Year Ender 2024: ஹார்ட் டிஸ்க் காணோம் டூ 2000 கோடி பாக்ஸ் ஆபீஸ்.. வசமா சிக்கிய டாப் 5 இயக்குநர்கள்!

சென்னை: 2024ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல நல்ல படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. இந்தளவுக்கு சூப்பர் ஹிட் அடித்த படங்கள் எல்லாம் வேறு சில பெரிய இண்டஸ்ட்ரியில் கூட இந்த ஆண்டு வந்திருக்காது. அதே அளவுக்கு இந்த ஆண்டு ட்ரோல் செய்யப்பட்ட தமிழ்ப் படங்களை போல மற்ற மொழி படங்களை நெட்டிசன்கள் ரோஸ்ட் செய்து மீம் கன்டென்ட்டாக மாற்றி வச்சு செய்திருப்பார்களா என்பதும் கேள்விக்குறி தான்.

டோலிவுட் திரையுலகத்தில் இந்த ஆண்டு வெளியான கல்கி 2898 ஏடி மற்றும் புஷ்பா 2 இரு படங்களுமே மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை நடத்தின. அந்த படங்களை இயக்கிய நாக் அஸ்வின் மற்றும் சுகுமாரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

year ender 2024 shankar siruthai siva 2024

ஆனால், பல ஆண்டுகளாக பிரம்மாண்ட இயக்குநர் என கொண்டாடப்பட்ட வந்து இயக்குநர் ஷங்கர் இந்த ஆண்டு ரசிகர்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், அவரை போலவே இந்த ஆண்டு அதிகம் ட்ரோல்களுக்கு உள்ளான டாப் 5 இயக்குநர்கள் பற்றி இங்கே காணலாம் வாங்க..

ஹார்ட் டிஸ்க்கை காணோம்: நடிகர் தனுஷை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் இயக்குநராக மாறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான லால் சலாம் திரைப்படம் இதுவரை ஓடிடியில் கூட வெளியாகாத அளவுக்கு படுமோசமான தோல்வியை சந்தித்தது. மேலும், ஹார்ட் டிஸ்க்கை காணோம் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த பேட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கடுப்பில் ஆழ்த்தியது. ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் சேர்த்து வைத்த பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டை எல்லாம் அவரது மகள் போட்டு உடைத்து விட்டார் என்றும் வேட்டையன் படத்தின் வசூல் குறையவும் லால் சலாம் படத்தின் தோல்வி தான் காரணம் என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதிகளவில் இந்த ஆண்டு நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார்.

year ender 2024 shankar siruthai siva 2024
year ender 2024 shankar siruthai siva 2024

கிளைமேக்ஸே காணோம்: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியான கொட்டுக்காளி படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தில் கிளைமேக்ஸ் எங்கடா காணோம் என ஏகப்பட்ட மீம்களை போட்டு இயக்குநரை அதிகம் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இந்த படம் சர்வதேச அளவில் விருது விழாக்களில் விருதுகளை குவித்த தரமான படம் என்றும் இதை தியேட்டருக்கு சிவகார்த்திகேயன் கொண்டு வந்து அசிங்கப்படுத்தியிருக்கக் கூடாது என்று சினிமா பிரபலங்களே கடுமையாக விமர்சித்தனர். ஷேர் ஆட்டோவில் எங்க ஊரில் இருந்து தியேட்டருக்கு வந்து இந்த படத்தை பார்த்தால் நான் ஷேர் ஆட்டோவில் வந்த கதையே படமாக ஓடுதே என கிராமத்து ரசிகர்களும் இயக்குநர்களை கலாய்த்தனர்.

