இவரு ஒரு ஸ்டைல் கிங்.. எப்பவுமே இப்படி தான்.. செல்வராகவன் சொன்ன யுவன் சீக்ரெட்!
சென்னை: தனுஷ், ஷெரின் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் பணியாற்றினார் செல்வராகவன்.
அதன் பிறகு காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, என்று அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்தார் இயக்குனர் செல்வராகவன்.
செல்வராகவன் இயக்குனராக அறிமுகமான காதல் கொண்டேன் 7ஜி ரெயின்போ காலனி புதுப்பேட்டை போன்ற பல படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. தற்போது யுவனை பற்றிய சீக்ரெட்டை பகிர்ந்துள்ளார் செல்வராகவன்.

பல படங்கள்
சென்ற ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை, செல்வராகவனின் ஆரம்பகாலத்தில் இயக்கிய பல படங்களில் ஒன்றாக பணியாற்றிய யுவன் சங்கர் ராஜா, இருவரும் தற்போது வரை நல்ல நண்பர்களாகவே இருக்கின்றனர் . யுவன் இசையமைத்த செல்வராகவனின் அனைத்து படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

நடிப்பில் அசத்தல்
செல்வராகவன் ஒரு இயக்குனராக மட்டுமில்லாமல், நடிகராகவும் மிரட்டி வருகிறார். பீஸ்ட் படத்திலிருந்து சாணி காகிதம் படம் வரை இவரின் நடிப்பு அபாரமாக இருந்தது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற அனைத்து படங்களும் தனுஷின் கேரியருக்கும், முக்கியமாக அமைந்தது.

சுவாரஸ்யமான தகவல்
சமீபத்தில் செல்வராகவன் நடிப்பில் வெளியான சாணி காகிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது இப்படத்தை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன். சங்கையா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த செல்வராகவன் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா பற்றி செல்வராகவன் கூறிய சில விஷயங்கள் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

ஸ்டைல் கிங்
யுவன் ஷங்கர் ராஜா புது ட்ரெண்டில் என்னலாம் இருக்கிறதோ அதை அனைத்தையும் அவர் வாங்கி விடுவார், யுவன் சங்கர் ராஜா ஒரு ஸ்டைல் கிங், சூஸ், ஜாக்கெட், வாட்ச் அனைத்தும் ட்ரெண்டுக்கு ஏற்றவாறு இருக்கும் என்று யுவன் சங்கர் ராஜா பற்றி செல்வராகவன் கூறியுள்ளார். இது குறித்து யுவன் சங்கர் ராஜா கூறுகையில்," எனக்கு பொருட்கள் மீது ஆர்வம் அதிகம் மார்க்கெட்டில் புதுசாக பிராண்ட் ஏதாவது வந்தால் உடனே அதை வாங்க வேண்டும் என்று நான் யோசிப்பேன். என் மனைவியும் காஸ்ட்யூம் டிசைனர் அவரும் விதவிதமாக எனக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்து கொடுக்கிறார். அதனால் புதுப்புது டிசைன்களை நான் தேர்ந்தெடுத்து அணிகிறேன் என்று யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











