Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
வின்னர் 2 கண்டிப்பாக வரும்.. இயக்குநர் தியாகராஜன் உறுதி!
சென்னை : நடிகர் பிரசாந்த் இப்பொழுது ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற அந்தாதுன் திரைப்படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்து வருகிறார்
தமிழ் ரசிகர்களுக்காக சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உருவாகி வரும் இந்தப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை சிம்ரன் பிரசாந்துடன் இணைந்து நடித்துள்ளார்
இந்த நிலையில் இயக்குநரும் நடிகரும் பிரசாந்த்தின் தந்தையுமான தியாகராஜன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் வின்னர் பாகம் 2 கண்டிப்பாக வரும் என்ற தகவலை அளித்துள்ளார்
மனைவி போட்ட கன்டிஷன்... பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட ஒல்லி நடிகர்
பிரசாந்த் வடிவேலு காம்பினேஷனில்
1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த பிரசாந்துக்கு தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் ஹிட்டாகி கொண்டே வந்த நிலையில் பிரஷாந்தின் பல திரைப்படங்களில் நடிகர் வடிவேலு இணைந்து பணியாற்றி இருந்தாலும் வின்னர் திரைப்படம் இன்று வரை பிரசாந்த் வடிவேலு காம்பினேஷனில் வெளியான மிகச்சிறந்த படமாக இருந்து வருகிறது. ஜனரஞ்சகமான காமெடி படங்களுக்கு பெயர் போன இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வின்னர் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு மாபெரும் வெற்றி பெற்றது இந்த படத்தில் வடிவேலு கைப்புள்ள என்ற கதாபாத்திரத்தில் காமெடியில் கலக்கி இருப்பார் பல ஆண்டுகள் கடந்தும் இன்றும் வின்னர் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்
தமிழில் அந்தகன்
நடிகர் பிரசாந்த் இப்பொழுது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் ஹிந்தியில் ஆயுஷ்மான் குர்ரனா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற அந்தாதுன் திரைப்படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்து வருகிறார். இயக்குநரும் நடிகரும் பிரசாந்தின் அப்பாவுமான தியாகராஜன் அந்தகன் படத்தை இயக்கி தயாரித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை சிம்ரன் பிரசாந்துடன் இணைந்து இந்த படத்தில் நடித்து வருவதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது
தமிழில் பிரம்மாண்ட வெற்றி பெறும்
அனைத்து கட்ட பணிகளும் முடிந்து அந்தகன் திரைப்படம் மிக விரைவிலேயே ரிலீசுக்கு வர உள்ள நிலையில் இப்படம் ஹிந்தியில் வெற்றி பெற்றதை விடவும் தமிழில் பிரம்மாண்ட வெற்றி பெறும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. தமிழ் ரசிகர்களுக்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டு இப்படம் உருவாகி உள்ளது. இந்த நிலையில் இயக்குநர் தியாகராஜன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பிரசாந்த் வடிவேலு காம்பினேஷன் குறித்து பேசுகையில் பிரசாந்த் வடிவேலு காம்பினேஷனில் பல படங்கள் வெளியாகியுள்ளன அதில் வின்னர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.
வின்னர் 2 கண்டிப்பாக வரும்
ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் மிகப்பெரிய வரவேற்பு இந்த படத்திற்கு இருந்து வருகிறது. கோல்டு வின்னர் என்ற டைட்டிலை மற்றொரு படத்திற்காக எடுத்து வைத்திருந்தேன் சுந்தர் சி அதிலிருந்து வின்னர் என்ற டைட்டிலை மட்டும் எடுத்து இந்த படத்திற்கு வைத்துக் கொண்டார் எனவே கோல்டு வின்னர் படத்தை இயக்க திட்டமிட்டு உள்ளேன். அந்தப் படத்தில் பிரசாந்த், வடிவேலு ஏன் சுந்தர் சியையே இயக்க வைக்க இருப்பதாகவும் திட்டமிட்டுள்ளேன். எனவே இந்த படம் வின்னர் பாகம் 2ஆக வெளியாக வாய்ப்புள்ளதாக அந்த நேர்காணலில் இயக்குநர் தியாகராஜன் பகிர்ந்துள்ளார்.