உங்கப்பா T ராஜேந்தர் கோவிச்சிக்க போறாருப்பா... சிம்புவிடம் வாலி ஏன் இப்படி சொன்னார் என்று தெரியுமா?

சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளி வந்த மாநாடு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இன்னும் சொல்லப் போனால் விக்ரம் திரைப்படத்திற்கு முன்னால் ஜென்யூனான வெற்றிப் படம் என்றால் அது சென்ற ஆண்டு வெளியான மாநாடுதான்.

தற்சமயம் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் போஸ்ட் புரடக்ஷன் ஸ்டேஜிலும், பத்து தல படம் புரடக்ஷன் ஸ்டேஜிலும், கொரோனா குமார் ப்ரீ-புரடக்ஷன் ஸ்டேஜிலும் உள்ளது. இதைத் தவிர, நடிகை ஹன்சிகா மோத்வானி நடிக்கும் மஹா திரைப்படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சிம்பு முன்னர் செய்த ஒரு காரியத்தைப் பற்றி கவிஞர் வாலி கூறியுள்ள பேட்டி ஒன்று இப்போது வைரல் ஆகியுள்ளது.

கவிஞர் வாலி

கவிஞர் வாலி

கவிஞர் வாலி அவர்கள் இறக்கும் வரையில், ஏன் இன்றும் கூட வாலிபக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர். காரணம், காலத்திற்கேற்ப, தன்னை அப்டேட் செய்து கொண்டே இருப்பார். அதனால்தான் MS விஸ்வநாதன் காலத்திலிருந்து, இளையராஜா, AR ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் வரை ஐந்து தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு அவரால் பாடல்கள் எழுத முடிந்தது.

பாடலாசிரியர் சிம்பு

பாடலாசிரியர் சிம்பு

நடிகர் சிம்பு பன்முகக் கலைஞர் என்பதும், தனித்துவமான பாடலாசிரியர் என்பதும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. குறிப்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் இவர் எழுதி பாடிய பாடல்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு. ஒரு பாடல் என்று இல்லாமல் அவர்கள் கூட்டணியில் வரும் படங்களில் மொத்த ஆல்பமும் ஹிட் ஆகும்.

லூசுப் பெண்ணே

லூசுப் பெண்ணே

அந்த வகையில் வல்லவன் திரைப்படத்தில் அவர் எழுதி, பாடி ஹிட் ஆன பாடல் தான் லூசுப் பெண்ணே. அந்தப் பாடல் வந்தபோது, வரிகளை பலர் விமர்சனம் செய்தாலும், யுவனின் மேஜிக்கால் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டது. அதில் "வாலி போல பாட்டெழுத எனக்கு தெரியலையே" என்கிற வரிகளை எழுதியிருப்பார் சிம்பு.

சிம்புவிடம் பேசிய வாலி

சிம்புவிடம் பேசிய வாலி

பாடல் வெளிவந்து மிகப் பெரிய ஹிட் ஆனதும், ஒரு முறை சிம்புவை சந்திக்க நேர்ந்த வாலி சிம்புவிடம்,"உன் தந்தை T ராஜேந்தரே நல்ல பாடல்கள் எழுதியுள்ளாரே. அவரை பாராட்டாமல் நீ என்னைப் பாராட்டி பாடல் எழுதியுள்ளாயே, அவர் கோபித்துக் கொள்ள மாட்டாரா?" என்று கேட்டுள்ளாராம். அதற்கு, அந்தப் பாடலை தன் தந்தையிடம் போட்டுக் காண்பித்தபோது, உங்கள் பெயரை பயன்படுத்தியதற்காக என்னை பாராட்டினார். கோபித்துக் கொள்ளவில்லை என்று சிம்பு கூறினாராம். தன் மீது சிம்பு அவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்று அந்தப் பேட்டியில் வாலி நெகிழ்ந்து பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X