்தமான மனிதர்
விஜய்சேதுபதி சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு மிக எதார்த்தமாக இருப்பவர். அழகிற்கோ, ஃபிட்னசிற்கோ பெரிய மெனக்கெடல்களைச் செய்யாதவர். அறிமுக ஹீரோக்கள் ஒன்றிரண்டு திரைப்படங்களில் நடித்துவிட்டாலே, பளீச்சென்ற முகமும், ஜிம் பாடியுமாக மாறிவிடுவார்கள். ஆனால் விஜய் சேதுபதியோ முதல் படத்திலிருந்து இப்போது வரை அப்படியே தான் இருக்கிறார். அதை தான் ரசிகர்களும் அவரிடம் விரும்புகிறார்கள். இத்தனைக்கும் சில படங்களில் வயசான தோற்றத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் இளம் பெண்களுக்கு என்னவோ விஜய் சேதுபதி மீது அப்படி ஒரு ஈர்ப்பு என்பது உண்மை தான்.

ஃபிட் அண்ட் ஃபேட் விஜய் சேதுபதி
தனது சினிமா பயணத்தில் விஜய் சேதுபதி தனது உடலை இளைத்து நடித்த படம் என்றால் நானும் ரௌடி தான் திரைப்படத்தைச் சொல்லலாம். அதில் வாலிபன் தோற்றத்தில் தெரிவதற்காக உடலை குறைத்து ஃபிட்டாக இருந்தார். அதே போல், சேதுபதி படத்திலும் போலீஸ் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப ஃபிட்டாக கட்டுமஸ்தாக இருந்தார். அதிகபட்ச குண்டான தோற்றத்தில் நடித்தது என்று கூறினால் கருப்பன் திரைப்படத்தைச் சொல்லலாம். மற்றபடி விஜய் சேதுபதியின் தோற்றத்தில் மிகப் பெரிய மாற்றங்களை ரசிகர்கள் கண்டதில்லை.


Click it and Unblock the Notifications











