twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வேல இல்லாம சும்மா இருக்குறது எப்படின்னு நீ கத்துக்கிட்டடா... ரஜினியிடம் சிவாஜி ஏன் கூறினார் தெரியுமா?

    |

    சென்னை: நடிப்பில் உலகப் புகழ் பெற்றவர் நம்முடைய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா. இன்று வரை திரைத்துறையில் அவருக்கு மதிப்பும் மரியாதையும் குறையாமல் இருக்கிறது.

    அடுத்த தலைமுறை நடிகர்களான கமல் மற்றும் ரஜினிகாந்துடன் நிறைய படங்களில் நடித்துள்ளார். இருவரையும் தனது பிள்ளைகள் போல் பார்த்தவர் சிவாஜி. அவருடைய மகன் பிரபுவும் இருவரையும் சகோதரர்களாகவே அடையாளப் படுத்தியிருக்கிறார்.

    எம்.ஜி.ஆர், கமல் ஹாசன், ரஜினி, விஜய் என மூன்று தலைமுறை முன்னணி நடிகர்களுடனும் சிவாஜி நடித்துள்ளார். அவரைப் பற்றி ரஜினிகாந்த் ஒரு நிகழ்வில் நினைவு கூர்ந்துள்ளார்.

    கண்டக்டரா இருக்கும் போது பொண்ணுங்க பக்கத்துல தான் நிப்பேன்.. ரஜினி சொன்ன ஃபிளாஷ்பேக் ஸ்டோரி!கண்டக்டரா இருக்கும் போது பொண்ணுங்க பக்கத்துல தான் நிப்பேன்.. ரஜினி சொன்ன ஃபிளாஷ்பேக் ஸ்டோரி!

    இணைந்து நடித்த படங்கள்

    இணைந்து நடித்த படங்கள்

    ஜஸ்டிஸ் கோபிநாத், நான் வாழ வைப்பேன், படிக்காதவன், விடுதலை மற்றும் படையப்பா ஆகிய ஐந்து படங்களில் நடிகர்கள் சிவாஜி கணேசன் மற்றும் ரஜினிகாந்த் இனைந்து நடித்துள்ளனர். அதில் படிக்காதவன் மற்றும் படையப்பா படங்கள்தான் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. ஒன்றில் தம்பியாகவும் மற்றொன்றில் மகனாகவும் ரஜினிகாந்த் நடித்திருப்பார். "ஒரு கூட்டுக் கிளியாக" பாடல் இன்றும் பாசத்தை விளக்கும் பசுமையான பாடலாக கருதப்படுகிறது.

    கடைசி படம் படையப்பா

    கடைசி படம் படையப்பா

    சிவாஜி ஐயா இறப்பதற்கு முன்னர் கடைசியாக நடித்த இரண்டு படங்களில் படையப்பாவும் ஒன்று. கடைசியாக வெளி வந்த பூப்பறிக்க வருகிறோம் படத்தில் நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருப்பார். இணைந்து நடித்தது மட்டுமின்றி சிவாஜி தயாரித்த சில படங்களிலும் ரஜினி நடித்துள்ளார். ஒரு ஆண்டு திரையரங்கில் ஓடிய சந்திரமுகி திரைப்படம் கூட சிவாஜி புரொடக்ஷன்ஸ்தான் தயாரித்திருந்தது.

    சிவாஜியின் வருத்தம்

    சிவாஜியின் வருத்தம்

    90-களில் ரஜினிகாந்த் கொடி கட்டிப் பறந்தார். அப்போது அவர் நடித்த முக்கால்வாசி படங்கள் வசூலில் சாதனை படைத்தது. ஆனால் 80-களில் நடித்தது போல் இல்லாமல், ஆண்டுக்கு ஒரு படம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் என குறைவான படங்களிலேயே நடித்தார். அப்போது,"அவன் ஏன்டா இப்படி பண்றான். அவனுக்கு யாரும் எடுத்து சொல்ல மாட்டீங்களா? மார்கெட் இருக்கும்போதுதானே நெறைய படங்கள்ல நடிக்கணும்" என்று சிவாஜி பிறரிடம் ரஜினியைப் பற்றி வருத்தமாகக் கூறுவாராம்.

    பாராட்டிய சிவாஜி

    பாராட்டிய சிவாஜி

    அதன் பின்னர் ஒரு நாள் ரஜினியிடம் பேசிய சிவாஜி,"நடிக்கிற நேரத்துல நடிக்காம தியானம், இமைய மலைன்னு நீ உன் நேரத்த வீணடிக்கிறதா நா நெனச்சேன். ஆனா என்னுடன் இருந்த சண்முகம் இறந்த பிறகு எனக்கு என்ன பண்றதுன்னு தெர்ல. பணத்துக்காக நடிக்கிறதா இல்ல பேருக்காக வித்யாசமா நடிக்கிறதா. எதுவுமே தெரியாம இருக்கேன். ஆனா சும்மா இருக்குறது எப்படின்னு நீ கத்துக்கிட்ட. யார் என்ன சொன்னாலும் சரி, நீ செய்றதுதான் கரெக்ட்" என்று சிவாஜி தன்னிடம் கூறியதாக ரஜினி கூறியுள்ளார்.

    English summary
    You Learnt How to Be Idle without any work, Why Sivaji Ganesan Said this to Rajinikanth?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X