Year Ender 2024 : இந்த ஆண்டு ரீ-ரிலீஸான படங்கள்.. வசூலை அள்ளிய படம் எது தெரியுமா?

சென்னை: 2024ம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. அனைவரும 2025ம் ஆண்டை வரவேற்க தயாராக இருக்கும் இந்த நேரத்தில், 2024ம் ஆண்டில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள், சர்ச்சையான விஷயங்கள், சிறந்த படம் , சிறந்த பாடல் என அனைத்தையும் ரிவைண்ட் செய்து பார்ப்பது வழக்கம். அந்த வகையில் அந்த ஆண்டு ரீ ரிலீஸ் ஆன படத்தை பற்றி பார்க்கலாம்.

விண்ணைத் தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், தனுஷ் நடித்த த்ரி திரைப்படங்கள் ரீ ரிலீஸில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து கமல் நடித்த ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆனது. மிகபெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படத்தை இன்றைய இளம் தலைமுறையினர் பார்த்து ரசித்தனர். அதைத்தொடர்ந்து, ரஜினி நடித்த முத்து படம் வெளியானது. இதனால் பத்து இருபது வருடங்களுக்கு முன் ஹிட்டான பல படங்களை டிஜிட்டலில் மாற்றி மீண்டும் வெளியிட்டு வருகின்றனர்.

year ender 2004 re release movies 2004

கில்லி: அந்த வகையில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவான கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் திரையரங்குகளில் பட்டையை கிளப்பியது. அந்த படம் வெளியாகி 20 வருடத்திற்கு மேலான நிலையில், விஜய்யின் இன்றைய இளம் ரசிகர்கள் தியேட்டரில் அந்த படத்தை பார்த்து ரசித்தனர். கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது என தகவல் வெளியானதும், புது படத்திற்கு செய்வது போல, டிக்கெட் முன்பதிவு செய்து படத்தை பார்த்தனர். படம் திரையரங்கில் வெளியாகி ஹவுஸ்புல் காட்சிகளாக ஒடி, பாக்ஸ் ஆபிஸில் ரூ. 30 கோடி வசூல் செய்தது.

மங்காத்தா: நடிகர் அஜித்தை வேறு ஒரு கோணத்தில் காட்டிய திரைப்படம் தான் மங்காத்தா. இத்திரைப்படத்தில், த்ரிஷா,அர்ஜுன், ஆண்ட்ரியா, அஞ்சலி, பிரேம் ஜி என பலர் நடித்திருந்தனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் விநாயக் மகாதேவ் எனும் போலீஸ் அதிகாரியாக அஜித் குமார் நடித்திருந்தார்.அஜித் குமாருக்காக யுவன் சங்கர் ராஜா போட்ட மாஸ் பி.ஜி.எம். இன்றும் பிரபலம். இத்திரைப்படம் அஜித் பிறந்தநாளையொட்டி இப்படம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம் மறுவெளியீடு செய்யப்பட்டு, முதல் நாளை 10 கோடி வசூலை அள்ளியது என்று சொல்லப்படுகிறது.

அழகி: தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, விவேக், மோனிகா, உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் அழகி. பள்ளிப்பருவ காதலையும், காதலின் பிரிவையும் அழகாக சொல்லியது இப்படம் 22 ஆண்டுகளுக்கு முன் 100 நாட்களுக்கும் மேல் தியேட்டரில் ஓடி நல்ல வசூலை அள்ளியது. இப்படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். அழகி திரைப்படம் தியேட்டரில் வெளியாகி 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

குணா: சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன், ஜனகராஜ், ரேகா உள்ளிட்டப் பலர் நடிப்பில்,1991 ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'குணா'. இப்படம் வெளியாகி 33 வருடங்கள் ஆன பின்பும் இந்த படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடலை இந்த காலத்து இளசுகள் கொண்டாடி வருகின்றனர். மலையாளத் திரைப்படமான மஞ்சுமல்பாய்ஸ் படத்தில் குணா படத்தில் இருந்து வந்த கண்மணி அன்போடு காதலன் பாடல் பிரபலமானதைத் தொடர்ந்து குணா திரைப்படம் கடந்த மாதம் ரீ ரிலீஸ் ஆனது.

பருத்தி வீரன்: அமீர் இயக்கத்தில் கார்த்தி,பிரியாமணி, சரவணன், பொன்வண்னன் உள்ளிட்ட நடித்த பருத்தி வீரன் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 2007ஆம் ஆண்டு வெளியான இப்படம் 17 வருடங்கள் கழித்து கடந்த மார்ச் மாதம் வெளியானது. அதே போல, ராஜீவ் மேனன் இயக்கிய மின்சார கனவு, அஜித் நடித்த காதல் மன்னன், மயக்கம் என்ன, பையா போன்ற திரைப்படங்களும் தியேட்டரில் வெளியானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X