twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யாமினி என்றொரு தேவதை யாமினி சர்மா...படிப்பது (படித்தது): பி.ஏ, செகண்ட் இயர்காலேஜ்: எம்சிஎம் டிஏவி காலேஜ், சண்டீகர்பொழுபோக்கு: காலேஜில் ஸ்டிரைக் செய்வதுகிடைத்தது: பாலிவுட்டில் ஹீரோயின் சான்ஸ்காலேஜில் கலாட்டா செய்ததால் ஒருவருக்கு இந்தி படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்திருக்கிறது.சண்டீகரில் உள்ள எம்சிஎம் டிஏவி கல்லூரியில் ஒரு மாணவி கிளாஸ் ரூமில் பாடம் நடந்துகொண்டிருந்தபோதே தனது பாய் பிரண்டுடன் கடலை சாகுபடி செய்து கொண்டிருந்தார்.இதைப் பார்த்து டென்சனான வாத்தியார், அந்தப் பெண்ணின் முகத்தில் பளார் விட்டார். இது போதாதா..ஸ்டிரைக் செய்ய.அடுத்த நிமிடமே கல்லூரியில் பூந்தொட்டிகள் எல்லாம் பறந்தன, கல்லூரி பேராசிரியர்களின் பைக்குகள், கார்கள்உடைத்து நொறுக்கப்பட்டன. மாணவிகளே கையில் கல்லும் கம்புமாக கல்லூரிக்குள் ஏக கலாட்டாக்கள்செய்தனர்.இந்த கலாட்டாவுக்கு தலைமை தாங்கியவர் தான் நம்ம யாமினி. நம்ம நடிகை நிலாவையும், ஐஸ்வர்யாராயையும், மறைந்த திவ்ய பாரதியையும் ஒரு டப்பாவுக்குள் போட்டு குலுக்கி அப்படியே ஒரே உருவமாகவெளியில் எடுத்தால் பார்க்க எப்படி இருப்பாரோ அது தான் நம்ம யாமினியின் தோற்றம்.அத்தோடு கர்லி ஹேர் வேறு, கோபத்திலும் அழகான முகம், எப்போதும் பேசும் கண்கள்..கல்லூரி மாணவிகள் கலாட்டா சீனை ஏற்படுத்திக் கொண்டிருக்க அதை படம் பிடிக்கப் போன பத்திரிக்கை, டிவிகேமராமேன்களின் கண்களில் விழுந்தார் யாமினி. போராட்டத்தை படம் பிடிப்பதை விட்டுவிட்டு யாமினியைபடம் பிடிப்பதிலேயே கேமராமேன்கள் கவனம் செலுத்தும் அளவுக்கு கவர்ந்து இழுத்துவிட்டார் காமினி.இதனால் அன்று முழுவதும் தேசிய சேனல்களிலும், அடுத்த நாள் பத்திரிக்கைகளிலும் மாணவிகளின் கல்லூரிகலாட்டாவும் யாமினியும் முக்கிய இடம் பிடித்துவிட்டன.தான் இயக்கப் போகும் தேரே சங் என்ற படத்துக்கு ஒரு வித்தியாசமான அழகோடு புதுமுகத்தை தேடிக்கொண்டிருந்த இந்திப் பட இயக்குனர் சதீஷ் கெளசிக் கண்ணில் யாமினியின் போட்டே பட யாரப்பா இதுஎன்று நிமிர்ந்து உட்கார்ந்தார்.அடுத்த நாளே கல்லூரிக்குப் போய் இந்தப் பொண்ணை பார்க்கனுமே என்று பத்திரிக்கைகளில் வந்த ஸ்டில்லைநீட்ட, ஹூ ஆர் யூ என்று கேள்வியோடு வந்தார் யாமினி.அவரைப் பார்த்த உடனேயே நீ தான் என் ஹீரோயின் என்று சதீஷ் கூற, ஏதோ காதல் பைத்தியம் என்றுநினைத்து யாமினி பதிலுக்கு கத்த, அவரை காலேஜ் கேண்டீனுக்கு அழைத்துப் போய் தன்னை அறிமுகம்செய்திருக்கிறார் சதீஷ்.இந்திப் பட ஆபரையும் சொல்லியிருக்கிறார். அடுத்த நிமிடமே ரெக்கையே இல்லாமல் பறக்கஆரம்பித்துவிட்டார் யாமினி.இருந்தாலும் வீட்ல கேட்டு சொல்றேன் என்ற பாரம்பரியமான பதிலை சொல்லிவிட்டுப் போன யாமினி, அடுத்தஒரு மணி நேரத்தில் அந்த இந்திப் பட வாய்ப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார்.இத்தனைக்கு சதீஷ் ஒன்றும் நல்ல படங்களை எடுத்தவர் அல்ல. அவரது படங்கள் எல்லாமே கரம் மசாலா ரகம்தான். யாமினியையும் அவர் நன்றாகவே பயன்படுத்திக் கொள்வார் என்கிறார்கள்.இந் நிலையில் காலேஜுக்கு வருவதையே நிறுத்திவிட்டாராம் யாமினி. எம்பிஏ படிக்கப் போவதாக சொல்லிக்கொண்டிருந்தவர், இப்போ என்னத்த படிச்சு என்னாகப் போகுது என்று நினைத்தாரோ என்னவோ காலேஜுக்குகட் அடிக்க ஆரம்பித்துவிட்டார்.மேலும் சினிமான்னு வந்தாச்சு.. இனிமே எல்லாத்துக்கும் ரெடியா இருக்க வேண்டியது தான் என்று பேட்டிகள்வேறு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.ரொம்ப தெளிவு பார்ட்டி... பார்ட்டிக்கு வயசு 18 தான்..

