'வாங்கம்மா வாங்கப்பா வாங்கண்ணே வாங்கத்தே வா மாமா...'
சென்னை: வானவராயன் வல்லவராயன் படத்தில் இடம் பெறும் ஒரு கல்யாணப் பாட்டு இனி அனைத்து திருமணங்களிலும் ஒலிக்கப் போகிறது என்கிறார் படத்தின் இயக்குநர்.
ஸ்ரீ தேவர் பிக்சர்ஸ் ஆர்.ஐயப்பன் வழங்க மகாலஷ்மி மூவீஸ் கே.எஸ்.மதுபாலா தயாரிக்கும் படம் "வானவராயன் வல்லவராயன்". இந்த படத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார்.

மோனல் கஜ்ஜார்
கதாநாயகியாக மோனல் கஜ்ஜார் நடிக்கிறார். சந்தானம், சௌகார் ஜானகி, சரண், தம்பி ராமைய்யா, கோவை சரளா , ஜெயப் பிரகாஷ், மீரா கிருஷ்ணா, பிரியா, ஆகியோரும் நடிக்கிறார்கள்.

யுவன் இசையில்...
சினேகன் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கே எஸ் மதுபாலா தயாருக்கும் இந்தப் படத்துக்கு கதை , திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜமோகன்.

அண்ணன் தம்பி பாசம்
படம் குறித்து ராஜ்மோகன் கூறுகையில், "அண்ணன் தம்பி பாசம்தான் கதையோட்டம்...அதை காமெடியாக சொல்கிறோம் படம் ஆரம்பம் முதல் கடைசிவரை காமெடிதான்.

வாங்கம்மா ....வாங்கப்பா
திருமண மண்டபங்களில் "மணமகளே மருமகளே வா வா" என்ற பாடல் மட்டுமே ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இனி வானவராயன் வல்லவராயன் படத்தில் இடம் பெறும் வாங்கம்மா ....வாங்கப்பா வாங்கண்ணே ....வாங்கத்தே வா மாமா.....என்ற உறவுகள் அனைவரையும் கல்யாணத்திற்கு அழைக்கும் பாடலும் கேட்க ஆரம்பிக்கும்.

தினசரி ரூ 50 ஆயிரத்துக்கு பூக்கள்
இந்த பாடல் காட்சி ஒரு திருமண மண்டபத்தில் படமாக்கப் பட்ட போது அலங்காரத்திற்காக தினமும் 50,000 ரூபாய் செலவில் பூக்கள் வாங்கப்பட்டு திருமண மேடை அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. பூ வாங்க மட்டும் ரூ 2,50,OOO செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர்.
நடிகர் கிருஷ்ணா கோவை பாஷையை முறைப்படி பயிற்சி எடுத்து பேசி அசத்தி இருக்கிறார்," என்கிறார் இயக்குனர் ராஜமோகன்.


Click it and Unblock the Notifications











