Year ender 2024: இந்த ஆண்டில் அதிகமான கவனம் பெற்ற நாயகிகள்.. தமன்னா முதல் சாய் பல்லவி வரை!
சென்னை: 2024ம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் உள்ளோம். இந்த ஆண்டில் தமிழில் ஏராளமான சிறப்பான விஷயங்கள் நடந்ததை பார்க்க முடிந்தது. சிறிய பட்ஜெட் படங்கள் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததையும் பெரிய பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியான பல படங்கள் சொதப்பியத்தையும் இந்த 2024ம் ஆண்டு வெளிப்படுத்தியது.
அந்த வகையில் இந்த ஆண்டில் ஏராளமான நாயகிகள் தங்களின் கேரக்டர்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தனர். சிறிய பட்ஜெட்டில் உருவான படங்களில் நடித்திருந்தாலும் இவர்களின் கேரக்டர்கள் அதிகமான வரவேற்பையின் பெற்று பேசப்பட்டன. அந்த வகையில் இந்த ஆண்டு அதிகமான ஹீரோயின்களுக்கு சிறப்பாக அமைந்திருந்தது.

சிறப்பான நாயகிகள்: அந்த வகையில் இந்த ஆண்டில் வெளியான அரண்மனை 4 படத்தில் நடித்து தமன்னா கோலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தில் காவாலா பாடல்மூலம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றிருந்த தமன்னாவிற்கு இந்த ஆண்டிலும் அது தொடர்ந்தது. இதனிடையே மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்த மஞ்சு வாரியர், தற்போது தன்னுடைய ரீ என்ட்ரியை சிறப்பாக கொடுத்து வருகிறார். அந்த வகையில் தமிழிலும் இவருக்கு சிறப்பான படங்கள் அமைந்தன. வேட்டையன், விடுதலை 2 படங்கள் இவருக்கு தமிழில் அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளன.
கவனம் பெற்ற சாய் பல்லவி: இந்த வரிசையில் 90களின் நாயகி சிம்ரனுக்கும் இந்த ஆண்டு சிறப்பாகவே அமைந்தது. பிரஷாந்துடன் இணைந்து சிம்ரன் நடித்திருந்த அந்தகன் படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. படத்தில் கொலைகாரியாக மிரட்டினார் சிம்ரன். அடுத்ததாக நடிப்பு அரக்கி என பெயர் பெற்றுள்ள ஊர்வசி நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான ஜே பேபி படம் அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது. அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் இவர். இந்த வரிசையில் சாய் பல்லவிக்கும் இந்த ஆண்டு தமிழில் சிறப்பாகவே அமைந்தது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் படம் இந்தஆண்டு அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது.,
கம்பேக் கொடுத்த பிரியா பவானி சங்கர்: தங்கலான் படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன், பார்வதிக்கும் இந்த ஆண்டு சிறப்பாகவே அமைந்திருந்தது. சுதந்திர போராட்ட காலகட்டத்தை சொல்லும் இந்தப் படத்தில் இவர்களின் நடிப்பு அனைவராலும் பாராட்டுக்கு உள்ளானது. இந்த வரிசையில் துஷாரா விஜயனுக்கு இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. வேட்டையன், ராயன் படங்களில் லீட் கேரக்டர்களில் நடித்து வரவேற்பை பெற்ற இவர் அடுத்ததாக விக்ரம் ஜோடியாக வீர தீர சூரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் ஜனவரி ரிலீசாக வெளியாகவுள்ளது. இதனிடையே இந்த ஆண்டு பிரியா பவானி சங்கருக்கும் சிறப்பாகவே அமைந்தது. அவரது நடிப்பில் அடுத்தடுத்து டிமான்டி காலனி 2 மற்றும் பிளாக் படங்கள் வெளியாகி அவருக்கு சிறப்பான கம் பேக்கை கொடுததன.
லப்பர் பந்து பட நாயகிகள்: லவ்வர் படம் மூலம் ஸ்ரீ கௌரி பிரியா சிறப்பான என்ட்ரியை தமிழில் கொடுத்துள்ளார். முன்னதாக மாடர்ன் லவ் சென்னை ஆந்தாஜியிலும் இவர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இதனிடையே இந்த ஆண்டில் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்ற லப்பர் பந்து படத்தின் நாயகிகள் சுவாசிகா மற்றும் சஞ்சனாவும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகிகளாக மாறியுள்ளனர். இதேபோல இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படம் மூலம் நிகிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமியும் கவனத்தை பெற்றுள்ளனர். இதனிடையே சூரியுடன் கருடன் படத்தில் இணைந்திருந்த ஷிவதா மற்றும் கொட்டுக்காளி படத்தில் இணைந்திருந்த அன்னா பென் ஆகியோரும் இந்த ஆண்டில் கவனத்தை பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