    By Staff
    |
    யாமினி சர்மா...
    படிப்பது (படித்தது): பி.ஏ, செகண்ட் இயர்

    காலேஜ்: எம்சிஎம் டிஏவி காலேஜ், சண்டீகர்

    பொழுபோக்கு: காலேஜில் ஸ்டிரைக் செய்வது

    கிடைத்தது: பாலிவுட்டில் ஹீரோயின் சான்ஸ்

    காலேஜில் கலாட்டா செய்ததால் ஒருவருக்கு இந்தி படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்திருக்கிறது.

    சண்டீகரில் உள்ள எம்சிஎம் டிஏவி கல்லூரியில் ஒரு மாணவி கிளாஸ் ரூமில் பாடம் நடந்துகொண்டிருந்தபோதே தனது பாய் பிரண்டுடன் கடலை சாகுபடி செய்து கொண்டிருந்தார்.

    இதைப் பார்த்து டென்சனான வாத்தியார், அந்தப் பெண்ணின் முகத்தில் பளார் விட்டார். இது போதாதா..ஸ்டிரைக் செய்ய.

    அடுத்த நிமிடமே கல்லூரியில் பூந்தொட்டிகள் எல்லாம் பறந்தன, கல்லூரி பேராசிரியர்களின் பைக்குகள், கார்கள்உடைத்து நொறுக்கப்பட்டன. மாணவிகளே கையில் கல்லும் கம்புமாக கல்லூரிக்குள் ஏக கலாட்டாக்கள்செய்தனர்.

    இந்த கலாட்டாவுக்கு தலைமை தாங்கியவர் தான் நம்ம யாமினி. நம்ம நடிகை நிலாவையும், ஐஸ்வர்யாராயையும், மறைந்த திவ்ய பாரதியையும் ஒரு டப்பாவுக்குள் போட்டு குலுக்கி அப்படியே ஒரே உருவமாகவெளியில் எடுத்தால் பார்க்க எப்படி இருப்பாரோ அது தான் நம்ம யாமினியின் தோற்றம்.

    அத்தோடு கர்லி ஹேர் வேறு, கோபத்திலும் அழகான முகம், எப்போதும் பேசும் கண்கள்..

    கல்லூரி மாணவிகள் கலாட்டா சீனை ஏற்படுத்திக் கொண்டிருக்க அதை படம் பிடிக்கப் போன பத்திரிக்கை, டிவிகேமராமேன்களின் கண்களில் விழுந்தார் யாமினி. போராட்டத்தை படம் பிடிப்பதை விட்டுவிட்டு யாமினியைபடம் பிடிப்பதிலேயே கேமராமேன்கள் கவனம் செலுத்தும் அளவுக்கு கவர்ந்து இழுத்துவிட்டார் காமினி.

    இதனால் அன்று முழுவதும் தேசிய சேனல்களிலும், அடுத்த நாள் பத்திரிக்கைகளிலும் மாணவிகளின் கல்லூரிகலாட்டாவும் யாமினியும் முக்கிய இடம் பிடித்துவிட்டன.

    தான் இயக்கப் போகும் தேரே சங் என்ற படத்துக்கு ஒரு வித்தியாசமான அழகோடு புதுமுகத்தை தேடிக்கொண்டிருந்த இந்திப் பட இயக்குனர் சதீஷ் கெளசிக் கண்ணில் யாமினியின் போட்டே பட யாரப்பா இதுஎன்று நிமிர்ந்து உட்கார்ந்தார்.

    அடுத்த நாளே கல்லூரிக்குப் போய் இந்தப் பொண்ணை பார்க்கனுமே என்று பத்திரிக்கைகளில் வந்த ஸ்டில்லைநீட்ட, ஹூ ஆர் யூ என்று கேள்வியோடு வந்தார் யாமினி.

    அவரைப் பார்த்த உடனேயே நீ தான் என் ஹீரோயின் என்று சதீஷ் கூற, ஏதோ காதல் பைத்தியம் என்றுநினைத்து யாமினி பதிலுக்கு கத்த, அவரை காலேஜ் கேண்டீனுக்கு அழைத்துப் போய் தன்னை அறிமுகம்செய்திருக்கிறார் சதீஷ்.

    இந்திப் பட ஆபரையும் சொல்லியிருக்கிறார். அடுத்த நிமிடமே ரெக்கையே இல்லாமல் பறக்கஆரம்பித்துவிட்டார் யாமினி.

    இருந்தாலும் வீட்ல கேட்டு சொல்றேன் என்ற பாரம்பரியமான பதிலை சொல்லிவிட்டுப் போன யாமினி, அடுத்தஒரு மணி நேரத்தில் அந்த இந்திப் பட வாய்ப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார்.

    இத்தனைக்கு சதீஷ் ஒன்றும் நல்ல படங்களை எடுத்தவர் அல்ல. அவரது படங்கள் எல்லாமே கரம் மசாலா ரகம்தான். யாமினியையும் அவர் நன்றாகவே பயன்படுத்திக் கொள்வார் என்கிறார்கள்.

    இந் நிலையில் காலேஜுக்கு வருவதையே நிறுத்திவிட்டாராம் யாமினி. எம்பிஏ படிக்கப் போவதாக சொல்லிக்கொண்டிருந்தவர், இப்போ என்னத்த படிச்சு என்னாகப் போகுது என்று நினைத்தாரோ என்னவோ காலேஜுக்குகட் அடிக்க ஆரம்பித்துவிட்டார்.

    மேலும் சினிமான்னு வந்தாச்சு.. இனிமே எல்லாத்துக்கும் ரெடியா இருக்க வேண்டியது தான் என்று பேட்டிகள்வேறு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

    ரொம்ப தெளிவு பார்ட்டி... பார்ட்டிக்கு வயசு 18 தான்..

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X