Year Ender 2024.. ரஜினி முதல் சூர்யாவரை.. இந்த வருடம் ப்ளூ சட்டை மாறன் செய்த சம்பவங்கள்!

சென்னை: ஃபேமஸான திரை விமர்சகராக வலம் வந்துகொண்டிருப்பவர் ப்ளூ சட்டை மாறன். அவரது திரை விமர்சனத்தில் நக்கல்களும், நையாண்டிகளும் அவ்வளவு இருக்கும். சில சமயங்களில் அவை ஓவர் டோஸாகவும் சென்று சர்ச்சைகளையும் சந்தித்ததுண்டு. விமர்சனம் மட்டுமின்றி நடிகர்கள் குறித்தும் தனிப்பட்ட ரீதியில் விமர்சனத்தை அவர் வைப்பார். இதனால் பல நடிகர்களின் ரசிகர்களுக்கு அவரை கண்டாலே ஆகாது. இந்தச் சூழலில் இவ்வருடத்தில் அவர் யார் யாரை வைத்து செய்திருக்கிறார் என்பதை இதில் பார்க்கலாம்.

திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை. அவரது திரை விமர்சனம் அவ்வளவு வெளிப்படையாக இருக்கும். நல்ல படங்களை அவர் கொண்டாடியதற்கும் தவறியதில்லை. அதேசமயம் ஒரு படம் நன்றாக இல்லை என்றால் அதனை வைத்து செய்துவிடுவார் அவர். அது சில சமயம் ஓவர் டோஸாகி அவர் கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவ்வளவு பேசும் அவர் படம் எடுக்க வேண்டியதுதானே என்று ஒருதரப்பினர் கூறினார்கள்.

year ender 2024 blue sattai maran rajinikanth

ஆண்டி இந்தியன்: நிலைமை இப்படி இருக்க் ஆண்டி இந்தியன் என்ற படத்தை இயக்கினார் அவர். சில வருடங்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினார்கள். மேலும் பேசுவது எளிது படம் எடுப்பது கஷ்டம் என்பதை இப்போதாவது ப்ளூ சட்டை புரிந்துகொண்டிருப்பார் என்றும் கூறினார்கள். இதற்கிடையே அவர் உருவ கேலியையும் செய்துவந்தார். அது கண்டனத்தை பெற்றதையடுத்து அந்த மாதிரியான கேலிகளை அவர் நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்களையும் சம்பவம்: திரைப்படங்களை மட்டுமின்றி நடிகர்களையும் விமர்சனம் செய்வது வழக்கம். நடிகர்கள் யாரேனும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஈடுபட்டாலோ, கருத்துக்களை தெரிவித்தாலோ தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர்களை வைத்து செய்துவிடுவார். இதன் காரணமாக நடிகர்களின் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விமர்சனம் செய்வது உண்டு. சூழல் இப்படி இருக்க இந்த வருடம் அவர் எந்த திரை பிரபலங்களுடன் வம்புக்கு சென்றார் என்பதை பார்க்கலாம்.

ரஜினிகாந்த்: ப்ளூ சட்டை மாறனுக்கு ரஜினியை கண்டாலே ஆவதில்லை. கடந்த வருடம் ஜெயிலர் பட சமயத்தில் தொடர்ந்து ரஜினிகாந்த்தை வம்பிழுத்துக்கொண்டிருந்த ப்ளூ சட்டை மாறன், இந்த வருடத்தில் விஜய்க்கு ஒரு அட்வைஸ் செய்தார். விஜய்யின் அரசியல் கட்சிக்கு அட்வைஸ் செய்வது போன்று செய்துவிட்டு போகிற போக்கில், 'தலீவர் கடைசி நேரத்தில் கட்சியை கலைத்துவிட்டு ஓடியது ஏன் தெரியுமா? கடைசி நேரத்தில் நடந்த சில மீட்டிங்குகளில் தனது கட்சியில் வேறு சில பெரிய கட்சிகளின் ஸ்லீப்பர் செல்கள் இருந்ததை தெரிந்துகொண்டதால்தான்' என்று குறிப்பிட்டிருந்தார்.

விஜய்யையும் விடாத ப்ளூ சட்டை: அதேபோல் இந்த வருடம் விஜய்யையும் அவர் விட்டுவைக்கவில்லை. முக்கியமாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய விஜய்; ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது அலுவலகத்துக்கு வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கினார். அதனை கடுமையாக விமர்சித்தார் ப்ளூ சட்டை மாறன் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவ்வப்போது விஜய்யின் அரசியல் மூவ்களை பற்றியும் விமர்சனம் செய்தார்.

அமரன்: அதேபோல் இந்த வருடம் வெளியான படங்களில் அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தை பற்றிய தனது விமர்சனத்தில் சிவகார்த்திகேயனை ஓவராகவே வறுத்தெடுத்துவிட்டார் ப்ளூ சட்டை. இதனால் கொதிப்படைந்த ஒரு தரப்பினர் அவருக்கு பதிலடி கொடுத்தார்கள். மேலும் நடிகர் கலையரசனும் ப்ளூ சட்டை மாறனுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கங்குவா: இந்த வருடத்தின் மிகப்பெரிய தோல்வி படங்களில் ஒன்று கங்குவா. அதற்கு காரணம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஓவர் பேச்சு என்பதுதான் பலரின் கருத்து. ஞானவேல் ராஜா குறித்து தனது எக்ஸ் தளத்தில் ஞானவேல் ராஜா பேசாமல் இருந்தால் கார்த்தி நடித்திருக்கும் வா வாத்யார் படத்துக்கு நல்லது என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல் சூர்யாவை கங்குவா விஷயத்தில் வைத்து செய்துவிட்டார். மேலும் கங்குவா படத்துக்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களை கண்டித்த ஜோதிகாவை, 'படம் நன்றாக இல்லையென்றால் வன்மம், தொன்மம் என்று சொல்வீர்கள். எதுக்கு சார் வம்பு. உங்களுக்கு ஆஸ்கார் உறுதி. ஆள விடுங்க சாமியோவ்' என்று பதிவிட்டிருந்தார்.

விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்: இந்த வருடத்தில் ப்ளூ சட்டை மாறனுக்கும் விஜய் ஆண்டனிக்கும் இடையேதான் மிகப்பெரிய மோதல் நிலவியது. விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ படத்தை விமர்சித்திருந்தா மாறன். அதற்கு விஜய்யோ, நல்ல படங்களை விமர்சனங்களால் கொல்லும் ப்ளூ சட்டை மாறன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு ப்ளூ சட்டை மாறனோ விஜய் ஆண்டனியை தொடர்ந்து விடாமல் அடித்துக்கொண்டே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜிவி பிரகாஷையும் விடாத அவர் விஜய் ஆண்டனியும், ஜிவி பிரகாஷும் படத்தில் நடிப்பதற்கு இவர்களும் கஷ்டப்பட்டு, பார்ப்பவர்களையும் கஷ்டப்படுத்துவதற்கு பேசாமல் இசையில் கவனம் செலுத்தலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X