year ender 2024 shankar siruthai siva 2024

விஜய்க்கே விபூதி: விஜயகாந்தை வைத்து விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய ராஜதுரை படத்தை அப்படியே காப்பியடித்து விஜய்யை வைத்து 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' என ஏஐ வடை சுட்டுவிட்டார் வெங்கட் பிரபு என நெட்டிசன்கள் வெங்கட் பிரபுவை பங்கமாக கலாய்த்தனர். வெங்கட் பிரபுவே மேடை ஒன்றில் ராஜதுரை படத்தை பார்த்திருந்தால் இன்னமும் படத்தை சிறப்பாக எடுத்திருப்பேன் என்றார். கோட் படம் தியேட்டர்களில் விஜய்யின் ஸ்டார்டம் காரணமாக வசூலை அள்ளினாலும் வெங்கட் பிரபுவுக்கு அந்த படத்தால் பெரிதாக பாராட்டுக்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஹாலிவுட் படம் காப்பி, விஜயகாந்த் படத்தின் காப்பி, விஜய் தலைமுடி சரியாக இல்லை, டீ ஏஜிங் நல்லா இல்லை, கிளைமேக்ஸ் ஸ்டேடியத்தின் மேலே சண்டை என ஒவ்வொன்றையும் ட்ரோல் ஆக்கி வெங்கட் பிரபுவை ரசிகர்கள் விளாசித் தள்ளினர்.

year ender 2024 shankar siruthai siva 2024

ஷங்கர் என்றும் பாராமல்: 26 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தியன் படத்தில் இடம்பெற்ற வர்மக் கலையை இந்தியன் 2 முழுக்க வர்மக் கலையை திணித்து இயக்குநர் ஷங்கர் பண்ண பிரம்மாண்ட கிரிஞ்ச் என அந்த படத்தை எக்கச்சமாக ட்ரோல் செய்து ரசிகர்கள் சோலியை முடித்துவிட்டனர். சித்ரா அரவிந்தன் சோஷியல் மீடியா என சித்தார்த் சொன்னதுமே குபீரென தியேட்டரில் சிரித்த மீம் கிரியேட்டர்கள் அதை வைத்து ஏகப்பட்ட ட்ரோல் மீம்களை உருவாக்கி பங்கம் பண்ணிவிட்டனர். இயக்குநர் ஷங்கர் அவுட்டேட்டட் ஆகிவிட்டார் என்றும் ராம்சரணின் கேம் சேஞ்சர் பாவம் என்றும் இன்னமும் போட்டு பொளந்து வருகின்றனர்.

year ender 2024 shankar siruthai siva 2024

காதுகளை கிழித்த கங்குவா: 2000 கோடி வசூல் சாதனை படைக்கும் என படக்குழுவினர் ரிலீஸுக்கு முன்பாக சொன்னதும் சூர்யா வாயை பிளந்துக் கொண்டு பார்ப்பீர்கள் என்று பில்டப் கொடுத்ததும் சத்தமே இல்லமால் சிவா வேலை பார்ப்பதாக ஆடியோ வெளியீட்டு விழாவில் ஒவ்வொரு பிரபலங்களும் உருட்டிய உருட்டுகளை பார்த்துவிட்டு தியேட்டருக்குப் போன ரசிகர்கள் அய்யோ அம்மா என் காது போச்சேன்னு கதற ஆரம்பித்து படம் பார்க்க சென்ற தாத்தாக்கள் கூட ப்ளூ சட்டை மாறனை ஓவர்டேக் செய்த தரமான சம்பவங்கள் இந்த ஆண்டு அரங்கேறின. தலன்னு கூப்பிடமாட்டோம், கடவுளே அஜித்தேன்னு கோஷம் போட மாட்டோம். நீங்க என்ன சொன்னாலும் நாங்க கேட்டுக்கிறோம். ஆனால், அந்த சிவா மட்டும் வேண்டாம் ஏகே என ரசிகர்கள் அஜித்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு வரை பயந்துக்கொண்டே சிறுத்தை சிவாவை ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு கலாய்க்கப்பட்ட இயக்குநர்கள் எல்லாம் அடுத்த ஆண்டு தரமான சம்பவத்தை செய்து நிச்சயம் கம்பேக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

year ender 2024 shankar siruthai siva 2024

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X