இந்த நட்சதித்திர காதல் ஜோடியாவது பிரியாமல் இருக்குமா?
மும்பை: சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தில் நடிக்கும் நடிகர், நடிககைகள் காதலில் விழுவதும், படம் முடிந்ததும் காதல் முறிவதும் தொடர்கதையாக உள்ளது.
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் படங்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின்கள் காதலில் விழுவார்கள். படப்பிடிப்பில் காதல் ஜோடிகளாக இருப்பார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகு என்ன நடக்குமோ தெரியவில்லை அவர்களின் காதலும் முறிந்துவிடும்.
இப்படி சஞ்சய் லீலா பன்சாலியின் படங்களில் சந்தித்து காதல் கொண்டு பிரிந்தவர்களை பார்ப்போம்.

நானா படேகர்- மனீஷா கொய்ராலா
காமோஷி படத்தில் நானா படேகரின் மகளாக நடித்தார் மனீஷா கொய்ராலா. அந்த படத்தின் ஷூட்டிங்கின்போது மனீஷா வயதில் பெரியவரான நானாவை டேட் செய்வதாக அறிவித்தார். படம் ரிலீஸான பிறகு அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் பிரிந்துவிட்டனர்.

ஐஸ்வர்யா ராய்- சல்மான் கான்
ஐஸ்வர்யா ராய் சல்மான் கானுடன் ஹம் தில் தே சுகே சனம் படத்தில் நடித்தார். அப்போது அவர்களுக்குள் காதல் தீ பற்றிக் கொண்டது. அதன் பிறகு அவர்கள் சில காலம் காதலர்களாக வலம் வந்தனர். சல்மான் ஜஸ்வர்யாவை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவர்கள் கடந்த 2002ம் ஆண்டு பிரிந்தனர்.

சோனம் கபூர்- ரன்பீர் கபூர்
சாவரியா படத்தில் நடித்த போது சோனம் கபூருக்கும், ரன்பீர் கபூருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் பிறகு அவர்களுக்குள் என்ன பிரச்சனை ஏற்பட்டதோ என்னவோ இருவரும் ஆளுக்கொரு வழியில் சென்றுவிட்டனர். இதையடுத்து அவர்கள் இதுவரை மீண்டும் ஒன்று சேர்ந்து பணியாற்றவில்லை.

ரன்வீர் சிங்- தீபிகா
தற்போது ராம் லீலா படத்தில் நடித்து வரும் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் காதலிப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர்கள் தங்கள் காதலை ஒப்புக்கொள்ளவில்லை. வழக்கமான பன்சாலி ஜோடி போன்று அல்லாமல் இந்த காதலாவது நிலைக்குமா என்று பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











